
Post No. 8052
Date uploaded in London – 27 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குட்டிக்கதை- கழுதைப் பிரம்மச்சாரி
பலரும் குடும்ப பாரத்தைப் பொறுக்கமுடியாமலோ அல்லது ஏற்க பயந்தோ அல்லது வாழக்கையில் நடந்த சோகம் காரணமாகவோ புத்த மாதத்தில் சேர்ந்தனர்.
கீழேயுள்ள புத்த மதக் கதை தம்ம பத , ஜாதகக் கதைகளின் வியாக்கியானப் பகுதியில் வருகிறது. புத்தகோஷர் என்ற கயா நகர பிராமணன் இதை எழுதி இருக்கலாம். அவர் புத்த மதத்துக்கு மாறிய பின்னர் சம்ஸ்க்ருதத்தில் நிறைய எழுதினார்.
“ஒரு வணிகன் வாரணாசியிலிருந்து தட்சசீலத்துக்கு மட்பாண்டங்களை விற்கப் போனான். அவன் ஒரு ஆண் கழுதையின் மீதும் பொருட்களை ஏற்றிச் சென்றான். அவன் வியாபாரம் செய்து கொண்டிருக்கையில் ஆண் கழுதை மேயப்போனது . அப்போது அதைச் சந்தித்த பெண் கழுதை , அடக் கடவுளே, எவ்வளவு தூரத்துக்கு நீ பெரிய பாரத்தைச் சுமந்து வந்திருக்கிறாய், என்ன கொடுமை என்று பரிந்து பேசியது. அதாவது கிணற்றடி ஊர்வம்பு.
ஆண் கழுதைக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. நான் உன்னுடன் வாரணாசிக்குத் திரும்பி வரமாட்டேன் என்று ‘ஸ்டிரைக்’ செய்தது. அவனுக்கு என்ன நேரிடப் போகிறது என்று வேடிக்கை பார்க்க, ஊர் வம்பு பேசிய பெண் கழுதையும் அருகில் வந்தது.
வியாபாரிக்குப் பெண் கழுதையின் விஷமம் புரிந்தது. ஓஹோ, இது பெண்ணாசையால் இது இப்படிப் பிதற்றுகிறது என்று யூகித்து ஒரு தந்திரம் செய்தான் . நீ வாரணாசிக்குத் திரும்பி வா. உனக்கு அழகான பெண் கழுதையைக் கல்யாணம் கட்டித் தருவேன் என்று ஆசை காட்டினான் . இதனால் ஆனந்தம் அடைந்த ஆண் கழுதை அவனுடன் வாரணாசிக்குத் திரும்பிச் சென்றது.
சில நாட்கள் சென்றன. ஆண் கழுதை எஜமானனின் வாக்குறுதியை நினைவுகூர்ந்தது . உடனே வணிகனும் , இதில் இரண்டு பேச்சுக்கு இடமேயில்லை. இதோ கல்யாணத்தை முடித்து வைக்கிறேன். ஆனால் ஒன்று. இதோ பார் . நீ என் வேலைக்காரன் ; உனக்கு மட்டும்தான் நான் தினமும் உணவு கொடுப்பேன். உன் மனைவிக்கு நீதான் உணவு தேடித் தரவேண்டும்; நாளைக்கு குழந்தை குட்டிப் பெற்றுக் கொண்டால் அதுவும் உன் பொறுப்பு – என்று செட்டியார் போலக் கறாராகப் பேசினான் வணிகன். நீ எல்லாவற்றையும் யோசித்துப் பார் – என்றான்.

MY COMMENTS
கழுதை இதைக் கேட்டு பயந்தே போனது. Oh My God ‘ஓ மை காட்’ , இந்த குடும்ப பாரத்தை சுமந்து எனக்குப் பழக்கமில்லை . உங்கள் சரக்கு பாரத்தை சுமப்பதே போதும் ; கல்யாணமும் வேண்டாம் ; கத்தரிக்காயும் வேண்டாம் என்று சொல்லிவிட்டது” .
இதை வேடிக்கை கதை என்பதைவிட அக்கால புத்த விஹாரங்களின் உண்மை நிலை என்றே நான் நினைக்கிறேன். வெற்று ச் சோற்றுக்கு அலையும் சோம்பேறித் தடியன்களும் மடத்தில் சேர்ந்து ‘மடத்தடியன்’களாக மாறிய கதை இது.
சங்கம் சரணம் கச்சாமி
வாழ்க புத்தன் ; வளர்க சங்கம்
