
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8133
Date uploaded in London – – – 9 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
ரெப் லிவிங்ஸ்டன்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி ரெப் லிவிங்ஸ்டன். அவர் Bibilomancy Oracle ப்ராஜெக்ட் என்று ஒன்றை 2012இல் ஆரம்பித்தார்.
காலம் காலமாக இருந்து வரும் உண்மைகள் நம்மை வழி நடத்தும் என்பது அவரது முடிந்த முடிபு.
ஒரு கேள்வியைக் கேளுங்கள். ஒரு புத்தகத்தை எடுங்கள். தற்செயலாக அதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பக்கத்தில் உங்கள் கேள்விக்கான பதில் ஒரு செய்தி வடிவத்தில் இருக்கும்.
விக்கிபீடியாவின் படி 1753ஆம் ஆண்டில் பைபிளோமேன்ஸி கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது; அதற்கான ஆவணம் இருக்கிறது.
இன்னொரு நடைமுறை ஸ்டிசோமேன்ஸி (Stitchomancy). இதன்படி ஏதேனும் ஒரு புத்தகத்தில் உள்ள பல வரிகளைத் தேர்ந்தெடுத்துப் பதிலைக் காண்பது ஒரு பழக்கம்.
பலிக்குமா, பலிக்காதா என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து அமைகிறது.
ரெப் லிவிங்ஸ்டன் எந்தக் கேள்விக்கும் தனக்குச் சரியான பதில் கிடைக்கிறது என்கிறார்.
அவரிடம் இது பற்றி அவருக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தைக் கூறுமாறு கேட்ட போது அவர் ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினார்.
இந்தச் சம்பவம் விக்கிபீடியாவிலும் உள்ளது.
ராபர்ட் ப்ரௌனிங்கின் அனுபவம்!
எலிஸபத் பேரட்டுடனான அவரது தொடர்பு பற்றி அவர் இப்படிக் கயிறு சார்த்திப் பார்த்திருக்கிறார் – அதாவது தற்செயல் தேர்வாக ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்திருக்கிறார். அவர் எடுத்த புத்தகம் – Cerutti’s Italian Grammar!
இது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. என்றாலும் கூட யதேச்சையாக ஒரு பக்கத்தைத் திறந்தார். அதில் வந்த வரி அவரைப் பெரிதும் கவர்ந்தது: if we love in the other world as we do in this, I shall love thee to eternity’ (which was a translation exercise).”
“இந்த உலகில் நாம் ஒருவரை ஒருவர் காதலிப்பது போல அடுத்த உலகிலும் நேசித்தால், நான் உன்னை ஊழிஊழி காலம் வரை காதலிப்பேன்” (இது ஒரு மொழிபெயர்ப்பு பயிற்சிக்காக அந்த இலக்கணப் புத்தகத்தில் வந்த வரி)
பின்னால் எலிஸபத் பேரட், எலிஸபத் பேரட் ப்ரௌனிங்காக மாறிய சரித்திரம் அனைவரும் அறிந்தது தான்.
(Reb Livingston : -My favorite bibliomancy example is this from Wikipedia: “English poet Robert Browning used this method to ask about the fate of his enchantment to Elizabeth Barret (later known as Elizabeth Barret Browning). He was at first disappointed to choose the book “Cerutti’s Italian Grammar”, but on randomly opening it his eyes fell on the following sentence: ‘if we love in the other world as we do in this, I shall love thee to eternity’ (which was a translation exercise).”)
ஆக இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் உலகெங்கும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
உலகில் எவ்வளவோ நம்ப முடியாத புதிர்கள்; ஆச்சரியங்கள்!
அவற்றில் இதுவும் ஒன்று!
*
சரி, இந்தப் பழக்கத்தைக் கிண்டல் செய்து வந்துள்ள ஒரு ஜோக்கையும் இங்கு பார்த்து விடுவோமா?!
Bibliomancy is the practice of opening the pages of the Bible at random and deriving solace or a solution for a nagging problem.
Once, a person too nervous and shaking, opened and on the first occasion came across Matthew 27:5 – “(Judas) went away and hanged himself”.
He turned again and has eyes fell upon Luke – 10:17 “go and do likewise”.
Much dispirited he tremulously turned another page and was totally unnerved to find “What you are about to do, do quickly”. (John-13:27)
tag- கயிறு சார்த்திப் பார்த்தல்-2
xxx