ஹிந்தி படப் பாடல்கள் – 54 – இரு மணிகள் – எஸ்.டி.பர்மன் (Post N.8082)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8082

Date uploaded in London – – – 1 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 54 – இரு மணிகள் – எஸ்.டி.பர்மன்!

R. Nanjappa

எஸ்.டி.பர்மன்!

நமது பழைய ஹிந்தித் திரை இசைஞர்களில் மூத்தவர் எஸ்.டி பர்மன். (1906-1975) பர்மன் என்றால் என்னவோ ஏதோ வென்று நினைக்கவேண்டாம் – அது வர்மா தான். திரிபுரா ராஜவம்சத்தைச் சேர்ந்தவர். திரை இசைத்துறையில் தனித்தன்மையுடன் திகழ்ந்தவர். எல்லோராலும் மரியாதைக்குரியவராக மதிக்கப்பட்டவர். இவர் முதல் ஹிந்திபடத்திற்கு இசையமைத்த போதே (1946) இவருக்கு வயது 40. இறுதிவரை ஊக்கத்துடன் இருந்தார். 1975ல் “மிலி” படத்தின் பாடல்களுக்கு ஒத்திகை பார்த்துவிட்டு உடல் நலம் குன்றி சில மாதங்களில் காலமானார்.

இவர் சாஸ்திரிய சங்கீதத்தில் முறையான பயிற்சி பெற்றிருந்ததுடன், வங்காள பிராந்திய, கிராமிய இசை, ரவீந்திர சங்கீதம் ஆகியவற்றிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். இத்தனை அம்சங்களையும் இவர் இசையில் பார்க்கலாம்

இவருக்கு நல்ல குரல் வளமும் உண்டு. ஆனால் தன்பாட்டுக்கு பிறர் திரையில் வாயசைப்பதை விரும்பவில்லை. இவர் ஹிந்திப் படங்களில் 8 பாட்டுகள் தான் பாடியிருப்பார், ஒவ்வொன்றும் மணியானவை, மறக்க முடியாதவை. இவை திரை நிகழ்ச்சிகளின் பின்னணியாக வரும் இத்தகைய இரு பாடல்களைப் பார்க்கலாம்.

ரே மாஜீ

रे माँझी
रे माँझी
मेरे माँझी
मेरे साजन हैं उस पार
मैं मन मार, हूँ इस पार
मेरे माँझी अब की बार
ले चल पार, ले चल पार
मेरे साजन हैं उस पार..मन की किताब से तुम
मेरा नाम ही मिटा देना
गुण तो था कोई भी
अवगुण मेरे भुला देना
मुझे आज की विदा का
मर के भी रहता इंतज़ार
मेरे साजन हैं उस पार..

मत खेल जल जाएगी
कहती है आग मेरे मन की
मैं बंदिनी पिया की
मैं संगिनी हूँ साजन की
मेरा खींचती है आँचल
मनमीत तेरी, हर पुकार
मेरे साजन..
रे माँझी…  

ரே மாஜீ ரே மாஜீ, ரே மாஜீ

மேரே ஸாஜன் ஹை உஸ் பார்,

மை மன் மார், ஹூ(ன்) இஸ் பார்

மேரே மாஜீ அப் கீ பார்

லே சல் பார், லே சல் பார்

மேரே ஸாஜன் ஹை உஸ் பார்

ஓடக்காரா, ஒடக்காரா!

என் அன்பர் அந்தக் கரையில் இருக்கிறார்

நான் மனமிழந்து இந்தக் கரையில் நிற்கிறேன்

ஓடக்காரா, இந்த முறை

என்னை அக்கரைக்குக் கொண்டுசெல், அக்கரைக்குக் கொண்டு செல்

என் அன்பர் அக்கரையில் இருக்கிறார்.

மன் கீ கிதாப் ஸே தும்

மேரா நாம் ஹீ மிடா தேனா

குண் தோ தா கோயீ பீ

அவகுண் மேரே புலா தேனா

முஜே ஆஜ் கீ பிதா கா

மர் கே பீ ரஹதா இந்தஃஜார்

மேரே ஸாஜன் ஹை உஸ் பார்\

உன் மனம் என்னும் புத்தகத்திலிருந்து

என் பெயரை நீக்கிவிடு

என்னிடம் நல்ல குணம் எதுவும் இருந்ததில்லை

என்னுடைய கெட்ட குணங்களை மறந்துவிடு

இன்றைய இந்தப் பிரிவு (இருந்தாலும்

மரணத்திற்குப் பின்பும் மீண்டும் சந்திக்க காத்திருப்பேன்

மத் கேல் ஜல் ஜாயேகீ

கஹதீ ஹை ஆக் மேரே மன் கீ

மை பந்தினீ பியா கீ

மை ஸங்கினீ ஹூ ஸாஜன் கீ

மேரா கீஞ்ச் தீஹை ஆன்சல்

மன்மீத் தேரீ ஹர் புகார்

மனதுடன் விளையாடாதேஅது எரித்துவிடும்

என என் மனதின் கனல் கூறுகிறது!

நான் என் அன்பருடன் கட்டுப்பட்டவள்

என் அன்பரின் சகி நான்

உன் குரல் என்னை இழுக்கிறது!

மேரே ஸாஜன் ஹை உஸ் பார்,

ரே மாஜீ..

ஓடக்காரா, என் அன்பர் அக்கரையில் இருக்கிறார்.

Song: O Re maaji  Film: Bandini, 1963 Lyrics: Shailendra

Music & Singer: Sachin Dev Burman

YouTube link: https://www.youtube.com/watch?v=XurZtjUhhAs

காஹே கோ ரோயே

बनेगी आशा इक दिन तेरी ये निराशा
काहे को रोये, चाहे जो होए
सफल होगी तेरी अराधना
काहे को रोये

दिया टूटे तो है माटी
जले तो ये ज्योति बने
बहे आंसू तो है पानी
रुके तो ये मोती बने
ये मोती आँखों की
पूँजी है ये ना खोये
काहे को रोये

समां जाए इसमें तूफ़ान
जिया तेरा सागर सामान
नज़र तेरी कहे नादान
छलक गयी गागर सामान
जाने क्यों तूने यूं
आंसुवन से नैन भिगोये
काहे को रोये… 

कहीं पे है दुःख की छाया
कहीं पे है खुशियों की धुप
बुरा भला जैसा भी है
यही तो है बगिया का रूप
फूलों से, काँटों से
माली ने हार पिरोये

काहे को रोये… 

safal hogi teri aradhana, kahe ko roye 

பனேகீ ஆஷா ஏக் தின் தேரீ யே நிராஷா

காஹே கோ ரோயே, சாஹே ஜோ ஹோயே

ஸஃபல் ஹோகீ தேரீ ஆராதனா

காஹே கோ ரோயே

உன்னுடைய வருத்தமெல்லாம் ஒரு நாள் நம்பிக்கையாக மாறும்

ஏன் அழுகிறாய், எது நடந்தாலும் நடக்கட்டுமே!

உன்னுடைய பிரார்த்தனை நிச்சயம் பலனளிக்கும்

ஏன் அழுகிறாய்

ஸமா ஜாயே இஸ்மே தூஃபான்

ஜியா தேரா ஸாகர் ஸாமான்

நஃஜர் தேரீ காஹே நாதான்

சலக் கயீ காகர் ஸாமான்

ஹோ..ஜானே க்யூ(ன்) தூ நே யூ(ன்)

அஸுவன் சே நைனா பிகோயே

நீ எந்தப் புயலையும் சமாளிக்கலாம்

உன் மனம் கடல் போன்றது!

உன் கண் வெறிச்சோடியிருக்கிறது

அதிலிருந்து கண்ணீர் வடிகிறது

ஏன் கண்ணீரால் உன் கண்களை நனைத்துக்கொள்கிறாய்?

நீ ஏன் அழுகிறாய் ?

காஹே கோ ரோயே…….

தியா டூடே தோ ஹை மாடீ

ஜலே தோ யே ஜ்யோதீ பன்

பஹே (ன்)ஸூ தோ ஹை பானீ

ருகே தோ யே மோதீ பனே

ஹோ..யே மோதீ ஆங்கோ(ன்) கீ

பூஞ்சீ ஹை யே நா கோயீ

அகல் விளக்கு உடைந்து விட்டால் அது வெறும் மண் தான்

எரியும் பொழுது அது ஜோதியாகிறது!

கண்ணீர் வழிந்தால் அது வெறும் நீர்தான்

அது நின்றுவிட்டால் அதுவே முத்து!

இந்த முத்துக்கள் கண்களுக்கு மதிப்புள்ளவை,

ஏன் அவற்றை வீணாக்குகிறாய்?

காஹே கோ ரோயே, சாஹே ஜோ ஹோயே

எது நடந்தாலும் ஏன் அழுகிறாய்,

கஹீ(ன்)பே ஹை துக் கீ சாயா

கஹீ(ன்) பே ஹை குஷியோ(ன்) கீ துப்

ஓரே ..கஹீ(ன்) பே ஹை துக் கீ சாயா

கஹீ(ன்) பே ஹை குஷியோ(ன்) கீ துப்

புரா பலா ஜைஸா பீ ஹை

யஹீ தோ ஹை பகியா கா  ரூப்

ஹோ .ஃபூலோ(ன்) ஸே, கா(ன்)டோ ஸே

மாலீ நே ஹார் பிரோயே

ஓரிடத்தில் துக்கத்தின் நிழல் படர்ந்திருக்கிறது

ஓரிடத்தில் சந்தோஷம் என்னும் சூரிய ஒளி பரந்திருக்கிறது!

கெட்டதோ நல்லதோ எப்படி வருகிறதோ

அதுதான் இங்கு வாழ்க்கையின் வடிவம்!

ஒரு மாலை என்றால் பூவும் இருக்கிறது, முள்ளும் இருக்கிறது

காஹே கோ ரோயே, சாஹே ஜோ ஹோயே..

எது நடந்தாலும் என்ன, நீ ஏன் அழுகிறாய்?.

Song: Kahe ko roye  Film: Aradhana 1970 Lyrics: Anand Bakshi

Music & Singer:  S.D.Burman

YouTube link:  https://www.youtube.com/watch?v=yYF9RIPNHac

இந்த இரண்டு பாட்டுக்களையும் கேளுங்கள்! எவ்வளவு வித்தியாசமான குரல்! எத்தனை உணர்ச்சிபூர்வமாகப் பாடப்பட்டவை! இது பர்மன் குரலின் விசேஷம்!

இரு பாடல்களையும் கவனிப்போம்- எத்தனை அழகிய கவிதை!

பர்மன் பாடிய பாடல்களின் மெட்டுக்களுக்கு அவர் மனைவி மீராவும் உதவினார் என்பர். அவரும் இசையில் தேர்ந்தவர். ஓரிரு படங்களுக்கு பர்மனுக்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.

பர்மனுக்கு பணத்தாசை இருந்ததில்லை. இந்த ஆராதனா படம் எடுத்தபோது தயாரிப்பாளரிடம் பொருள் வசதி இல்லை என்று அறிந்த பர்மன், வழக்கமாக வாங்கும் தொகையையை விட குறைத்தே வாங்கினார். 40களின் இறுதியில் பம்பாய் நகரின் பணவெறி பிடித்த சூழ்நிலை அவருக்குப் பிடிக்கவில்லை- பம்பாயை விட்டு நீங்கவே முயற்சித்தார்! ஹிந்தித் திரை இசையில் முதலில் மெட்டமைத்து பின் அதற்குத் தக்கபடி பாட்டெழுதும் வழக்கத்தை முதலில் புகுத்தியவர் எஸ்.டி பர்மனே!

Attachments area

Preview YouTube video O Mere Majhi Mere Sajan Hai | Bandini | Sachin Dev Burman | Shailendra

https://i.ytimg.com/vi/XurZtjUhhAs/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

O Mere Majhi Mere Sajan Hai | Bandini | Sachin Dev Burman | Shailendra

Preview YouTube video Sachin Dev Burman – Bandini (1963) – ‘mere saajan hai us paar’

https://i.ytimg.com/vi/s37vREKbTNU/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Sachin Dev Burman – Bandini (1963) – ‘mere saajan hai us paar’

Preview YouTube video Safal Hogi Teri Aradhana – Rajesh Khanna & Sharmila Tagore – Aradhana – Hindi Sad Song

https://i.ytimg.com/vi/yYF9RIPNHac/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Safal Hogi Teri Aradhana – Rajesh Khanna & Sharmila Tagore – Aradhana – Hindi Sad Song

tag –ஹிந்தி படப் பாடல்கள் – 54

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: