
Post No. 8101
Date uploaded in London – – – 4 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 57 – இரு மணிகள் – லக்ஷ்மிகாந்த் – பியாரேலால்!
R. Nanjappa
லக்ஷ்மிகாந்த் – பியாரேலால்!
இரு திறமைசாலியான சங்கீதக் கலைஞர்கள் 35 வருஷங்கள் (1963-98) ஒருங்கிணைந்து சுமார் 650 படங்களுக்கு இசையமைத்தார்கள்! (இந்த எண்ணிக்கை 635-750 என்று சொல்கிறார்கள்). இது உலகிலேயே மிகப்பெரிய சாதனையாக இருக்கவேண்டும்! சாமானிய விஷயமல்ல.
வருஷத்திற்கு 20 படங்கள் என்றால் அதன் தரம் என்னவாக இருக்கும்? படத்திற்கேற்ற, காலத்திற்கேற்ற இசை என்றாலும், காலம் கடந்து நிற்பவை எத்தனை?
லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் ஆரம்பகாலப் படங்களில் 1964ல், வந்தது “தோஸ்தி” என்ற படம் – அபார இசை. இன்றும் நினைவில் இருப்பது. இதற்கு அப்போதைய “ஹிந்து” பத்திரிகை நல்ல விமர்சனம் எழுதியது. ரஃபியின் அருமையான, இனிய பாடல்கள்! ஆனாலும் ‘முஹம்மது ரஃபியின் முதிர்ந்த குரல் அந்த (படத்தில் வந்த) இளம் நடிகர்களுக்குப் பொருந்தவில்லை’ என்பதுபோல் ஹிந்து எழுதியது! இதில் வந்த ‘மௌத் ஆர்கன்’ இசையை சிலாகித்து எழுதியது. அதை இசைத்தது ஆர்.டி.பர்மன்! ஒன்றிரண்டு நல்ல பாட்டுக்கள் என்றில்லாமல் படம் முழுதும் நல்ல இசையில் தோய்ந்தது! இதற்கு இணையாக இவர்களின் இன்னொரு படம் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை!
இவர்கள் இசையில் காலத்தை வென்று நிற்கும் இரு பாடல்களைப் பார்க்கலாம்.

ஏக் ப்யார் கா நக்மா ஹை
एक प्यार का नगमा है
मौजों की रवानी है
ज़िंदगी और कुछ भी नहीं
तेरी मेरी कहानी है
कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है
जीवन का मतलब तो, आना और जाना है
दो पल के जीवन से, इक उम्र चुरानी है
ज़िन्दगी और…
तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ
तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ
आँखों में समंदर है, आशाओं का पानी है
ज़िन्दगी और…
तूफ़ान तो आना है, आ कर चले जाना है
बादल है ये कुछ पल का, छा कर ढल जाना है
परछाईयाँ रह जाती, रह जाती निशानी हैं
ज़िन्दगी और…
ஏக் ப்யார் கா நக்மா ஹை
மௌஜோ(ன்) கீ ரவானீ ஹை
ஃஜிந்தகீ ஔர் குச் பீ நஹீ
தேரீ மேரீ கஹானீ ஹை
இது ஒரு அன்பின் கீதம்
இது மகிழ்ச்சியின் ஓட்டம்
நம் இருவரின் கதை–இதுதான் வாழ்க்கை!
குச் பாகர் கோனா ஹை, குச் கோகர் பானா ஹை
ஜீவன் கா மத்லப் தோ, ஆனா ஔர் ஜானா ஹை
தோ பல் கா ஜீவன் ஸே, இக் உம்ரு சுரானீ ஹை,
ஃஜிந்தகீ ஔர் குச் பீ நஹீ.
சிலவற்றைப் பெற்றால் சிலவற்றை இழக்கிறோம்,
சிலவற்றை இழப்பதில் சிலவற்றைப் பெறுகிறோம்!-
வாழ்க்கை என்றால் வருவதும் போவதும் தானே!
இது ஒரு க்ஷணமே நீடிக்கும் வாழ்க்கை
இதிலேயே முழு வாழ்நாளையும் அடையவேண்டும்!
நம் இருவரின் கதை தான்– வாழ்க்கை என்பது வேறு என்ன?…
தூ தார் ஹை நதியா கீ, மை தேரா கினாரா ஹூ(ன்)
தூ மேரா ஸஹாரா ஹை, மை தேரா ஸஹாரா ஹூ(ன்)
ஆன்கோ மஏ ஸமந்தர் ஹை, ஆஷாவோ(ன்) கா பானீ ஹை
ஃஜிந்த கீ ஔர்..
நீ நதியின் நீரோட்டம், நான் அதன் கரைகள்
நீ தான் எனக்குத் துணை, நான் உனக்குத்துணை
ஆசைகள் என்ற நீர் அடங்கிய சமுத்திரமே கண்கள்!
வாழ்க்கை என்பது வேறு என்ன…?
தூஃபான் தோ ஆனா ஹை, ஆகர் சலே ஜானா ஹை
பாதல் ஹை யே குச் பல் கா, சா கர் டல் ஜானா ஹை
பர்சாயியா(ன்) ரஹ ஜாதீ, ரஹ் ஜாதீ நிஷா நீ ஹை
ஃஜிந்தகீ ஔர் குச் பீ நஹீ...
புயல் வருவது வரும், வந்து அதே போய்விடும்
இந்த மேகங்கள் சில கணங்களுக்கே, சப்தித்துப் பின் நீங்கிவிடும்
அதன் நிழல்கள் தங்கிவிடும், சில அடையாளங்கள் தங்கிவிடும்
வாழ்க்கை என்பது வேறு என்ன…
Song: Ek pyar ka nagma hai Film: Shor, 1972 Lyrics: Santosh Anand
Music: Laxmikant Pyarelal Singers: Lata Mangeshkar & Mukesh
YouTube Link: https://www.youtube.com/watch?v=FpfSLiSpBRw
This is a beautiful song, with very nice lyrics. Like all good lyrics, it has symbolic references and can be understood at different levels. This has beautiful orchestration, and a nice beat-rhythm, unlike the usual LP fare. The violin is haunting.
இப்பாட்டு இன்றும் மனதில் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இந்தப் பாட்டை பெயர்பெற்ற கஃஜல் பாடகர் ஜக்ஜித் சிங்கும் பாடியிருக்கிறார். அதையும் கேளுங்கள்;
Link: https://www.youtube.com/watch?v=q7GKVTMcfj0
யே ஜீவன் ஹை
ये जीवन है, इस जीवन का
यही है, यही है, यही है रंगरूप
थोड़े ग़म हैं, थोड़ी खुशियाँ
यही है, यही है, यही है छाँव धूप
ये ना सोचो, इसमें अपनी, हार है के जीत है
उसे अपना लो जो भी, जीवन की रीत है
ये जिद छोड़ो, यूं ना तोड़ो, हर पल इक दर्पण है
ये जीवन है, इस जीवन का…
धन से ना दुनिया से, घर से ना द्वार से
साँसों की डोर बंधी है, प्रीतम के प्यार से
दुनिया छूटे, पर ना टूटे, ये कैसा बंधन है
ये जीवन है, इस जीवन का…

யே ஜீவன் ஹை இஸ் ஜீவன் கா
யஹீ ஹை யஹீ ஹை யஹீ ஹை ரங்க் ரூப்
தோடீ கம் ஹை, தோடீ குஷியா(ன்)
யஹீ ஹை, யஹீ ஹை, யஹீ ஹை சா(ன்)வ், தூப்
இது தான் வாழ்க்கை
இது தான் வாழ்க்கையின் நிறமும் உருவமும்
சிறிது துக்கம், சிறிது மகிழ்ச்சி–
இப்படித்தான் நிழலும் ஒளியும் மாறி மாறி வரும்
இது தான் வாழ்க்கை
யே நா ஸோசோ இஸ்மே அப்னீ ஹார் ஹை கே ஜீத் ஹை
உஸே அப்னா லோ ஜோ பீ ஜீவன் கீ ரீத் ஹை
யே ஃஜித் சோடோ, யூ(ன்) நா தோடோ, ஹர் பல் இக் தர்பண் ஹை
யே ஜீவன் ஹை….
இதில் நமக்கு என்ன தோல்வி வெற்றி என்று யோசிக்காதே!
வாழ்க்கையின் போக்கில் என்ன வருகிறதோ அதை உனதென்று ஏற்றுக்கொள்
பிடிவாதத்தை விடு, இருக்கும் நல்ல நேரத்தைக் கெடுத்துக்கொள்ளாதே
ஒவ்வொரு கணமும் கண்ணாடி போன்றது (இதை உடைக்காதே)
இது தான் வாழ்க்கை
தன் ஸே நா துனியாஸே, கர் ஸே நா த்வார் ஸே
ஸா(ன்)ஸோ கீ டோர் பந்தீ ஹை, ப்ரீதம் கே ப்யார் ஸே
துனியா சூடே, பர் நா டூடே, யே கைஸா பந்தன் ஹை
யே ஜீ வன் ஹை
செல்வம், உலகம், வீடு வாசல்–இதெல்லால் என்ன?
இவையா நம் மூச்சை இணைப்பவை?
அன்பர்களின் அன்பினாலல்லவா அவர்களின் மூச்சுக்காற்று
இணைக்கப்பட்டிருக்கிறது!
உலகத்தை விட்டுப் போகலாம்–
ஆனால் இந்த பந்தம் நீங்காது–இது அத்தகைய பந்தம்
இதுதான் வாழ்க்கை..
Song: Ye jeevan hai Film: Piya Ka Ghar 1972 Lyrics: Anand Bakshi
Music: Laxmikant Pyarelal Singer: Kishore Kumar
YouTube link: https://www.youtube.com/watch?v=NNHbax_kcq4
எத்தனை அருமையான பாட்டு! என்ன அழகான கவிதை! பெரிய விஷயங்களை எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிட்டார் ஆனந்த் பக்ஷி!
இந்தப் பாட்டின் ரிகார்டிங்கின் போது ஒரு சிக்கல்! பலமுறை ரிஹர்சல் ஆகியும் லக்ஷ்மி-பியாரேவுக்கு திருப்தியாகவில்லை. பாட்டில் வேண்டிய பாவம் வரவில்லை என்றார்கள். கிஷோர் குமார் கீழே உட்கார்ந்துவிட்டார். கன்னத்தில் கைவைத்துக்கொண்டு, ‘ஏ ஜீவன் ஹை:” என்று மெல்லிய குரலில் பாடத் தொடங்கிவிட்டார்! பியாரேலால் குதித்தார்! ஆஹா, இதுதான் வேண்டியது; தாதா, இப்படியே பாடவும் என, கிஷோர்குமாரும் எழுந்து நின்று கன்னத்தில் கைவைத்தபடியே பாடி ரிகார்டிங்க் நடந்தது! இந்த விஷயத்தை பியாரேலால் கிஷோர்குமார் மகன் அமீத் குமாரிடம் ஒரு நிகழ்ச்சியில் சொன்னார்!
லக்ஷ்மிகாந்தம்+பியாரேலாலம்+கிஷோர்குமாரம் = அமுத கானம்!
.
Virus-free. www.avast.com |
Attachments area
Preview YouTube video Ek pyar Nagma hai Hindi ENglish Subtitles Full Song HD
Ek pyar Nagma hai Hindi ENglish Subtitles Full Song HD
Preview YouTube video Ek Pyar Ka Nagma Hai | Jagjit Singh | Live Concert Video