அதிசய அரிசி மருத்துவம்! (Post No.8129)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8129

Date uploaded in London – 8 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அரிசிச் சோற்றையே மருந்தாகக் கொடுக்கும் அபூர்வ மருத்துவ முறை கேரளத்தில் உள்ளது. ஆயுர்வேத மருத்துவசாலைகள் இதைப் பயன்படுத்துகின்றன. இது பற்றிய ஒரு சுவையான சம்பவத்தைக் கேளுங்கள்.

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி.ராய் (Dr P C Roy); அவர் முதலமைச்சராக இருந்தபோதும் கல்கத்தாவில் தனது வீட்டில் நோயாளிகளைப் பார்த்து மருந்து கொடுத்து வந்தார். ஒருவருடைய மகன் நோஞ்சானாகவும் வியாதிக்காரனாகவும் இருந்தான். அவருக்கும் ஒரு நாள் டாக்டர் ராய் அவர்களைப் பார்க்க வாய்ப்பு கிட்டியது. பையனை ஒரு பார்வை பார்த்தார் ராய். கவலையே படாதீர்கள் தினமும் காலையில் 2 ரசகுல்லாக்கள் கொடுங்கள் அதுதான் இந்த நோய்க்கு நல்ல மருந்து என்று சொல்லி அனுப்பினார் ( ரசகுல்லா என்பது கிட்டத்தட்ட குளோப் ஜாமுனைப் போன்றது. பால் பொருட்களால் ஆன இனிப்பு) .

ஆயினும் நோயாளியின் அப்பா விளக்கம் கேட்க முற்பட்டபோது டாக்டர் டாக்டர் ராய் சொன்னார்- உங்கள் மகனுக்குத் தேவையான அளவு புரதச் சத்து (Protein)  உடலில் இல்லை. பாலிலும் சீஸ் (Cheese) போன்ற பாலாடைக் கட்டியிலும் கேசின் (casein) என்னும் புரதச் சத்து உள்ளது; அது உங்கள் புதல்வனுக்குத் தேவை என்று விளக்கினார்.

அரிசிச் சோற்றையே முக்கிய உணவாகக் கொண்ட மேற்கு வங்கத்தில் புரதச் சத்து குறைவு என்பதால் இந்த வைத்தியம் பொருத்தமானதே. ஆயினும் அரிசிச் சோற்றையே முக்கிய உணவாகக் கொண்ட கேரளத்தில் அந்த சோற்றையே மருந்தாகப் பயன்படுத்துவது விநோதமாகத் தோன்றும்.. ஆனால் அவர்கள் இப்படிப் பயன்படுத்தும் அரிசி விசேஷ வகை அரிசி ஆகும். நீவார என்னும் நெல் ‘வன நெல், குள நெல் அல்லது நீர் வாரம்’ என்று அழைக்கப்படும். இது பயிரிடாமலே காடுகளில் தானாக வளர்வதால் இதை பழங்காலத்தில் ரிஷி முனிவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதே போல ஷஷ்டிகா என்னும் அரிசி வகை 60 நாட்களில் பலன்தரும் நெல் வகையாகும் . இதையும் பயன்படுத்துவர் .

நீவார என்னும் அரிசியை யஜுர் வேதமும், பாணினியின் அஷ்டாத்யாயீயும் குறிப்பிடுகின்றன. ஆகையால் இவை 3000 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஷஷ்டிகா என்னும் 60 நாளில் வளரும் நெல் வகையையும் பாணினி குறிப்பிடுகிறார். ஆகையால் இவை அனைத்தும் குறைந்தது 2700 ஆண்டுகளாகத் தெரிந்தவையே.

ஷஷ்டிகா வகை அரிசியைக் கொண்டு ஆக்கப்படும் சோற்றை ஞவரகிழி என்ற பெயரில் மருந்தாக பயன்படுத்துவர் . இந்த வகை மருத்துவத்தை சரகர் , சுஸ்ருதர் போன்ற மருத்துவர்களும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத மருத்துவ நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

இந்த நெல்லுக்கு காரரிசி, செந்தினை என்னும் பெயர்களும் உண்டு என்பதை அகராதி மூலம் அறியமுடிகிறது

குறிப்பிட்ட வகை அரிசியினால் ஆன சோற்றை கிழியாகக் கட்டி — மூட்டை முடிச்சு- போல கட்டி உடம்பு முழுதும் மசாஜ் செய்வார்கள்; சோற்றை வடிப்பதற்கு முன் அதில் வேறு சில மூலிகைகளையும் சேர்ப்பார்கள். அதே போல உடலில் மஸாஜ் செய்யும்போது மூலிகைத் தைலங்களையும் தடவுகின்றனர். இதை ‘ஷஷ்டிகா அன்ன லேப’ என்றும் அழைப்பர் . இது முக்கியமாக மூட்டு வலி, வாத நோய்களுக்கு நல்ல பலன் தருகிறது

கிழி என்றால் முடிச்சாகக் கட்டுதல் என்று பொருள்; பொற்கிழி என்று நாம் கேள்விப்படுகிறோம். அது போல சாதத்தை துணியில் முடிச்சாகக் கட்டி அதைக் கொண்டு  உடலில் ஒத்தடம் கொடுப்பர்.

நீவார கஞ்சியை உள்ளுக்கு சாப்பிடுவதும் ஒரு சிகிச்சை ஆகும்.  இது உடல் நோஞ்சாசனாக , எதைச் சாப்பிட்டாலும் உடல் தேராத ஆட்களுக்குத் தருவார்கள். பொதுவாகவே இதை கற்கட மாதத்தில் (ஆடி ) சாப்பிடுவதால் கார்கிட கஞ்சி, மருந்துக் கஞ்சி என்றும் குறிப்பிடுவர்

இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் மருத்துவ குணமுள்ள சுமார் 50 வகை நெல் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளையும் நாட்டு வைத்தியர்களும் பழங்குடி மக்களும் பயன்படுத்துகின்றனர். ஒரிசா, உத்தர கன்னட பகுதிகளில் கூட மக்கள் பல வகை நெற்பயிர்களை தோல்  வியாதி சிகிச்சையில் உபயோகிக்கின்றனர்.

செலவே இல்லாமல் பயிரிட்டு, எதிர் விளைவு (side effects) எதுவும் இல்லாமல் சாப்பிட்டு குணம் அடையும் இந்த அரிய  வகைச் சிகிசசை முறை பரவ வேண்டும் ; மருத்துவ குணம் உள்ள நெல் வகைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

பல பெயர்கள் அந்தந்த மொழி பேசுவோர் வாய் வழி வந்தமையால் அவற்றின் ஆங்கில வடிவத்தைப் பட்டியல் இடுகிறேன்.

Shastika , Nivara or Njavara (in Malayalam) nirvara or Senthinai (In Tamil)—used for Rheumatism and Neural disorders

Aalcha in Chattisgarh area used for curing Pimples

Baissor – treatment for chronic Head ache and Epilepsy

Gathuhan, Karhani, Kalimooch varieties used respectively for treating Rheumatism, Paralysis and Skin Disorders

In Jeypore area of Orissa, tribal people use Mehar, Sariphul  in treatment for various ailments

In Uttara Kannada district of Karnataka, Atikaya variety as health tonic and Kari Bhatta to treat skin infections.

இவை அனைத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புது டில்லியில்  நடந்த சர்வதேச அரிசி மகாநாட்டில் (International Rice Congress) சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் ஆகும். ஆர்கனைசர் (Organiser,5-11-2006) பத்திரிகையில் இதன் சுருக்கம் வெளியானது .

தொல்பொருட் துறை நிபுணர்களும் இது பற்றி சுவையான தகவல்களைத் தருகின்றனர். இயற்கையாக காட்டிலும், மேட்டிலும் வளரும் இந்த பல வகையான தானியங்களின் மாதிரிகள் 8000 ஆண்டுகளுக்கு முந்தைய வசிப்பிடங்களில் (Advanced Mesolithic  or Pre Neolithic Periods) ) இருந்து கிடைக்கின்றன என்பர் .

Tags — அரிசி மருத்துவம், ஷஷ்டிகா,  நீவார, ஞவரகிழி .

–subham–

Leave a comment

4 Comments

  1. nparamasivam1951

     /  June 8, 2020

    இது இனிய செய்தி. முக்கியமாக, சர்க்கரை நோய் ஆரம்ப நிலை மக்கள் மகவும் விரும்புவர். ஆரம்ப நிலை மக்களுக்கே, நமது பழகிய உணவான அரிசி சாப்பாட்டை மருத்துவர்கள் நிறுத்தும் இன்றைய காலத்தில், இது இனிய செய்தி. 15ஆண்டுகளாக ஏன் ஒருவரும் இதில் தொடர்ந்து ஆராயவில்லை என்பது ஒரு துயரம்.

  2. R Nanjappa

     /  June 8, 2020

    இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கணக்கான நெல்வகைகள் இருந்தன. [ நெல் மட்டும் என்ன, ஒவ்வொரு தானியத்திலும் பல வகைகள் இருந்தன.]
    1920-30களில் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் மட்டும் சுமார் 2000 நெல் வகைகள் இருப்பதை டாக்டர் ஆல்பர்ட் ஹோவார்ட் Dr.Albert Howard கண்டறிந்தார். அவற்றை பாரம்பரிய வழியில் [ துளியும் ரசாயனக் கலப்பில்லாமல்] பயிரிடும் முறைகளையும், மண் வளத்தைப் பாதுகாக்கும் முறைகளையும் நம் விவசாயிகளிடமிருந்து கற்றறிந்து பின்னர் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தினார். இவையே இன்று Organic Farming என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவி விட்டது. ஆல்பர்ட் ஹோவார்ட் எழுதிய An Agricultural Testament என்ற அருமையான புத்தகம் இந்தியர்கள் அவசியம் படிக்கவேண்டியதாகும்..
    அரிசி, தானியங்களில் பல வகைகள் இருந்தாலும், அவை பயிரிடப்படும் இடம், மண் வளம், நீரின் தன்மை, அந்தந்த வகையின் தனித்த இயல்பு, பயிரிடும் முறை ஆகியவற்றால் அவற்றின் குணம் வேறுபடும். இந்த வேறு பட்ட குணங்களை வைத்தே அவற்றின் மருத்துவப் பயன் கணக்கிடப்படுகிறது. இன்றும் கூட அசல் பாஸ்மதி அரிசியை அதிகம் பயன்படுத்தினால் வாயுத்தொல்லை வருவதை பலரும் அறிவர்.
    மருத்துவ குணம் தவிர, அவற்றின் சாதாரணப் பயன்பாடும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக இட்லி, தோசைக்கு பயன்படும் அரிசி, சோறு சமைக்கப் பயன்படுவதில்லை. அதேபோல் முறுக்கு, பிற பட்சணங்கள் செய்யத் தேவையான உலர்ந்த மாவுக்குத் தேவையான அரிசி, சாதாரணமாக சோறு சமைக்கும் அரிசியிலிருந்து வேறுபட்டது. இன்று இத்தகைய பல வகைகளை ஹைபிரிட் வகைகள் இல்லாமல் செய்துவிட்டன. Hybridization is a commercial fraud in the name of science. Unfortunately , people do not understand.
    60 வருஷங்களுக்கு முன்புவரையில் தமிழ் நாட்டிலும் பலவகை அரிசிகள் இருந்தன, கிச்சிடி சம்பா, துய்யமல்லி, மணவாரி, குதிரைச் சம்பா, கோணச்சம்பா, ஒன்றைச் சம்பா, மிளகுச் சம்பா போன்ற 20ம்க்கும் மேற்பட்ட வகைகளைச் சிற்றூரில் கூட சாதாரணமாக அரிசிக்கடைகளில் பார்த்திருக்கிறேன். ஹைபிரிட் ரகங்கள் என்று வந்தபின் இவை அனைத்தும் அனேகமாக அழிந்துவிட்டன என்றே சொல்லாம். மாப்பிள்ளைச் சம்பா, சீரக சம்பா போன்றவை தமிழ் நாட்டில் தப்பிப் பிழைத்தன. துய்யமல்லியும் சிலரின் அரிய முயற்சியால் மீண்டும் வருகிறது.
    Dr.R.H, Richharia இந்தியாவின் சிறந்த விவசாய விஞ்ஞானியாக இருந்தவர். இவர் 19,000 ( ஆம், பத்தொன்பதாயிரம் ) இந்திய நெல்வகைகளைச் சேகரித்து வைத்தார். இந்தியாவில் இரண்டு லட்சம் நெல்வகைகள் இருந்தன என்பது இவர் கணிப்பு. இந்தியாவின் நெல்வகைகளின் ரசாயன விவரங்களை கடத்திக்கொண்டு போக Manila-Philippines லிருந்து இயங்கிவரும் அமெரிக்க ஸ்தாபனம் International Rice Research Institute முயன்று ஓரளவு வெற்றியும் கண்டது. இந்த முயற்சிக்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தியும் துணைபோனார். நமது உயர் அதிகாரிகளும் துணையாக இருந்தனர். [ பெயர் சொல்ல விரும்பவில்லை] இத்தகைய முயற்சிகளை அமெரிக்க, பிற பன்னாட்டு ரசாயன உர, விதைக்கம்பெனிகள் இன்னமும் செய்துவருகின்றன.
    இத்தகைய முயற்சிகளுக்கு டாக்டர் ரிச்சாரியா பெரிய எதிரியாக இருந்தார், அதனால் இந்திரா அம்மையார் அவரை அவமதித்து நடத்தினார்.
    The larger the variety in food grains, the greater is our food security. Thoughtless hybridization in the name of science has reduced the rice varieties in India from several thousands to a very few,, thus jeopardising our food security, and placing us at the mercy of multinational seed and chemical companies. .

  3. R Nanjappa

     /  June 8, 2020

    + nparamasivam1951
    The problem with rice today is on account of its hybridization , polishing, use of chemicals in cultivation and allied processes. The rice that is commercially available is pure starch, devoid of nutrients, with high GI . It is easily and quickly ingested, boosting blood sugar levels very fast. Today’s wheat is also unhealthy, containing Gluten due to hybridization and chemicalisation. Ragi too has high GI, but it takes longer to digest, so the blood sugar levels do not go up fast.
    Unpolished, organic rice takes longer to digest and is therefore considered better for diabetic patients, provided the amount is within the daily limit allowed, eg 80 grams or what is permitted by the individual doctor.
    Medical opinion is divided on the issue today. There are top medical experts who advise that all cabohydrates should be avoided, while including fats,, while others hold the directly opposite view.
    The basic problem with diabetes seems to be-not blood sugar or insulin levels as such , but what is called INSULIN RESISTANCE. This is especially the case in Type 2 Diabetes. [ There is enough insulin, but the cells do not accept it for some reason.]This is caused by too much consumption of refined carbohydrates and sugar. in our modern lifestyle. [ Most snacks and biscuits and fast food contain these plus fructose in large amounts.] These give rise to obesity , overweight and other conditions now diagnosed as Prediabetes.(Diabesity)
    Diabetes is a condition due to wrong food, and has to be corrected mainly by adopting the right food. But as in many medical conditions, there is no unanimity in the medical profession.
    Ayurvedic doctors do treat diabetes, but they ask one to continue with the allopathic medicines , even while taking Ayurvedic prescriptions!
    At present, no variety of rice or wheat seems to be completely safe for diabetics, because the very methods of rice cultivation have changed.[ We need dependable research studies based on actual cases, not theories or stray cases.] Unpolished, brown organic rice can be a help, within the limits allowed. The most effective treatment today for Type 2 diabetes seems to be what is termed “INTERMITTENT FASTING” as recommended by Dr.Jason Fung, along with his recommendations for food.
    You may read the book””The Blood Sugar Solution” by Dr.Mark Hyman [ Yellow Kite Books, 2016] if you are interested. This book discusses all aspects of this blood sugar problem from various angles.
    Theoretically , Indians having only vegetarian food should not have diabetes. But rice eaters are more prone to it now. The main remedy seems to be VEGAN food( plant based food minus dairy products, carbohydrates derived from plants, and Omega3 fats derived from plants.)Remember, our vegetables are also now extensively treated with chemicals. So careful selection is also involved at every stage. The Chapter on Diabetes in the book “How Not To Die” by Dr. Michael Greger [ PAN Books, 2018 ] is also informative. Many talks of these doctors are also available on YouTube now. They will give further references. Many of their suggestions are practical and can be followed.
    We do not know how many Indian doctors follow such new research. There is one Dr. Vijayaraghavan in Chennai.

  4. nparamasivam1951

     /  June 8, 2020

    Thanks Mr.R.Nanjappa. I will try to buy the two books mentioned and get an insight of diabetic cure. In Chennai, Dr.Mohan Diabetes Centre usually advises to continue the same rice food habits for rice eaters but reduce the rice and increase vegetables in ratio of 1:3. Also reducing quantity-per-meal but increasing the frequency is also advised.
    Anyhow, I got very good insight. Thanks

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: