
Post No. 8058
Date uploaded in London – – – 28 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 50 – குழந்தைகளுக்குப் பாட்டு!
R. Nanjappa
குழந்தைகளுக்குப் பாட்டு!
குழந்தைகள் ஒரு படத்தில் வந்தால் விருவிருப்பு கூடும். அவர்களை மையமாக வைத்து
கதை ஓடும்.
அவர்களால் ஒரு முக்கிய திருப்பம் கதையில் வரும்.
2002ல் Tom Hanks நடித்த Road to Perdition என்ற படம் வந்தது. இதில் அவர் மகனாக
நடிக்கும் பையன், “அப்பா, நீ என்ன வேலை செய்கிறாய்” என்று கேட்பான். ஒரு தாதா
கும்பலில் இருக்கும் அவரால் பதில் சொல்ல முடியாது! அவர் வாழ்க்கையே மாறிவிடுகிறது!
1956ல் The Man Who Knew Too Much என்ற Alfred Hitchcockக்கின் படம் வந்தது.
இதிலும் ஒரு பையன்– அவனை வைத்து கதையில் ஒரு திருப்பம்! அதற்கு ஒரு பாட்டு!
When I was Just a little girl
When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty
Will I be rich
Here’s what she said to me
Que será, será
Whatever will be, will be
The future’s not ours to see
Que será, será
What will be, will be
When I grew up and fell in love
I asked my sweetheart, what lies ahead
Will we have rainbows
Day after day
Here’s what my sweetheart said
Que será, será
Whatever will be, will be
The future’s not ours to see
Que será, será
What will be, will be
Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome
Will I be rich
I tell them tenderly
Que será, será
Whatever will be, will be
The future’s not ours to see
Que será, será
What will be, will be
Que será, será
Song: When I was just a little girl Film: The Man Who Knew Too Much 1956
Lyrics: Ray Evans & Jay Livingston Music Composer : Jay Livingston
Singer: Doris Day
Youtube link: https://www.youtube.com/watch?v=3FKA-3uRdQY
There are dozens of cover versions. Our own Bhanumathi has also sung!
link for Bhanumathi’s song: https://www.youtube.com/watch?v=P3-ehVA4mTY
எளிய பாடல்! இது உலகம் முழுவதும் மிகப் பிரபலமடைந்தது! இதன் பின்னாலும் ஒரு
கதை!
இதை இப்படத்தில் டோரிஸ் டே பாடுகிறார். அவரை ஹீரோயினாகப் போடுவதற்கு
ஹிட்ச்காக்கிற்கு இஷ்டமில்லை–அவர் ஒரு பாடகிதான், வேண்டாம் என்றார். ஆனால்
பட நிறுவனத்தின் ஏஜெண்டுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் கட்டாயம் வேண்டும்
என்றனர். அப்படியானால் அவருக்கு ஒரு பாட்டு வேண்டும், அதில் ஏதாவது
ஆங்கிலமில்லாத சொல் இருக்கவேண்டும் என்றார் ஹிட்ச்காக்!
அதன்படி பாட்டு எழுதிய இவான்ஸ்–ஆர்ம்ஸ்ட்ராங்க் ஜோடி Que Sera, Sera என்ற
Spanish சொற்களைச் சேர்த்தனர். (இது எந்த மொழி என்பதைப் பற்றி பெரிய ஆராய்ச்சியே
நடந்திருக்கிறது) இது குழந்தைகள் பாட்டு போல் இருக்கிறது, பாடமாட்டேன் என்று
டோரிஸ் டே சண்டித்தனம் செய்தார். கடைசியில், “ஒரே ஒரு டேக் தான்,
எடுத்து கொள்ளுங்கள்” என்று சொல்லி ஒரே ஒருமுறை பாடினார்! இது உலகப் புகழ்
பெற்றது! டோரிஸ் டேவின் மிகச்சிறந்த பாட்டாக– அவருடைய அடையாளப் பாட்டாகக்
கருதப்படுகிறது!
இந்தப் பாட்டு உலகப் புகழ் பெற்றாலும், கத்தோலிக்க மதகுருக்கள் இதற்கு எதிர்ப்பு
தெரிவித்தனர். கத்தோலிக்கர்கள் இதை பாடக்கூடாது என்றனர். புகழ்பெற்ற எழுத்தாளர்
பிஷப் Fulton Sheen இதை எதிர்த்து எழுதினார். [நான் கத்தோலிக்கக் காலேஜில் 6
வருஷம் படித்தவன், இதை நேரடியாக அறிவேன்.] காரணம்? இது விதியில் (Fatalism)
நம்பிக்கை வளர்க்கிறது என்றார்கள். நல்ல வேளை! உலகம் முழுதும் கத்தோலிக்கர்
இல்லை! கடைசியில் அவர்களும் சட்டை செய்யவில்லை. இந்தப் பாட்டு இன்றும்
பிரபலம் தான்! சொல்லால் விளக்கமுடியாத உண்மை ஒன்று இதில் புதைந்திருக்கிறது!
நாம் உணர்கிறோம்! Whatever will be, will be–ஆருயிர் முறைவழிப் படூஉம்!
உலகெங்கிலும் மக்கள் மனதைத் தொட்ட பாட்டு இது! உலகின் பல மொழிகளில்
இதைப் பாடிப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதை நம்மவர்கள் விட்டுவைப்பார்களா? தமிழில் “சின்னப் பெண்ணான போதிலே” என்று
இந்த மெட்டில் ஒரு பாட்டு ஆரவல்லி படத்தில் வந்தது. பட்டுக்கோட்டை பாட்டெழுத
ஜி. ராமனாதன் இசையில், ராஜா–ஜிக்கி பாடினார்கள்.
ஹிந்தியில் இந்த மெட்டு அப்படியே வந்ததாக எனக்கு நினைவில்லை. “தில்லி கா தாதா“
(1962) என்ற படத்தில் மஹேந்த்ர கபூர்–ஆஷா போன்ஸ்லே பாடும் ஒரு டூயட்டில் இந்த
சாயல் இருக்கும்
(இசை: என்.தத்தா).
(வேறு ஒரு பாட்டும் இருக்கலாம்–நினைவில்லை) ஆனால் கதையில் வரும் குழந்தை
சம்பந்தப்பட்ட விஷயத்தை எடுத்துக்கொண்டார்கள்.. ஒரு படத்தில் பாட்டமைத்தார்கள்.
அம்மா பையனுக்கு அறிவுரை சொல்வதாக வரும் பாட்டு. இந்தப் பாட்டை வைத்து
கதையில் திருப்பம் வரும்!.
meethi meethi baato(n) se, meethi meethi
meethi meethi baato(n) se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
meethi meethi
இனிக்க இனிக்கப் பேச்சைக் கேட்டால், ஜாக்கிரதையாக இரு!
உலகத்தில் ஜனங்கள் கபடம் நிறைந்தவர்கள்!
khub tej hai, ilm jise
koi chor bhi le na sake
bhar le khazana, tera zamana
jag mein rahega, tera naam sada
கல்வி நிறைந்த பெருத்த செல்வம்
இதை எந்தத் திருடனும் எடுத்துச் செல்ல முடியாது!
இதை நீ நிறப்பிக்கொள்! உலகம் உன்னுடையதாகும்
உன் பெயர் உலகில் என்றும் நிலைத்திருக்கும்!
mehnat se din raat padhunga
pahla number pass karunga, shabash
நான் இரவு பகல் பாடு பட்டுப் படிப்பேன்
முதல் நம்பரில் தேறிவிடுவேன்!
சபாஷ்!
meethi meethi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
இனிக்க இனிக்கப் பேச்சைக் கேட்டால், ஜாக்கிரதை!
khel kud mein khona nahi
baat baat mein rona nahi
tu hai sitara, chanda se pyaara
karna jahan mein, koi kaam bada
சதா விளையாட்டு என்று பொழுதைக் கழிக்காதே
தொட்டதற்கெல்லாம் அழாதே
நீயே தாரகை, சந்திரனைவிட அழகு,
உலகில் எதாவது சாதனை செய்!
hindustan ki shaan banunga
desh ka uncha naam karunga, shabash
இந்தியாவில் பிரகாசிப்பேன்!
தேசத்தின் பெயரை உயர்த்துவேன்!
சபாஷ்!
meethi meethi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
meethi meethi
இனிக்க இனிக்கப் பேச்சைக் கேட்டால், ஜாக்கிரதை!
jhoom jhoom tufa ki nazar
raahe gher le teri agar
jhoom jhoom tufa ki nazar
raahe gher le teri agar
hoga andhera, koi na tera
fir tu bachega kaise, humko bata
புயல் உன் பாதையைச் சூழ்ந்துகொண்டு,
எங்கும் இருள் சூழ்ந்து, உனக்கென்று எவரும் இல்லாவிட்டால்
எப்படித் தப்புவாய், எனக்குச் சொல்!
tufano(n) se nahi darunga
himmat se main nikal padunga, shabash
புயலுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்
துணிவுடன் வெளிவந்துவிடுவேன்!
சபாஷ்!
meethi meethi baato se, bachna zara
duniya ke logo mein hai, jaadu bhara
இனிக்க இனிக்கப் பேச்சைக் கேட்டால், ஜாக்கிரதை!
Song: Meethi meethi batho(n) se Film: Qaidi No.911 1959
Lyrics: Hasrat Jaipuri
Music: Dattaram Singers: Lata Mangeshkar & Daisy Irani
YouTube link: https://www.youtube.com/watch?v=RsH24zE_oHI
ஹஸ்ரத் ஜெய்புரியின் நல்ல கவிதை; தத்தாராமின் இனிய இசை.தத்தாராம் சிறந்த இசைஞர்,
இவரை நாம் பின்னர் பார்க்கப் போகிறோம்.
[இந்தப் பாடலின் சரியான ஹிந்தி வடிவம் கிடைக்கவில்லை]
இந்தப் படத்தை தமிழில் கைதி கண்ணாயிரம் என்று எடுத்தார்கள்.. இந்த மெட்டில்.
“கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்’ என்ற பாட்டை மருதகாசி எழுதினார்.
கே.வி.மஹாதேவன் இசை,…
இப்படி நல்ல நல்ல விஷயங்கள்- பாட்டோ, கவிதையோ , எங்கிருந்து வந்தால் என்ன?
ரசிப்போம்!
.
***
Attachments area
Doris Day – Whatever Will Be Will Be Que Sera Sera (Best All Time Hits Forever 2014 / HQ) Mu©o
Preview YouTube video Doris Day – Que sera sera – Lyrics
Doris Day – Que sera sera – Lyrics
Preview YouTube video when i was just a little girl.. ♥ ♥ By Bhanumathi Ramakrishna
when i was just a little girl.. ♥ ♥ By Bhanumathi Ramakrishna
Meethi Meethi Baaton Se Bachna Zara – Lata Mangeshkar – QAIDI NO 911 – Nanda, Sheikh Mukhtar