செகுலர் இந்தியா பிறந்த கதை! (Post No.8069)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8069

Date uploaded in London – – – 30 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

செகுலர் இந்தியா பிறந்த கதை!

ச.நாகராஜன்

செகுலரிஸம் என்றால் என்ன என்று கேட்டால், ‘அது தானே, எது ஹிந்து என்றாலும் அதை எதிர்ப்பது, எது முஸ்லிம் அல்லது கிறிஸ்தவம் என்றாலும் அதை ஆதரிப்பது. அவ்வளவு தான்!’, என்று பதில் வரும்.

அது சரி, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஒரு வேளை தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டலாமா என்று கேட்டால் ஐயையோ, நீ செகுலரிஸத்திற்கு எதிரி என்ற முறைப்பான பதில் ‘ஒரு பக்கத்திலிருந்து’ வரும்.

இந்த ‘ஒரு பக்கம்’ யார் என்று கேட்டால் அதற்கு நமது சமீபத்திய வரலாற்றைப் பார்த்தாலேயே தெரியும்.

மதமாற்றத் துடிக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள், மைனாரிடி, செகுலரிஸம் ஆகிய வார்த்தைப் போர்வைகளுக்குள் ஒளிந்து கொள்ளத் துடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள், பிரிவினையைத் தூண்டும் கம்யூனிஸ்டுகள், தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க அன்னிய சக்திகளிடமிருந்து பணம் பெற்று தேச ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கும் ஆங்காங்குள்ள துண்டுக் கட்சிகள், மிகத் தவறான தேசத் துரோக, பிரிவினைவாத ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகியவையே இந்த ஒரு பக்கத்தில் இருப்பவர்கள்.

இவர்களுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டிருப்பவர்கள் செகுலரிஸம் என்றால் என்ன என்று நிஜமாகவே புரியாத ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஓட்டுப் போடும் அப்பாவி மக்கள்!

1948ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அரசியல் சட்ட அமைப்பை நிர்ணயம் செய்ய  கான்ஸ்டியுயன்ட் அசெம்பிளி குழுமியது. புரபஸர் கே.டி. ஷா, செகுலர் என்ற வார்த்தையை அரசியல் சட்டத்தின் முகவுரையில் (preamble) சேர்க்க வேண்டுமென்றார்.

க்ளாஸ் (1), ஆர்டிகிள் (1) இல் ‘shall be a’ என்பதற்குப் பின்னால் ‘Secular, federalist, Socialist, Union of States’ என்று இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சூடான விவாதம் ஆரம்பித்தது.

நேருவுக்கு இது பிடிக்கவில்லை. அனைத்து மதங்களும் ஒன்று போல அரசியல் சட்டத்தினால் பாவிக்கப்பட்டு அவரவர் மதத்தை அவரவர் தங்கு தடையின்றிப் பின்பற்றலாம் என்பதே அனைவரது கொள்கையும். ஆனால் செகுலர் என்ற வார்த்தையின் பொருள் என்ன? சரியான விளக்கத்தைத் தர முடியாத அந்த வார்த்தையை அவர் சேர்க்க வேண்டாம் என்றார்.

கமிட்டியின் தலைவராக இருந்தா பாபாசாஹப் அம்பேத்கரோ இந்த வார்த்தையைக் கடுமையாக எதிர்த்தார்.

அம்பேத்கர் கூறினார் :” இது மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம்”

(Ambedkar said “what should be the policy of the State, how the Society should be organised in its social and economic side are matters which must be decided by the people themselves according to time and circumstances. It cannot be laid down in the Constitution itself because that is destroying democracy altogether.”)

இந்த செகுலர் விவாதத்தின் காரணமாக ஆர்டிகிள் 25, 26, 27 சேர்க்கப்பட்டன. 

(The Constituent Assembly adopted Articles 25, 26 and 27 of theof the Constitution with the intention of furthering secularism).

ஆண்டுகள் உருண்டோடின.

இந்திரா காந்தியின் பிரதம மந்திரி பதவிக்கு கோர்ட் தீர்ப்பின் மூலமாக ஆபத்து வந்தது. 1975, ஜூன் மாதம் 26 ஆம் தேதி இந்திரா காந்தி அம்மையார் அவசர நிலை பிரகடனத்தைச் செய்தார்.

அவர் எடுக்கவிருக்கும் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுக்க உள்ள சதிக்கு எதிராக இந்த நடவடிக்கை அவசியம் என அவர் விளக்கம் அளித்தார்.

 (This was a necessary response to “the deep and widespread conspiracy which has been brewing ever since I began to introduce certain progressive measures of benefit to the common man and woman of India.”)

தொடர்ந்து 38, 39,40, 41 என அரசியல் சட்டத் திருத்தங்கள் வந்த வண்ணம் இருந்தன.

கடைசியில் 42வது திருத்தம் வந்தது ; செகுலரிஸமும் அரசியல் சட்டத்திற்குள் நுழைந்தது. 20 பக்க திருத்தத்தில், ‘‘sovereign, socialist, secular, democratic republic” என்ற வார்த்தைகள் இடம் பெற்றன.

சாதாரணமாகவே ஹிந்து விரோத சக்திகள் ஆடும் குரங்காட்டம் கள் குடித்த குரங்காட்டமாக மாறியது.

இன்று அப்பாவி ஹிந்து சொந்த தேசத்தில் தவிக்கிறான்.

அவன் வணங்கும் ஆலயங்கள் அரசின் வசம் எடுக்கப்பட்டன.

சர்ச்சுகளோ, மசூதிகளோ ..மூச்.. செகுலரிஸம்!!!.

ஹிந்து மத சம்பந்தமான கொள்கைகளை பள்ளியில் மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடாது.

கிறிஸ்தவ, இஸ்லாமியம் பற்றி … மூச் . கற்பிக்கலாம்!!!

மிக நீண்ட கதையை அனுபவத்தால் நாம் அறிகிறோம்.

சொந்த நாட்டில் நமக்கு நாமே செகுலரிஸம் வார்த்தைக்கு அடிமையான கதை இது தான்.

சொந்தத்தில் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் ஹிந்துக்களை போகிறவன் வருபவன் எல்லாம் ஏறி மிதிக்கலாம்.

செகுலரிஸம் என்றால் …சூக்ஷ்மம் புரிகிறதா?!

tag– செகுலர் இந்தியா

***

Leave a comment

1 Comment

 1. DR.S.RAMESH SADHASIVAM

   /  June 10, 2020

  கெடுத்துவிட்டார்கள் ஐயா,முசுலீம் கிருத்துவ கல்லூரிகளில் 90% அவர்களே! அரசு
  சம்பளத்தில்! இந்துக்களின் கல்லூரிகளிலோ சாதிச்சண்டைகள்,பாசியாலிட்டி,சுரண்டல்!

  On Sat, May 30, 2020 at 12:25 PM Tamil and Vedas wrote:

  > Tamil and Vedas posted: ” WRITTEN BY S NAGARAJAN Post
  > No. 8069 Date uploaded in London – – – 30 May 2020 Contact –&nbsp”
  >

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: