பாரத ஸ்தலங்கள்! – 1 (Post No.8087)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8087

Date uploaded in London – – – 2 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாரத ஸ்தலங்கள்! – 1

ச.நாகராஜன்

பாரதம் ஒரு தெய்வீக நாடு. இது போல இன்னொரு தெய்வீக நாடு இந்தப் பூவுலகில் இல்லை.

தேவர்களும் இங்கு பிறப்பெடுக்க ஆவலாக உள்ளார்கள் என நமது அறநூல்கள் கூறுகின்றன.

தென்கோடி குமரி முனையிலிருந்து வட கோடி இமாலயம் வரை உள்ள தலங்கள் லட்சோபலட்சம் எனலாம்.

இந்த தலங்களின் தொகுப்பையும் தலங்களின் மஹிமையையும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் மற்றும் கட்டுரைகள் விளக்கியுள்ளன. ஆயிரமாயிரம் அறிஞர்கள் இதைப் பற்றிக் காலம் காலமாக அவ்வப்பொழுது கூறி வந்துள்ளனர்.

நூல்களை யாத்துள்ளனர்.

சிவ ஸ்தலங்கள் 1008க்கும் மேற்பட்டவை; வைணவ திருப்பதிகள் 108 + ஆங்காங்குள்ள வைணவத் தலங்கள்; சக்தி பீடங்கள் 108; முருகன் தலங்கள் ஏராளம்; விநாயகர் தலங்கள் ஏராளம்; சூரிய பூஜை ஸ்தலங்கள் ஏராளம், நவகிரஹ ஸ்தலங்கள், அவதாரங்களின் ஸ்தலங்கள், இராமாயண ஸ்தலங்கள், மஹாபாரத ஸ்தலங்கள், புராண வரலாறு கொண்ட ஸ்தலங்கள், ரிஷிகளின் ஸ்தலங்கள், தேவார ஸ்தலங்கள், மகான்களின் ஸ்தலங்கள்/சமாதிகள், விசேஷமான தீர்த்தங்களைக் கொண்ட ஸ்தலங்கள், ஜைன, புத்த ஸ்தலங்கள், என இப்படி கூறிக் கொண்டே போகலாம்.

 மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர், தி.வெ.கோபாலையர், செங்கல்வராய பிள்ளை உள்ளிட்ட ஏராளமானோர் தலங்களைப் பற்றிய குறிப்புகளை முடிந்த மட்டில் அற்புதமாகச் சேகரித்து நூல்களாக வெளியிட்டுள்ளனர். தமிழ் தவிர இதர மொழிகளில் உள்ள நூல்களுக்கு ஒரு அளவே இல்லை; அதில் உள்ள தகவல்களும் பிரமிக்க வைப்பவையாகும்.

என்றாலும் இது முடிந்த ஒன்று அல்ல. சிவ ஸ்தல மஞ்சரி போன்ற நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து அந்த நூல்களைத் தொகுத்தாலேயே நாம் இது வரை அறிந்திராத பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

பிரம்மாண்டமான அறிஞர் சபை ஒன்று கூட வேண்டும்; அவர்களுக்குத் தேவையான ஏராளமான பொருள் உதவி தர வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு வேளை தலக் களஞ்சியம் ஒன்று அற்புதமான அனைத்துத் தகவல்களுடன் உருவாகக் கூடும்!

 எப்படியெல்லாம் தலங்கள் விசேஷமான ஒரு பெருமையைப் பெறுகின்றன; பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்ட ஒரு சிறு பட்டியல் இங்கு தரப்படுகிறது.

1. மோக்ஷபுரிகள் ஏழு (முக்தி தலங்கள் ஏழு)

 1. அயோத்யா 2. மதுரா 3. மாயா (ஹரித்வார்) 4. காசி 5. காஞ்சி  6. அவந்திகா (உஜ்ஜயினி) 7.த்வாரகா

*

2. சப்தவிடங்க ஸ்தலங்கள்

1.திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்

2.திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்

3.திருநாகைக்காரோணம் – சுந்தரவிடங்கர் – பாராவாரதரங்க நடனம் – விசி நடனம்

4. திருமறைக்காடு – புவனிவிடங்கர் – ஹம்ஸபாத நடனம்

5. காறாயில் – ஆதிவிடங்கர் – குக்கு நடனம்

6. கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்

7. திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்

*

3. காசிக்குச் சமமான தலங்கள் ஆறு

1.ஸ்வேதாரண்யம் 2. பஞ்சநதம் 3. கௌரி மாயூரம் 4. மத்யார்ஜுனம் 5. சாயாவனம் 6. ஸ்ரீ வாஞ்சியம்

*

4. பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள்

 1. திருக்கருகாவூர் 2. அவளிவநல்லூர் 3. ஹரித்வார மங்கலம் 4. ஆலங்குடி 5. திருக்கொள்ளம்புத்தூர்

*

5. பஞ்ச ஆரண்ய ஸ்தலங்கள் (இன்னும் ஒரு தொகுப்பின் படி)

1. ஆலங்காடு  – வடாரணியம் (ஆலமரம்)

2. எவ்வுளூர் – வீக்ஷாரணியம் (ஈந்து)

3. கூவம் (திருவிற்கோலம்) -நைமிசாரணியம் (தருப்பை)

4. பாசூர்  – வம்சாரணியம் (மூங்கில்)

5.வெண்பாக்கம் – பத்ரிகாரணியம் (இலந்தை)

*

#

6. சக்கராபள்ளி சப்த ஸ்தலங்கள்

 1. சக்கராப் பள்ளி 2. அரிச்வரம் 3. சூலமங்கலம் 4. நந்தீசுவரம் 5. பசுபதிகோயில் 6. தாழமங்கை 7. திருப்புள்ளமங்கை

*

7. கும்பேஸ்வரரின் சப்த ஸ்தான தலங்கள்

 1. கும்பகோணம் 2. கலயநல்லூர் 3. திருவலஞ்சுழி 4. தாராசுரம் 5. சுவாமிமலை 6. கொட்டையூர் 7. மேலக்காவேரி

*

8. அஷ்டவீர ஸ்தலங்கள்

 1. திருக்கண்டியூர் (பிரமன் சிரம் கொய்த தலம்)
 2. திருக்கோவிலூர் (அந்தகாசுரனை வதம் செய்த தலம்)
 3. திரு அதிகை (திரிபுரத்தை எரித்த தலம்)
 4. திருப்பறியலூர் (தட்சன் சிரம் கொய்த தலம்)
 5. திருவிற்குடி (ஜலந்தாசுரனை வதம் செய்த தலம்)
 6. வழுவூர் (யானையை உரித்த தலம்)
 7. திருக்குறுகை ( காமனை எரித்த தலம்)
 8. திருக்கடவூர் (யமனை உதைத்த தலம்)

*

9. பஞ்ச க்ரோச ஸ்தலங்கள்

 1. திருவிடைமருதூர் 2. திருநாகேஸ்வரம் 3. திருத்தாலேசுரம் (தாராசுரம்) 4. சுவாமிமலை 5. திருப்பாடல்வனம் (கருப்பூர்)

முடிவே இல்லாத இந்தப் பட்டியலை முடிந்த மட்டும் தொடர்ந்து பார்க்கலாம்!

***

பல்வேறு தலங்களைப் பற்றி ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

அகத்தியருடன் தொடர்பு கொண்ட தலங்கள், நவ கிரஹ தலங்கள், மஹாபாரத தலங்கள், இராமாயண தலங்கள், சக்தி பீட தலங்கள், சூரிய பூஜை தலங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டுரைகளை www.tamilandvedas.com தளத்தில் படித்திருக்கும் அன்பர்களுக்கு இன்னும் விரிவாக தலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த தல அறிமுக/விஜயத் தொடர் ஒரு புதிய பகுதியாக அமையும்.

தல தரிசனம் தொடர்வோம்.

***

tags – பாரத ஸ்தலங்கள் – 1

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: