குறுந்தொகைப் பாடலில் ஒரு புதிர் , ஒரு கதை (Post No.8045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8045

Date uploaded in London – 26 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறுந்தொகைப்  பாடலில்  ஒரு புதிர் , ஒரு கதை

சங்க இலக்கியம் என்பது 18 நுல்களைக் கொண்டது. அதை பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்று இரண்டு நூல்களாகத் தொகுத்துள்ளார். இதில் குறுந்தொகையில் குட்டிக் குட்டிப் பாடலாக இருக்கும். இதனால் இதற்கு குறுந்தொகை என்று பெயர். அதிகபட்சம் 8 வரிகள்தான். அதற்குள் நிறைய விஷயங்களைச் சொல்லி விடுவார்கள். எல்லாம் செக்ஸ் SEX , குடும்ப வாழ்க்கை பற்றிய பாடல்கள். இதில் 225 ஆவது பாடலில் ஒரு புதிர், ஒரு கதை வருகிறது.

கன்று தன் பய முலை மாந்த முன்றில்

தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!

கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்

வீறு பெற்று மறந்த மன்னன் போல

நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் க்

கலி மயிற் கலாவத்தன்ன  இவள்

ஒலி மென் கூந்தல் உரியவாம் நினக்கே

— கபிலர், பாடல் 225, குறுந்தொகை

பொருள்

உன் நாடு பெரிய மலைகள் உடைய நாடு. அங்கே உன் வீட்டின் முன்னால் இருக்கும் தினைப் பயிரை பெண் யானை மேய்ந்து கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் அதன் பாலை , குட்டி யானை குடித்துக் கொண்டு இருக்கிறது . (நீ பொருள் ஈட்டச் செல்கிறாய்). செய்த உதவியை , அரசு கட்டில் ஏறிய பின்னர் மறந்து போன மன்னன் போல நீ செய் நன்றி மறந்து திருமணம் செய்வதை தாமதித்தாலும்  கூட,  இந்த தலைவியின் ஆரவாரிக்கும் மயில் தோகை போன்ற மெல்லிய  கூந்தல் உனக்கே உரியது — என்று தோழி கூறினாள்

பொதுவாக,  நன்றி மறக்காவிட்டால் இவள் உனக்குக் கிடைப்பாள் என்று தோழி கூறுவாள் என்று நாம் எதிர் பார்ப்போம் . ஆனால் ‘நன்றி மறந்தாலும்’ என்று கூறுவதன் உட்கருத்து நன்றி மறந்து விடாதே என்பதாகும் .

மேலும் நீ பொருள் ஈட்டச் செல்வதால் கால தாமதம் ஏற்படக்கூடும் என்பது தலைவிக்குத் தெரியும் ; எப்படி யானை தன்  குட்டிக்குப் பால் கொடுக்கும்போதே அதற்கான சத்துணவை மேய்ந்து கொண்டு இருக்கிறதோ அது போல நீயும் பொருள் ஈட்டுவது பிற் காலத்தில் குடும்பம் நடத்தத்தான் என்பது தெரியும் என்று உரைகாரர்கள் விரித்துரைப்பர் 

ஆனால் , “அரசு கட்டில் ஏறிய பின்னர் நன்றி மறந்த மன்னன் போல” , என்று திடீரென்று காதல் பாட்டில், ஒரு வரியை தோழி பயன்படுத்துகிறாள் . இது தனி மனிதனைப் பற்றிச் சொல்லி இருந்தால் நம் வாழ்க்கையில் பார்த்த பல  செய்நன்றி மறந்த ஆட்கள் நம் நினைவில் நிழல் ஆடும். . ஆனால் தோழியோ 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மன்னன் பற்றிப் பேசுகிறாள். அந்தக் காலத்தில் இந்த உவமையின் பின்னுள்ள கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உரைகாரர்கள் உரை எழுதிய 600, 700 ஆண்டுகளுக்கு முன்னரும் கூட  இக்கதை தெரிந்திருந்தது போலும். இன்று வரை எவரும் அக்கதையைச் சொல்லாமல் உரையை அப்படியே எழுதிச் சென்றுவிட்டனர் !!!

ஜாதகக் கதையும் துரோணர் கதையும்

சென்னை பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவி வகித்த பேரறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளை 75 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட இலக்கிய உதயம் நூலில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு , ஒரு ஜாதகக் கதையை எழுதி, ஒரு வேளை இந்தக் கதையாக இருக்கலாம் என்கிறார். . புத்தரின் பூர்வ ஜென்மம் பற்றிக் கூறும் 500 கதைகளை ஜாதகக் கதைகள் என்பர் . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பாலி மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இந்தியா , இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து , கம்போடியா முதலிய நாடுகளில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.. இந்தப் பாடலுக்குப் பொருத்தமான கதை இதுதான் —

மூர்க்கன் என்ற இளவரசன் ஒருவன் இருந்தான். மூர்க்கன் என்ற பெயருக்கேற்ற வாறு கொடியவன்; கண்ணில் மண் உறுத்துவது போல எல்லோர் வாழ்விலும் உறுத்தலாக நின்றவன். இவனை எப்பொழுது தீர்த்துக் கட்டலாம் என்று எண்ணியிருந்த மந்திரிகள், சேவகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு கிட்டியது. ஒரு நாள் மூர்க்கன் , ஆற்றில் குளிக்க ஆசைப்பட்டான். எல்லோரும் அவனை அழைத்துச சென்று நதியில் குளிக்கையில் ஒரே அமுக்காக அமுக்கி ஆற்று வெள்ளத்தில் விட்டுவிட்டனர்.

அவனுடைய அதிர்ஷ்டம் ஒரு மரக்கொம்பைப் பிடித்து உயிர் தப்புகிறான். அவனுடன் ஒரு கிளி, எலி, பாம்பு ஆகியனவும் அந்த மரத்தில் ஏறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. ஒரு துறவி மிகவும் பரிதாபப்பட்டு 4 உயிர்களையும் காப்பாற்றி வீட்டிற்குக் கொண்டு வந்து முதலில் எலி, கிளி, பாம்பு ஆகியவற்றுக்கு முதலுதவிச்  சிகிச்சை செய்துவிட்டு மூர்க்கனுக்கும்  சிகிச் சை செய்து காப்பாற்றிவிட்டார் . அவனுக்கோ அதி பயங்கரக் கோபம் .அவன் அரசன் ஆனவுடன் துறவியைப் பிடித்து வந்து வளா ரினால் சவுக்கடி கொடுத்தான் . ஒவ்வொரு அடி கொடுக்கும் போதும்  அந்தத் துறவி , “மனிதனுக்கு உதவி செய்வதைவிட மரக்கட்டைக்கு உதவி செய்வதே மேல்” என்று கவி பாடினார். கூடியிருந்த மக்கள், அதன் பொருளைக் கேட்டபோது, நதியில் நடந்த சம்பவங்களைத் துறவி எடுத்துரைத்தார் ; உடனே மக்கள் அனைவரும் சேர்ந்து மூர்க்கனை அடித்துக் கொன்றுவிட்டு துறவியை அரசன் ஆக்கினர். பின்னர் விசாரித்ததில் பாம்பு, கிளி, எலி ஆகிய மூன்றும் துறவிக்கு நன்றிக் கடன் செலுத்தியதையும் மக்கள் அறிந்தனர் .

****

என் கருத்து

2300 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான ஜாதகக் கதைகளில் புத்த குருமார்கள் , வலிய புத்தர் பெயரைப் புகுத்தி கதை எட்டுக்கட்டினர் . ஆகையால் அதற்கு முன்னரே இந்தக் கதை பிரசித்த மாயிருக்கலாம். ஆயினும் இதைவிட மக்கள் நன்கு அறிந்தது மஹாபாரதக் கதை என்பது சங்க இலக்கியத்தில் நன்கு தெரிகிறது; ஆகையால் துரோணர் கதையையே  கபிலர் சொல்லி இருப்பார் என்று நான் நினைக்கிறேன் அவர் ஒரு பார்ப்பனப் புலவர் ; சங்க இலக்கியத்தில் அதிகமான கவிதை இயற்றி முதலிடம் பிடித்தவர் ; “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று பலராலும் போற்றப்பட்டவர் ; தமிழைக் கிண்டல் செய்த பிருஹத் தத்தனை அழைத்து, அவனுக்கு சம்ஸ்க்ருதம் மூலம் தமிழைக் கற்பித்து அவனையும் தமிழ்க் கவிபாட வைத்து அந்தப் பாடலையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தவர் கபிலர் .

துரோணர் கதை என்ன ?

சிறு வயதில் துரோணரும் பாஞ்சால / பஞ்சாப் மன்னன் ப்ருஷாதாவின் மகன் துருபதனும் அக்நிவேஷ என்ற ரிஷியிடம் பாடம் பயின்றனர் ; பிற்காலத்தில் துருபதன் மன்னன் ஆனான். துரோணாரோ ஏழைப் பிராமணனாக வாழ்ந்து கஷ்டப்பட்டார். பழைய நட்பை மனதிற்கொண்டு, மன்னன் துருபதனிடம் சென்று உதவி கேட்டார். அவனோ உதவி செய்ய மறுத்து அவரை அலட்சியம் செய்தான் . இதன் பின்னர் துரோணருக்கும்  நல்ல காலம் வாய்த்தது. அவர் மாபெரும் குரு வம்ச அரசர்களுக்கு ஆசிரியர் ஆகி பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பாடம் கற்பித்தார் .

படிப்பு முடிந்தவுடன் என்ன குரு தக்ஷிணை வேண்டும்? என்று பாண்டவர்கள் கேட்டனர். ; துருபதனைத் தோற்கடித்து அழைத்து வாருங்கள் என்று சொன்னார். அர்ஜுனன் பஞ்சாப்  சென்று துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து வந்தான் ; அன்று சிறு உதவி கூட செய்ய மறுத்தவன் , விடுதலை வேண்டி பாதி ராஜ்யத்தைத் தருவதற்கு ஒப்புக்கொணடான். இதன் மூலம் பாதி பஞ்சாப் துரோணர் ஆடசியின் கீழ் வந்தது . ஆக நன்றி மறந்த துருபதன் கதையையே கபிலர் பாடல் சொல்கிறது என்பது என் கருத்து.

வாழ்க தமிழ்

tags- குறுந்தொகை, ஒரு புதிர் , ஒரு கதை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: