
Post No. 8071
Date uploaded in London – 30 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜூன் மாத 2020 நற்சிந்தனை காலண்டர்
விழா நாட்கள் – ஜூன் 4 வைகாசி விசாகம் , 28 ஆனி உத்தரம் .
அமாவாசை – ஜூன் 20, பௌர்ணமி -ஜூன் 5; ஏகாதசி விரத நாட்கள்- 2, 17.
சுப முஹுர்த்த தினங்கள் – 1, 3, 7, 10,11, 12, 24
நலமான வாழ்வு, வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள் ஜூன் மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.

ஜூன் 1 திங்கட் கிழமை
அநிர்வேதஹ ஸ்ரியோ மூலம் – வால்மீகி ராமாயணம் 5-12-11, விதுர நீதி 6-16
உற்சாகமே வளமான வாழ்வின் அஸ்திவாரம் /ஆணிவேர்
***
ஜூன் 2 செவ்வாய்க் கிழமை
ந சோக பரிதாபேன ஸ்ரேயசா யுஜ்யதே ம்ருதஹ- வால்மீகி ராமாயணம் 4-25-2
இறந்தோர் பற்றி, வாழும் மக்கள் வைக்கும் ஒப்பாரியால் மட்டும் அவர்கள் பெரியோர் ஆகிவிடமாட்டார்கள் .
***
ஜூன் 3 புதன் கிழமை
ந சாஹச மனாராப்ஸ்ரேயஸ முபலப்யதே – ஸம்ஸ்க்ருத பழமொழி
வளமான வாழ்வு வேண்டும் என்றால் ஆபத்துக்களையும் எதிர்நோக்கத் தயாராக வேண்டும்
***
ஜூன் 4 வியாழக் கிழமை
உத்திஷ்ட , யசோ லப – பகவத் கீதை 11-33
எழுந்திரு, புகழ் அடை
***
ஜூன் 5 வெள்ளிக் கிழமை
ந ஸ்வகர்ம வினா ஸ்ரேயஹ ப்ராப்னுவந்தீஹ மானவாகா -யோக வாசிஷ்டம் 5-48-69
தன் முயற்சி இன்றி நல்வாழ்வு கிட்டாது
xxx

ஜூன் 6 சனிக் கிழமை
பொருளல்லவரை ப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் – குறள் 751
ஒருவனை ஒருபொருட்டும் மதிக்கமுடியாவிட்டாலும் பொருள் சேர்ந்துவிட்டால் உலகம் அவனை மதிக்கும் .ஆகையால் பொருளை விட சிறப்புடையது எதுவும் இல்லை
***
ஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – 960
உலகில் நன்மை எல்லாவற்றையும் பெற வெட்கம் வேண்டும்; அதாவது தீய செயல்களைச் செய்ய வெட்கப்படவேண்டும் . வீட்டின் பெருமையைக் காக்க வேண்டுமானால் பணிவு வேண்டும் .அப்படியில்லாவிடில் அவனுடைய அப்பா, அம்மா வளர்த்த முறையை எண்ணி குலத்தைப் பழிப்பார்கள்
***
ஜூன் 8 திங்கட் கிழமை
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் – குறள் 483
உலகமே வேண்டுமானாலும் கிடைக்கும் . தக்க காலத்தில், தக்க இடத்தில் செய்தால்.
***
ஜூன் 9 செவ்வாய்க் கிழமை
நித்யஸ்ரீ நித்ய மங்களம் – கஹாவத்ரத்னாகர
பொங்கும் மங்களம் என்றும் தங்குக
***
ஜூன் 10 புதன் கிழமை
புஷ்டிர்ஹி ப்ரதமா ரதிஹி – பழமொழி
நல்வாழ்வு கிடைப்பதே பெரும் பாக்யம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
***

ஜூன் 11 வியாழக் கிழமை
பூர்வாதீரிதம் ஸ்ரேயஹ துக்கம் ஹாய் பரிவர்த்ததே – சாகுந்தலம்
அதிர்ஷ்ட தேவதையை ஒருமுறை நிந்தித்தால் பின்னர் கஷ்டம்தான்
***
ஜூன் 12 வெள்ளிக் கிழமை
ப்ரதாப மா த்ரோபனதா விபூ தியஸ் சிரன்ன திஷ்டதி ப்ரோபதா பினாம் – சுபாஷிதா வளி
மற்றவர்களை வஞ்சித்து பெற்ற செல்வம் தங்காது .
***
ஜூன் 13 சனிக் கிழமை
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் -குறள் 659
மற்றவர்களை அழும்படி செய்து பெற்ற செல்வம் உன்னை அழ , அழ வைத்து விட்டு ஓடிவிடும்
***
ஜூன் 14 ஞாயிற்றுக் கிழமை
ப்ரதிபக் னாதி ஹி ஸ்ரேயஹ பூஜ்யபூஜா வ்யதிக்ரமஹ – ரகு வம்சம் 1-79
வணங்கத் தக்கவர்களை வணங்காமல் இருப்பது நல் வாழ்வுக்கு தடைகளாக நிற்கும்
***
ஜூன் 15 திங்கட் கிழமை
விபூதி ரஹிதம் கேஹம் ந ராஜதே — ப்ருஹத் கதா மஞ்சரி
செல்வமில்லாத வீடு ஒளி இழந்து காணப்படும்
***

ஜூன் 16 செவ்வாய்க் கிழமை
வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் -குறள் 651
செய்யும் செயலின் தூய்மை அவன் விரும்பியவற்றை எல்லாம் கொடுக்கும்
***
ஜூன் 17 புதன் கிழமை
ஸ்ரேயாம்சி லப்துமசுகானி வினாந்தராயைஹி – கிராதார்ஜுனிய
பெருஞ் சாதனைகள் கஷ்டங்களைச் சந்திக்காமல் நிகழ்ந்தவை அல்ல.
***
ஜூன் 18 வியாழக் கிழமை
எதிரதாக் காக்கும் அறினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்- குறள் 429
முன்கூட்டியே அறிந்து காக்க வல்ல அறிவுள்ளவர்க்கு, பின்னர் நடுங்கச் செய்யும் துன்பம் வராது .
***
ஜூன் 19 வெள்ளிக் கிழமை
ஸதாசாரஹ ஸ்ரியோ மூலம் — ராமாயண மஞ்சரி
நன்னடத்தையே எல்லா நலத்துக்கும் ஆணிவேர்
***
ஜூன் 20 சனிக் கிழமை
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் – குறள் 505
அவரவர் செய்யும் செயலே புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றைக் காட்டும் உரைகல்
***

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை
ஸ்ரேயாம்சி பஹுவிக்னானி – ராமாயண மஞ்சரி
நல்ல காரியம் எல்லாம், தடைக்கற்களைச் சந்திக்கவேண்டிவரும்
***
ஜூன் 22 திங்கட் கிழமை
ஸாஹசே கலு ஸ்ரீர் வசதி – மிருச்ச கடிக & சாருதத்த
தடைகளைத் தகர்க்கும் உறுதி கொண்டோரே வெற்றி அடைவர்
***
ஜூன் 23 செவ்வாய்க் கிழமை
மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு – 595
மக்களின் உள்ளத்துக்கேற்ப ஒருவர் உயர்வர்; மனம் போல மாங்கல்யம்
***
ஜூன் 24 புதன் கிழமை
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கமுடையானுழை -594
சோர்வு இல்லாத ஊக்கமுடையவன் வீட்டுக்கு செல்வம் வழி யைகேட்டுக்கொண்டு வந்து சேரும்- 21
***
ஜூன் 25 வியாழக் கிழமை
உத்தரேத் ஆத்மநாத்மானம் – பகவத் கீதை 11-33
உன்னையே நீ உயர்த்திக் கொள்ளவேண்டும்
***

ஜூன் 26 வெள்ளிக் கிழமை
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் .
உயர்வடையும் சிந்தனையே உள்ளத்தில் கொப்புளிக்கவேண்டும் -596
***
ஜூன் 27 சனிக் கிழமை
கைக்குருவியைக் கொண்டு காட்டுக்கருவியைப் பிடிக்கவேண்டும் ; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கனும்.
***
ஜூன் 28 ஞாயிற்றுக் கிழமை
அலை மோதும் போதே தலை முழுகு ; காற்றுள்ள போதே தூ ற்றிக் கொள் ; பருவத்தே பயிர் செய்
***
ஜூன் 29 திங்கட் கிழமை
திரைகடலோடியும் திரவியம் தேடு – கொன்றைவேந்தன்
செல்வம் சேரவேன்டுமானால் வெளிநாடு செல்லவும் தயங்கக்கூடாது
***
ஜூன் 30 செவ்வாய்க் கிழமை
சீரைத் தேடின் ஏரைத் தேடு
வளமான வாழ்வுக்கு விவசாயத்தைச் செய்க.
***

BONUS QUOTATION
நாவக்ஞா ஹி பரே கார்யா ய இச்சேச்ரேய ஆத்மநஹ- வால்மீகி ராமாயணம் 7-33-22
ஒருவர் நலத்துக்காக பிறரை இகழக் கூடாது
tags-
ஜூன் 2020 , காலண்டர்,
நலமான , வளமான வாழ்வு ,பழமொழிகள்

—SUBHAM —–