
Post No. 8115
Date uploaded in London – – – 6 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 59 – இரு மணிகள் – முகுல் ராய்!
R. Nanjappa
முகுல் ராய் [1926-2009] கீதா தத்தின் சகோதரர். இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். முதல் படம் “சைலாப்” 1956 கீதா தத்தே எடுத்தது, குருதத் இயக்கினார். முகுல் ராய் நல்ல இசையமைத்திருந்தார் – ஆனால் படம் ஓடவில்லை. இதில் கீதா தத் தன் செல்வம் அனைத்தையும் இழந்து, இன்சால்வென்ட் ஆனார். 1958ல் முகுல் ராயே ‘டிடெக்டிவ்” என்று படமெடுத்தார், சக்தி சமந்தா இயக்கி படம் பெரும் வெற்றிகண்டது. இதில் இவருடைய இசையும் நன்கு அமைந்தது. இதில் கீதா தத் பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றன. இருந்தும் என்ன, அவரை பிற படங்களில் பாட குருதத் அனுமதிக்கவில்லை! இந்தப் படத்திலிருந்து இரு பாடல்களைப் பார்க்கலாம்.
தோ சமக்தீ ஆங்கோ மே
दो चमकती आँखों में कल ख़्वाब सुनहरा था जितना
हाय, ज़िंदगी तेरी राहों में आज अँधेरा है उतना
हमने सोचा था जीवन में फूल चाँद और तारे हैं
क्या ख़बर थी साथ में इनके काँटे और अंगारे हैं
हमपे क़िस्मत हँस रही है, कल हँसे थे हम जितना दो चमकती आँखों में …
इतने आँसू इतनी आहें दिल के दामन में लेकर जाने
कब तक चलना होगा सूनी–सूनी राहों पर ऐ मुक़द्दर
ये तो बता दे मुझको सहना है कितना
दो चमकती आँखों में …

தோ சமக்தீ ஆங்கோ மே கல் க்வாப் ஸுனஹ்ரா தா ஜித்னா
ஹாய் ஃஜிந்தகீ தேரீ ராஹ் மே ஆஜ் அந்தேரா ஹை உத்னா
எத்தனை இனிய கனவுகளுடன் இந்த இரு கண்கள்
நேற்று ஒளிமிகுந்து விளங்கின!
வாழ்க்கைப் பாதையில் இன்று அத்தனை இருட்டு மண்டிவிட்டது!
ஹம்னே ஸோசா தா ஜீவன் மே ஃபூல், சாந்த் ஔர் தாரே ஹை
க்யா கபர் தீ ஸாத் மே இன்கே கான்டே ஔர் அங்காரே ஹை
ஹம் பே கிஸ்மத் ஹ(ன்)ஸீ ரஹீ ஹை,
கல் ஹன்ஸேதே ஹம் ஜித்னா
தோ சமக்தீ ஆங்கோ மே….
வாழ்க்கை என்றால் மலர்கள், நிலவு தாரகைகள் என்று நினைத்தேன்
இவற்றுடன் முள்ளும் நெருப்பும் இருக்குமென்று யாருக்குத் தெரியும்?
நான் நேற்று சிரித்து மகிழ்ந்திருந்தேன்
இன்று என்னைப் பார்த்து அந்த அளவுக்கு விதி சிரிக்கிறது!
ஒளிமிகுந்த இரு கண்கள்..
இத்னே ஆன்ஸூ, இத்னீ ஆஹே தில் கே தாமன் மே லேகர்
ஜானே கப் தக் சல்னா ஹோகா ஸூனீ ஸூனீ ராஹோ(ன்) பர்
ஏ முகத்தர் யே தோ பதா தே முஜ்கோ ஸஹனா ஹை கித்னா
தோ சமக்தீ ஆங்கோ மே.
இவ்வளவு கண்ணீர், இத்தனை துக்கத்தை இதயத்தில் சுமந்து
இந்த வெற்றுப் பாதைகளில் இன்னும் எத்தனை காலம் நடக்கவேண்டுமோ?
தெரியவில்லை.
விதியே–இதையாவது சொல்:
நான் இன்னும் எத்தனை சகித்துக்கொள்ள வேண்டும்?
Song: Do chamakti aankho(n) mein Film: Detective 1958 Lyrics: Shailendra
Music: Mukul Roy Singer: Geeta Dutt.
YouTube links: https://www.youtube.com/watch?v=ZuyIgBBkfhU
இதயத்தைத் தொடும் சோகம் இந்தப் பாட்டில் அடக்கியிருக்கிறார் ஷைலேந்த்ரா. எளிய சொற்களில் உணர்ச்சிக் கடலை அடக்கிவிட்டார்.
கீதா தத்தின் குரலில் இயற்கையாகவே சோகம் இழையோடுகிறது. சொந்த வாழ்க்கையிலும் அவர் மிகுந்த சோகம் அனுபவித்தார்.
இந்தப் பாட்டின் மெட்டு Harry Belafonte பாடிய Jamaica Farewell என்ற பாட்டின் மீது அமைந்தது. ஆனால் பெரிய மாற்றங்களும் செய்திருக்கிறார். ‘மூட்” முற்றிலும் மாறிவிட்டது! மூலத்தைக் கேட்க:
YouTube lInk; https://www.youtube.com/watch?v=KFFlWtlDRqk
முஜ்கோ தும் ஜோ மிலே
मुझको तुम जो मिले, ये जहाँ मिल गया
तुम जो मेरे दिल में हँसे, दिल का कमल देखो खिल गया
मुझको तुम जो मिले, ये जहाँ मिल गया
ये भीगती हुई फ़िज़ा, बरस रही है चाँदनी तारों ने मिलके छेड़ दी,
मधुर मिलन की रागिनी लेके क़रार आया है प्यार,
क्या है अगर मेरा दिल गया मुझको तुम जो मिले,
ये जहाँ मिल गया
जिसपे चल रहे हैं हम, है प्यार का ये रास्ता चाँद और सितारों का,
बहार का ये रास्ता लेके क़रार आया है प्यार,
क्या है अगर मेरा दिल गया मुझको तुम जो मिले, ये जहाँ मिल गया
मेरे सुहाने ख़्वाब–सी तुम मेरे सामने रहो ऐसी हसीन रात है,
दिल कहे सहर न हो लेके क़रार आया है प्यार,
क्या है अगर मेरा दिल गया मुझको तुम जो मिले, ये जहाँ मिल गया …
முஜ்கோ தும் ஜோ மிலே, யே ஜஹா(ன்) மில் கயா
தும் ஜோ மேரே தில் மே ஹ(ன்)ஸே,
தில் கா கமல் தேகோ கில் கயா
முஜ்கோ தும் ஜோ மிலே…
நீ எனக்குக் கிடைத்துவிட்டாய், இந்த உலகமே கிடைத்துவிட்டது!
நீ என் மனதில் சிரித்தவுடன், இந்த இதயத் தாமரை மலர்ந்துவிட்டது!
நீ எனக்குக் கிடைத்துவிட்டாய்!.
யே பீக்தீ ஹுயீய் ஃபிஃஜா, பரஸ் ரஹீ ஹை சாந்த்னீ
தாரோ நே மில்கே சேட் தீ, மதுர் மிலன் கீ ராகினீ
லேகே கரார், ஆயா ஹை ப்யார், க்யா ஹை அகர் மேரா தில் கயா
முஜ்கோ தும் ஜோ மிலே..
எத்தனை இனிய சூழல், நிலவு கிரணங்களைப் பொழிகிறது!
தாரகைகள் அழகிய கீதம் இசைக்கத் தொடங்கிவிட்டன!
அமைதி தாங்கி அன்பு வந்துவிட்டது, இனி என் மனது காணாமல்போனால் தான் என்ன!
நீ எனக்குக் கிடைத்து விட்டாய்…
ஜிஸ்பே சல் ரஹே ஹை ஹம், ஹை ப்யார் கா யே ராஸ்தா
சாந்த் ஔர் ஸிதாரோ(ன்) கா, பஹார் கா யே ராஸ்தா
லேகே கரார், ஆயாஹை ப்யார், க்யா ஹை அகர் மேரா தில் கயா
முஜ்கோ தும் ஜோ மிலே….
நாம் அன்பின் பாதையில் போகிறோம்
இது நிலவின் பாதை, தாரகைகளின் பாதை, வசந்தத்தின் பாதை!
அமைதி தாங்கி அன்பு மலர்ந்துவிட்டது, இனி என் மனது காணாமல்போனால்தான் என்ன!
நீ எனக்குக் கிடைட்துவிட்டாய்…
மேரே ஸுஹானே க்வாப்–ஸீ தும் மேரே ஸாம்னே ரஹோ
ஐஸீ ஹஸீன் ராத் ஹை, தில் கஹே ஸஹர் ந ஹோ
லேகே கரார் ஆயா ஹை ப்யார், க்யா ஹை அகர் மேரா தில் கயா
முஜ்கோ தும் ஜோ மிலே..
நீயே என் அழகிய கனவு– நீ என்றும் என் அருகிலேயே இரு!
இத்தனை இனிய இரவு, விடியவே வேண்டாம் என மனம் விரும்புகிறது!
அமைதி தாங்கி அன்பு மலர்ந்து விட்டது, இனி என் மனது காணாமல் போனால்தான் என்ன!
நீ எனக்குக் கிடைத்து விட்டாய்….
Song: Mujhko tum jo mile Film: Detective, 1958. Lyrics: Shailendra
Music: Mukul Roy Singers: Hemant Kumar & Geeta Dutt
YouTube link: https://www.youtube.com/watch?v=r_AKKWy4ayg
What a lovely duet this is! How soothing! What a sweet melody and how nicely sung!
ஏதோ மாஜிக் செய்துவிட்டார் முகுல் ராய்!
இப்போது வரும் பாட்டுக்களில் ஏன் இப்படி இனிமை இல்லாமல் போய்விட்டது?
Virus-free. www.avast.com |
Attachments area
Preview YouTube video Geeta Dutt – Detective (1958) – ‘do chamakti aankhon mein’
Geeta Dutt – Detective (1958) – ‘do chamakti aankhon mein’
do chamakti aankhon mein..geeta dutt-shailendra-mukul roy- tribute to nightingale geeta dutt
Preview YouTube video Harry Belafonte – Jamaica Farewell
Harry Belafonte – Jamaica Farewell
Preview YouTube video mujh ko tum jo mile..Hemant Kumar_Geeta Dutt_Shailendra_Mukul Roy..a tribute
mujh ko tum jo mile..Hemant Kumar_Geeta Dutt_Shailendra_Mukul Roy..a tribute
Preview YouTube video Mujhko Tum Jo Mile Detective Geeta Dutt