ஹிந்தி படப் பாடல்கள் – 55 – முஹம்மது ரஃபி! (Post No.8089)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8089

Date uploaded in London – – – 2 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 55 – முஹம்மது ரஃபி!

R. Nanjappa

முஹம்மது ரஃபி

ஹிந்தித் திரை இசைப் பாடகர்களில் முதல் இடத்தை வகிப்பவர் முஹம்மது ரஃபி. முப்பது வருஷங்களில் சுமார் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் குரல் அனேகமாக எல்லா நடிகர்களுக்கும் பொருந்தியது. சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு தலத் மெஹ்மூத், முகேஷ் என தனிப்பட்ட குரல் சிறந்திருந்தது; ஆனால் பொதுவாக எல்லா  நாயகர்களும் இவர் குரலையே முதலில் விரும்பினர். 20 ஆண்டுகள் இந்த நிலை நீடித்தது; 1971ல் ஆராதனா வந்த பிறகு கிஷோர்குமார் முதல் இடத்திற்கு வந்தார்.

நாயகர்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்குமே இவர் குரல் பொருந்தியது, அதனால் இவரை எல்லா இசைஞர்களும் சகட்டு மேனிக்குப் பயன்படுத்தினர். அதனால் இவருக்கு ஒரு தனித்தன்மை இல்லாது போயிற்று. மேலும் நாளடைவில் இவர் குரல் வளம் மாறியது. அதுவும் ஷம்மி கபூருக்காக உரத்த குரலில் பாடி இவர் குரலில் இருந்த இனிமை மங்கியது.

அனில் பிஸ்வாஸ் (1914-2003), எஸ்.டி பர்மன், ஹேமந்த் குமார் முதலிய வங்காள இசைஞர்களுக்கு ரஃபி குரலின் மீது அவ்வளவு பிடிப்பு இருந்ததில்லை. முதல் பத்து ஆண்டுகளில் பர்மன் ரஃபி குரலை அதிகம் பயன்படுத்தவில்லை. 1957ல் குருதத்தின் “ப்யாஸா” படத்தில் குருதத்திற்காக ரஃபி குரலைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் பர்மனுக்கு வந்தது. அதனால் அவர் ரஃபிக்கு தனிப்பயிற்சி அளித்து, அந்தப் பஞ்சாபியின் குரலை மிக இனிமையாக மாற்றினார்! ரஃபியின் குரலில் இருந்த இனிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நௌஷத், எஸ்.டி பர்மன், ஒ.பி.நய்யார், ஜெய்தேவ், என்.தத்தா, மதன் மோஹன் ஆகிய சிலர் தான். அதிலும் பர்மன் இசையில் ரஃபியின் குரல் மிகச் சிறந்து ஓளிரும். அப்படி அமைந்த இரு பாடல்களைப் பார்க்கலாம்.


ஹம் பேகுதீ மே தும்

हम बेखुदी में तुमको पुकारे चले गये
साग़र में ज़िन्दगी को उतारे चले गये
हम बेखुदी में

देखा किये तुम्हें हम, बनके दीवाना
उतरा जो नशा तो, हमने ये जाना
सारे वो ज़िन्दगी के सहारे चले गये
हम बेखुदी में

तुम तो ना कहो हम, खुद ही से खेलें
डूबे नहीं हमीं यूँ, नशे में अकेले
शीशे में आपको भी उतारे चले गये
हम बेखुदी में

ஹம் பேகுதீ மே தும்கோ புகாரே  சலேகயே

ஸாகர் மே ஃஜிந்தகீ கோ உதாரே  சலேகயே

ஹம் பேகுதீ மே

என் வசமிழந்து நான் உன்னை அழைத்துக்கொண்டிருந்தேன்

அப்படியே என் வாழ்க்கையை இந்த மதுக்கோப்பையில் அமிழ்த்திவிட்டேன்

நான் என் வசமின்றி இருந்தேன்..

தேகா கியே துமே ஹம் பன்கே தீவானா

உத்ரா தோ நஷா தோ ஹம் நே யே ஜானா

ஸாரே ஃஜிந்த கீ கே ஸஹாரே  சலேகயே

ஹம் பேகுதீ மே தும்

நான் உன்னைப் பார்த்த நாட்களில் காதல் பைத்தியமாக இருந்தேன்.

அந்த மயக்கம் தீர்ந்ததும்

என் வாழ்க்கையின் துணை அனைத்தும் நீங்கிவிட்டது என அறிந்தேன்

நான் என் வசமின்றி இருந்தேன்

தும் தோ நா கஹோ ஹம் குத் ஹீ ஸே கேலே

டூபே நஹீ ஹமே யூ(ன்) நஷே மே அகேலே

ஸீஷே மே ஆப்கோ பீ உதாரே சலே கயே

ஹம் பேகுதீ மே

நான் ஏதோ தனியாக இந்த விளையாட்டில் ஈடுபட்டேன்

(என்னுடனேயே விளையாடினேன்) என நீ சொல்லாதே

இந்த மயக்கத்தில் நான் தனியாக விழவில்லை!

உன்னைத்தான் என் கோப்பையில் ஊற்றிக்கொண்டிருந்தேன்!

நான் என்வசமின்றி இருந்தேன்.

Song: Hum bekhudi mein tum Film: Kala Pani 1958 Lyrics: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singer: Mohammad Rafi    Raag: Chayanaat

YouTube link: https://www.youtube.com/watch?v=DnMFPAh-lME

This is an excellent example of super Urdu poetry, which can be interpreted at various levels. This is a situational song and can be appreciated better in the film context. Obviously a love song, its intention was not straight.

But even as a stand alone, we can enjoy the music.

ரஃபியின் குரலின் இனிமையை சொல்ல சொற்கள் இல்லை. “சலேகயே” என்று அவர் இழுக்கும் இடமும் அதற்கு முன் கொடுக்கும் சிறு தயக்கமும் மிக அருமை- பல விஷயங்களச் சொல்லாமல் சொல்கிறது.

சாயாநாட் ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல் இது.

கண்களை மூடிக்கொண்டு அமைதியாகக் கேளுங்கள்- இதே வார்த்தைகள் பிரார்த்தனை போல் அமையும்!

நாம் எத்தனைபேர் சுயப் பிரக்ஞையோடு. வழிபாட்டில் ஈடுபடுகிறோம்?

Full credit goes to the supreme lyrics and the sublime tune!

This song is indeed based on a non-film Bengali song sung by Burman himself! Ghum Bhulechchi Nijhum

Listen to it here: https://www.youtube.com/watch?v=A9WfK6ndkRs

Can you decide which version is better? Burman is behind both!

[ This film Kala Pani was based on A.J.Cronin’s 1953 novel “Beyond This Place”]

ஸூரஜ் கே ஜைஸீ கோலாயி

सूरज के जैसी गोलाई (गोलाई!)
चँदा कि ठंडक भी पाई (श्श्श्श्हा)
ठनके तो प्यारे दुहाई
लई लई लई लई

तेरी धूम हर कहीं
तुझ सा यार कोई नहीं
हम को तो प्यारे तू सब से प्यारा
लई लई लई लई
तेरी धूम

दुनिया की गाड़ी का पहिया
तू चोर तू ही सिपहिया
राजों का राजा रुपैया -2
लई लई लई लई
तेरी धूम

बूढ़ों की तू ही जवानी (*cough cough*)
बचपन की दिलकश कहानी
तेरे बिना दूध पानी -2
लई लई लई लई
तेरी धूम

दौलत का मज़हब चलाके (ओम धनाय नमः!)
हम एक मन्दिर बनाके (हरे धन्! हरे धन्!)
पूजेंगे तुझको बिठाके -2
जय जय जय जय
तेरी धूम

சூரஜ் கே ஜைஸீ கோலாயீ (கோலாயீ)

சந்தா கீ டண்டக் பீ பாயீ

டன்கே தோ ப்யாரே துஹாயீ

லயி லயி லயி லையி

சூரியனைப்  போன்ற வட்டவடிவமான உருவம்!

சந்திரனைப் போன்ற குளிர்ச்சி!

உன் ஒலியைக் கேட்டாலோ எங்கும் கோலாஹலம்!

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

தேரீ தூம் ஹர் கஹீ(ன்)

துஜ்ஸா யார் கோயீ நஹீ

ஹம் கோ தோ ப்யாரே தும் ஸப்ஸே ப்யாரா

லயி லயி லயி லயி

தேரீ தூம் ஹர் கஹீ(ன்)

எங்கெங்கும் உன் புகழ்ச்சி ஆரவாரந்தான்!

உன்னைவிட வேண்டியவர்கள் யாரும் இல்லை!

எங்களுக்கோ எல்லோரையும் விட நீ தான் மிகவும் பிரியமானவன்

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

எங்கெங்கும் உன் பிரபாவம்தான்!

துனியா கீ காடீ கா பஹியா

தூ சோர் தூ ஹீ சிபஹியா

ராஜோ(ன்) கா ராஜா ருபய்யா

லயி லயி லயி லயி

தேரீ தூம் ஹர் கஹீ(ன்)

உலகம் என்னும் வண்டிக்கு நீதான் சக்கரம்

நீயே திருடன், நீயே போலீஸ்!

ரூபாய் தான் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா!

ஆஹா ஆஹா

எங்கெங்கும் உன் பிரபாவம்தான்!

பூடோ கீ தூ ஹீ ஜவானீ

பச்பன் கீ தில்கஷ் கஹானீ

தேரே பினா தூத் பானீ

லயி லயி லயி லயி

தேரீ தூம் ஹர் கஹீ(ன்)

நீ இருந்தால் கிழவர்களுக்கும் இளமை வந்தது போல்தான்!.

சிறியவர்களுக்கோ நீயே மனதிற்குகந்த கதை!

நீ இல்லாவிட்டால் தண்ணீரைத்தான் பால் என்று கொள்ளவேண்டும்!

ஆஹா ஆஹா

எங்கெங்கும் உன் பிரபாவம்தான்

தௌலத் கா மஜ்ஹப் சலாகே (ஓம் தனாய நம🙂

ஹம் ஏக் மந்திர் பனா கே (ஹரே தன்! ஹரே தன்)

பூஜேங்கே துஜ்கோ பிடாகே

ஜய் ஜய் ஜய் ஜய்

தேரீ தூம் ஹர் கஹீ(ன்)…

பணத்தையே மதமாக்குவோம்! (ஓம் தனாய நம🙂

நாம் ஒரு கோவில் கட்டுவோம் (ஹரே பணம்! ஹரே பணம்!)

உன்னை அங்கு அமர்த்தி பூஜை செய்வோம்

ஜய ஜய ஜய ஜய

எங்கெங்கும் உன் பிரபாவம்தான்

Song: Suraj ke jaisi golayi  Film: Kala Bazar 1960 Lyrics: Shailendra

Music: S.D.Burman Singer: Mohammad Rafi

YouTube link: https://www.youtube.com/watch?v=jhLy2WfoXnY

எவ்வளவு இனிமையான இசை! ரஃபியின் குரலில் தான் என்ன இனிமை! பின்னணி வாத்யங்களின் இனிய முழக்கம்!  இதை விஜய் ஆனந்த் படமாக்கிய விதம் பலருக்கும் பிடிக்கும்! எளிமையான பாட்டாக இருந்தாலும் இப்படி அர்த்தமுள்ளதாக ஏன் இப்போது எழுதுவதில்லை? இசையில் இனிமை எங்கு போனது?

These two songs showcase the best in our golden years: good lyrics, nice melody, sweet voice and nice picturisation!

This is a double bonus for us- on account of Burman and Rafi!

Attachments area

Preview YouTube video Kala Pani Hum Bekhudi Mein Tumko Pukare Mohd Rafi

Kala Pani Hum Bekhudi Mein Tumko Pukare Mohd Rafi

Preview YouTube video Ghum Bhulechhi Nijhum

Ghum Bhulechhi Nijhum

Preview YouTube video SOORAJ KE JAISEE GOLAYEE -RAFI – S D BURMAN -SHAILENDRA (KAALA BAZAR (1960)

SOORAJ KE JAISEE GOLAYEE -RAFI – S D BURMAN -SHAILENDRA (KAALA BAZAR (1960)

tags- ஹிந்தி படப் பாடல்கள் – 55


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: