ஹிந்தி படப் பாடல்கள் – 49 – வாழ நினைத்தே வாழ்வோம்! (Post No.8051)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8051

Date uploaded in London – – – 27 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 49 – வாழ நினைத்தே வாழ்வோம்!

R. Nanjappa

வாழ நினைத்தே வாழ்வோம்!   உலகம் என்பது என்ன? இங்கு எப்படி வாழவேண்டும்? இதை விளக்கத்தான் பல மதங்கள், தத்துவங்கள் முயற்சிக்கின்றன. பல ஞானிகளும் பெரியோர்களும் வாழ்ந்து காட்டி விளக்கியிருக்கிறார்கள். உலகம் அவர்களைப் போற்றிக் கும்பிடுகிறது, பின் தன் வழியிலேயே போகிறது. இதைப் புரிந்து கொள்வது கடினம், ஏன் புரிந்துகொள்ள வெண்டும்? நீயும் உலகத்தின் போக்கோடு செல் என்பது ஒருவகை  சித்தாந்தம்.

அமெரிக்க கவிஞர் Ella Wheeler Wilcox (1850-1919,),   The Way of The World என்று ஒரு கவிதை எழுதினார்.     The Way of The World 1884 Laugh, and the world laughs with you,
    Weep, and you weep alone ;
For the brave old earth must borrow its mirth,
    It has troubles enough of its own.
Sing, and the hills will answer,
    Sigh ! it is lost on the air ;
The echoes rebound to a joyful sound,
    But shrink from voicing care.
Rejoice, and men will seek you,
    Grieve, and they turn and go ;
They want full measure of all your pleasure,
    But they dont want your woe.
Be glad and your friends are many,
    Be sad and you lose them all ;
There are none to decline your nectard wine,
    But alone you must drink lifes gall.
Feast, and your halls are crowded ;
    Fast, and the world goes by ;
Succeed and give and it helps you live,
    But no man can help you die,
There is room in the halls of pleasure
    For a long and lordly train ;
But one by one we must all file on
    Thro the narrow aisles of pain.
 
 A long and lordly train –


இதை “காரவான்” என்று ஹிந்தி/உர்துவில் சொல்வார்கள்.  சிறு சிறு குழுக்கள் சாரிசாரியாகச் செல்வது!. உலகம் அப்படிப் போய்க்கொன்டிருக்கிறது. ‘இது எங்கு போகிறது என்று கேட்காதீர்கள்- நாமும் சேர்ந்து போகவேண்டும், பின் தங்கி விடக்கூடாது’ என்று ஒரு கருத்து! இதோ, இந்தக் கருத்தில் ஒரு பாடல்.     யே ஹன்ஸ்தா ஹுவா காரவான்   [Ye Hansata Hua Karavan Zindagi KaNa Poocho Chala Hai KidharTamanna Hai Ye Saath Chalte RaheHam Na Beete Kabhi Ye Safar] – [2]Wah Wah Hmm Hmm Hmm

Hmm]

சிரித்து மகிழ்ந்து செல்லும் இந்த ‘வாழ்க்கை” என்னும் பயணிகள் குழு சாரிசாரியாக எங்கு செல்கிறது? ஓ அதைக் கேட்காதே நாமும் அதனுடன் சேர்ந்து செல்லவேண்டும் என்பதே ஆசை! இந்தப் பயணத்தில் நாம் பின் தங்கிவிடக் கூடாது!  

Zameen Se Sitaro Ki Duniya Mein Jaaye Ha HaWahan Bhi Yahi Geet Ulfat Ke Gaye AchhaZameen Se Sitaro Ki Duniya Mein JaayeVahan Bhi Yahi Geet Ulfat Ke GayeMohabbat  Ki Duniya Ho Gham Se BegaanaRahe Na Kisi Ka Bhi Dar Ajee Dar KaisaYe Hansata Hua Karvan Zindagi Ka…….  

இந்த பூமியை விட்டு, அந்த தாரகைகளின் உலகிற்குச் செல்வோம்! அங்கும் இதே காதல் கீதத்தை இசைப்போம்! அந்த அன்பான உலகம் துக்கம் இல்லாமல் இருக்கட்டும்! யாரிடமிருந்தும் பயம் இல்லாமல் இருக்கட்டும்!  

Bahaaron Ke Din Ho Jawaan Ho Najare Aha Ha HaHaseen Chandni Ho Nadee Ke Kinare, Kya Baat HaiNa Aaye Jahan Bhool Kar BadnasibeeBanaaye Wahi Apna Ghar Na Na NaYe Hansata Hua Karavan Zindagi KaNa Poocho Chala Hai KidharTamanna Hai Ye Saath Chalte RaheHam Na Beete Kabhi Ye Safar  

எப்பொழுதும் அங்கு வசந்தம் நிலவட்டும்! காட்சிகள் என்றும் இளமையாக இருக்கட்டும்! அழகிய நதிக்கரையில் இனிமையான நிலவொளி வீசட்டும்! எந்த இடத்தில் தப்பித் தவறியும் துரதிருஷ்டம் வராதோ அந்த இடத்தில் நாம் வீடு கட்டி இருப்போம்! உலகம் சிரித்து மகிழ்ந்து எங்கு போகிறது?  

Song: Ye Hanstahua karavan zindagi  Film: Ek Jhalak 1957 Lyrics: S.H.Bihari Music: Hemant Kumar Singers: Hemant Kumar & Asha Bhonsle YouTube link: https://www.youtube.com/watch?v=0K3yhNy0Grs    

ஹேமந்த் குமாரின் இனிய இசை, இனிய குரல்! உற்சாகமூட்டும் பாடல்! அமெரிக்காவில் ஒருவர் பாடி ஒரு பாட்டு பிரபலமாகிவிட்டால், வேறு பல முன்னணிக் கலைஞர்களும் இசைக்குழுக்களும் அந்தப் பாட்டைப் பாடும்/இசைக்கும். இவற்றை “Version Song” என்று சொல்வார்கள். இந்த முறையை இந்தியாவில் கொண்டு வர முயன்றார்கள்- வெற்றியடையவில்லை! இந்த ஹேமந்த் குமார் பாட்டை முகேஷையும் பாட வைத்தார்கள் (தனியாக-சினிமாவில் அல்ல). அதுவும் நன்றாகவே அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.  

அதற்கான YouTube link:https://www.youtube.com/watch?v=3lYcliQ86KU இதையும் கேட்டு மகிழுங்கள். இரண்டிற்கும் வீடியோ இல்லை.    

ராஹி தூ மத் ருக் ஜானா   ஹேமந்த் குமாரின் குரலிலேயே இன்னொரு அரிய பாட்டைக் கேட்போம்: அதுவும் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டும் பாடல்.


Raahi tu mat ruk jaanaa, toofan se mat ghabaraana  Kabhi to milegi teri manzil  
Kaheen door gagan ki chhaon mein   பயணியே, நீ வழியில் நின்றுவிடாதே புயலைக்கண்டு அஞ்சாதே! உன்னுடைய இலக்கு என்றோ ஒரு நாள் கிடைத்துவிடும் எங்கோ- தூரத்தில் இந்த வானத்தின் கீழே!       

Maana ki gahari hai dhaara   Par hai kaheen to kinaara  Tu bhi mila aasha ke sur mein   Man ka ye ekataara   Kabhi to milegi teri manzil   Kaheen door gagan ki chhaon mein   நீரின் ஓட்டம் ஆழமாக இருக்கிறது- என்பது தெரியும் ஆனால் கரையும் தான்  இருக்கிறதே! ஆசை என்னும் ஸ்வரத்தில் நீயும் உன் மனதின் வீணையைக் கூட்டு! உன்னுடைய இலக்கு என்றோ ஒரு நாள் கிடைத்துவிடும்!


Hote hain mausam ke phere
Raaton ke sang hain savere
Jaake agar lauti hain saansein
Lautenge phir din tere
Jaake agar lauti hain saansein
Lautenge phir din tere
Kabhi to milegi teri manzil
Kahin door gagan ki chhaon mein
Kahin door, kahin door
Kahin door, kahin door, kahin door
   

பருவ காலங்கள் மாறிமாறி வருகின்றன இரவோடு காலையும் வருகிறது விட்ட மூச்சு திரும்பி வந்தால்- உனக்கும் இன்னொரு நாள் வந்துவிடும்! உன்னுடைய இலக்கை என்றோ ஒரு நாள் நிச்சயம் அடைவாய்! அது எங்கோ தூரத்தில் இருந்தாலும் உன் இலக்கு வந்துவிடும்!  

Sabaka hai ooparavaala   Sabako usi ne sambhaala   Jab bhi ghire gam ka andhera   Usane kiya ujiyaala   Kabhi to milegi teri manzil   Kaheen door gagan ki chhaon mein    

நம் எல்லோருக்கும் மேல் இறைவன் இருக்கிறான் அவரே அனைவரையும் காத்துவருகிறார் துன்பம் என்னும் இருள் கவிந்தபோது- அவரே ஓளி வீசச் செய்தார்! இந்தப் பரந்த வானத்தின் கீழே என்றோ ஒரு நாள் உன் இலக்கு கிடைத்தே தீரும்!  

Song: Rahi Tu Mat Ruk Jana Film: Door Gagan Ki Chaon mein 1964 Lyrics: Shailendra Music; Kishore Kumar   Singer: Hemant Kumar YouTube link:  https://www.youtube.com/watch?v=ihO0cLXtUJ0    இந்தப் பாடல் படத்தில் மூன்று பகுதிகளாக வருகிறது. கிஷோர் குமாரின் இசையில் ஹேமந்த் குமார் பாடியது! ஷைலேந்த்ராவின் அருமையான கவிதை. நல்ல கவிஞன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் சொற்களைச் சொல்லவேண்டும்! இது கிஷோர்குமாரின் சொந்தப் படம். அவர் மகன் அமீத்குமாரையும் இதில் நடிக்க வைத்தார் அவரே இயக்கியது.அருமையான பாடல்கள்.   இது The Proud Rebel (1958) என்ற ஆங்கிலப்படத்தின் கதையைத் தழுவியது. பார்க்க வேண்டிய நல்ல படம். இசையையாவது கேட்டு மகிழ்வோம்.  

Kishore Kumar was a creative artiste, multi-faceted genius. Many people may not know that during the Emergency (1975-77), he was asked to attend and perform in a Congress rally. He refused. Sanjay Gandhi banned his songs on the Radio and Door Darshan. Kishore Kumar did not care and did not budge. 

  Attachments area Preview YouTube video yeh hansta hua carvan zindagi ka-Ek Jhalak yeh hansta hua carvan zindagi ka-Ek Jhalak Preview YouTube video ye hansta hua karwan by mukesh a version song ye hansta hua karwan by mukesh a version song Preview YouTube video Rahi tu mat ruk jana..Kishore Kumar_Shailendra_Himant kumar..a tribute      

tag- ஹிந்தி படப் பாடல்கள் – 49
to be continued…………………………
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: