பெங்களூரில் மர்ம ஒலி – புதிய விளக்கங்கள் (Post No.8097)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8097

Date uploaded in London – 3 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்த ஆண்டு (2020) மே  மாதம் 20-ம் தேதி பெங்களூர் மக்கள் பெரும் இடி ஓசையைக் கேட்டனர். வானத்தில் மேகத்திலிருந்து வந்த ஓசை இல்லை அது. அருகில் நில அதிர்ச்சிக் கருவிகளிலும் பூமிக்கடியில் நில அதிர்ச்சி ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கர்நாடகத்தில் மட்டும் 12 நில  அதிர்ச்சிக் கருவிகள்  இருக்கின்றன. அதில் எந்த அதிர்வும் பதிவாகவில்லை. கேட்ட ஒலியோ இடி முழக்கத்துக்கும் மேலான ஓலி . இதனால் எல்லோருக்கும் பெரும் கிலி . பின்னர் தற்காப்பு அமைச்க அதிகாரி ஒருவர் ஒரு விளக்கம் கொடுத்தவுடன் மக்களுக்கு கொஞ்சம் மன நிம்மதி.

அதற்குள் இ மெயில், போன், வாட்ஸ் அப், பேஸ்புக் , ட்வீட் எல்லாவற்றிலும் பரபரப்பு. பூகம்பம், போர் முழக்கம், வெடிகுண்டு வீச்சு , வெளி உலக மக்களின் விஜயம் எனக் கற்பனை சிறகடித்துப் பறந்தது.

தற்காப்பு அதிகாரி சொன்னது இதுதான் ;-

ஒருவேளை , ஒரு வேளை — இது சோனிக் பூம் Sonic Boom – ஒலி வெடி அலையாக இருக்கலாம். நாங்கள் அவ்வப்போது அதி நவீன விமானங்களை சோதனை செய்வது வழக்கம்; அவை தரைக்கு 36,000 அடி முதல் 40,000 அடி உயரம் வரை பறக்கும். அப்படிப் பற க்கையில்  சூப்பர்சானிக் (Supersonic) வேகத்திலிருந்து சப் சானிக் (Sub sonic) வேகத்துக்கு இறங்குகையில் இப்படி சோனிக் பூம் Sonic Boom கேட்கும். அது சில நேரங்களில் 65 முதல் 80 கிலோமீட்டர் (50 மைல் ) தொலைவிலுள்ள மக்களுக்கு கூட கேட்கும் என்றார் .

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமே. அனால் அவரும் ஒருவேளை  என்று சொன்னதால் வேறு விளக்கங்களையும் ஆராயவேண்டியுள்ளது .

உலகம் முழுதும் மர்ம ஒலிகள்

மர்ம ஒலி கேட்பது இது முதல் தடவை அல்ல. பெரும்பாலான ஒலிகளுக்கு, சப்தங்களுக்கு, விளக்கம் கிடைத்து விடுகின்றன. விஷமம் செய்யும் பேய்கள், குட்டிச் சாத்தான்களும் இரவு நேரத்தில் சப்தம் உண்டாக்குவதுண்டு

ரிக்வேதம் , மஹாபாரதம் முதலிய நூல்களிலும் மர்ம  சப்தம்  பற்றிச்  சொல்லப்பட்டுள்ளது. உலகிலேயே பழைய நூல் ரிக் வேதம். அதில் முதல் மண்டலத்தில் 164வது கவிதையைப் பாடியவர் தீர்க்கதமஸ் என்னும் கண் தெரியாத கவிஞர் ஆவார். அவர் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலி எனபதும் 4 வகைப்படும் என்கிறார்.பரா , பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று 4 வகையான சப்தங்களில் மனிதர்கள் கேட்கக்கூடியது ‘வைகரி’ என்னும்  சப்தம் மட்டும்தான்; ஏனையவை ரிஷிகளுக்கே கேட்கும் என்பார். ஆக ஒலி  பற்றிய ஆராய்ச்சியை  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் துவங்கிவிட்டனர்!!

இதற்கு அடுத்தபடியாக கி.மு 3150-ல் நடந்த மஹாபாரத யுத்தத்துக்கு முன் கேட்ட மர்ம சப்தம் ஆகும். போர் நிகழப் போவதைக்  குறிக்கும் பல சகுனங்களில் வானத்தில் வந்த குமுறல் ஓசையும் குறிப்பிடப்படுகிறது ; அதாவது மேகமே இல்லாத ஆகாயத்திலிருந்து வந்த சப்தம் அவை.

பாடும் மீன்கள் , பாடும் மணல் குன்றுகள்

இலங்கையில் மட்டக்கிளப்பில் லேடி மானிங் பாலத்துக்குக் கீழே உப்பங்கழியிலிருந்து பாடும் மீன்கள்  ஒலி எழுப்புகின்றன. கடலில் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலி தொலைதூரம் வரை கேட்கிறது பாலைவனங்களில் சுமார் 30 இடங்களில் பாடும் மணல் குன்றுகள் உள்ளதை அந்தந்த நாடுகள் சுற்றுலாத் தலமாக்கியுள்ளன. சதுப்பு நிலத்தில் மீதேன் (Methane) வாயு வெளியேறுகையில் சப்தம் உண்டாகும். அத்தோடு மீத்தேன் தீப்பற்றி எரிந்தால் அதைத் தமிழர்கள் கொள்ளி வாய்ப்பிசாசுகள் என்று அஞ்சுவர் ..ஆயினும் பெங்களூரு போல மர்ம ஒலி (Mysterious Sound) கேட்ட மற்றோரு இடம்பற்றி பிப்ரவரி 2012ல் நியூ சைன்டிஸ்ட் NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான சஞ்சிகையில் அமெரிக்காவிலுள்ள வட கரோலினா (North Carolina, USA) கடற்கரையில் ஏற்பட்ட ஒலி பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது, இதை கேத் ரவிலியஸ் (Kate Ravilious)  எழுதியுள்ளார் . இதோ அவர் சொல்லும் சில சுவையான தகவல்கள்—

“2010ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் ஜோடி ஸ்மித் (Jody Smith) என்பவர் மிகப் பெரிய மர்ம ஒலியை வட கரோலினா (அமெரிக்கா) கடற்கரையில் கேட்டார். உடனே சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவிட 25 மைல் பரப்பளவில் வாழும் பலரும் தாங்களும் அப்படிக் கேட்டதாக   எழுதினர்   .

வழக்கம் போல குண்டு வெடிப்பா , அணுகுண்டு சோதனையா , நில அதிர்ச்சியா, விண்ணில் பறந்த சூப்பர்சானிக் விமானத்தின் சோனிக் பூம் ஓலியா என்று ஆராய்ந்ததில் அது எதுவு ம் இல்லை என்று தெரிந்தது.

அவர் ஜப்பான், பெல்ஜியம், அமெரிக்கா , ஹாலந்து முதலிய நாடுகளில் இவை வெவ்வேறு பெயர்களில் அதிசயமாக விளங்குவதைக் குறிப்பிடுகிறார். நியூயார்க் பிரதேசத்தில் செனெகா ஏரியில் கூட மர்ம ஒலிகள் கேட்கின்றன. உலகில் 30 பாலைவன மணற் குன்றுகளிலும் இப்படி விநோத சப்தங்கள் கேட்கின்றன.

சில இடங்களில் பூமிக்கடியில் சென்று நில அதிர்வுக்கு கருவிகளைப் புதைத்து வைக்கச் சென்றபோது திடீரென்று வெடி ஒலி கேட்ட அனுபங்களை அவருடன் பலர் பகிர்ந்துள்ளார்கள்   

   அமெரிக்காவில் கனக்டிகட் என்னும் இடத்தில் மூடஸ் கிராமத்தை அமெரிக்கப்  பழங்குடி மக்கள் ‘மச்சி மூடஸ்’ என்றே அழைப்பர்; இதன் பொருள் –’கெட்ட சப்தம் போடும் மூ டஸ்’ என்பதாகும். அதாவது பேய்பிடித்த ஊர். வினோத ஒலிகள் வரும் இடம்.

சமுத்திர ஒலிகள்

சமுத்திரத்திலிருந்து பல்வேறு சப்தங்கள் வருவதற்கு அதன் அடிப்பகுதியில் உள்ள குகைகள், மலைகள், பிளவுகள் , பேரலைகளில் ஏற்படும் நீர்க்குமுழிகள் முதலிய பல காரணங்கள் உள்ளன என்று ஹவாய் பல்கலைக்கழக ஒலி இயல் அறிஞர் மில்டன் கார்சஸ் சொல்கிறார்.

வானத்திலிருந்து வரும் பெரிய விண்கற்கள் (Meteors)  பூமியின் காற்றுமண்டலத்தில் நுழையும் போது பெரிய சப்தத்தை உண்டாக்கும் . ஒலி மெதுவாக பயணம் செய்வதால் அது எரிந்து விழுந்த பின்னர்தான் நமக்கு சப்தம் கேட்கும்; அப்போது வானத்தைப் பார்த்தால் அது அழகாக நீல நிறத்தில் அமைதியாகக் காட்சிதரும் . இதுவும் அதிசய சப்தங்களுக்கு ஒரு காரணம் . சில வகையான பருவ நிலையில்  சப்தம் அதிக தூரம் பயணம் செய்யும். இப்படிப் பல காரணங்களை விஞ்ஞானம்  நமக்குக்  கற்றுத்  தந்தாலும் விளக்க முடியாத பல செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகில் பாலைவனங்களில் ஏராளமான மணற் குன்றுகள் இருந்தபோதும், 30 இடங்களில் உள்ள மணல் மேடுகள் மட்டும் ஏன் பாடுகின்றன அல்லது ஊளை இடுகின்றன என்பதை எவராலும் விளக்க முடியவில்லை . எல்லாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில் அமைந்த கொள்கைகளே.

வட கரோலினா சப்த அதிசயம் பற்றி அறிவியல் கட்டுரை எழுதிய கேத் (Kate) கட்டுரையை முடிக்கும் அழகைப் பாருங்கள்-

வட கரோலினாவில் அன்றொரு நாள் ஜோடி ஸ்மித் கேட்ட சப்தத்துக்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நமது பூமி சாதுவான, வாய் பேசாத நல்ல பிள்ளை என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். நாம் கேட்கும் பல வகை ஒலிகளையும் நவீன கால  நடவடிக்கைகளின் எதிரொலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் கேட்கும் ஒலி , ஒருவேளை பூமியின் குரலாக  (Voice of Earth) இருக்கலாம் !

என் கருத்து

ஒரு வேளை பல மிருகங்கள் தங்கள் மொழியில் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வது போல பூமியும் மற்ற கிரகங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறதோ ? அல்லது நம்மிடம் எதாவது சொல்லிக்கொண்டு இருக்கிறதோ ! இனிமேயாவது கவனமாகச் செவி கொடுத்துக் கேட்போமாக!!

tags — பெங்களூரில் , மர்ம ஒலி, பாடும் மீன்கள் , பாடும் மணல் குன்றுகள்,மர்ம ஒலிகள்

—சுபம் —

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: