
I AM BINNING ALL THE OLD NEWS PAPER CUTTINGS ; HERE ARE SOME MAATER WHICH WILL BE OF INTEREST TO MANY, PARTICULARLY, FUTURE RESARCHERS.
பழைய நியூஸ் பேப்பர் கட்டிங்குகளைத் தூக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறேன். சில அதிசயச் செய்திகள் எதிர்கால ஆராய்ச் சியாளர்களுக்கு பயன்படலாம்.
உலகிலேயே அதிகமான துப்பாக்கி வியாபாரிகள் அமெரிக்காவில்தான் உள்ளனர். ஒரு பலசரக்குக் கடையைக் கண்டுபிடிப்பதைவிட துப்பாக்கிக் கடையை கண்டு பிடிப்பது எளிதாம் . பத்து வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்குப்படி 1,30,000 துப்பாக்கி வியாபாரிகள் உளர்.


XXXX

அமெரிக்காவில் ஒஹையோவில் கொலம்பஸ் மிருகக் காட்ச்சி சாலையில் இருந்த மலைப்பாம்பு இறந்து விட்டது . அதன் நீ ளம் 24 அடி. வயது 18. எடை 136 கிலோ. பர்மா நாட்டு மலைப் பாம்பு..
XXXX

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடையே ஒரு வினோதமான உறவு உண்டு. மிருகங்களின் கண் , பல், தோல் முதலியவற்றில் கிருமிகள், பூச்சிகள் ஆகியன வாழும். அவை அந்த விலங்குகளுக்குப் பெரிய தொல்லை. ஆனால் பறவைகளுக்கோ அவை உணவு. ஆகையால் அவைகளை எடுக்க வரும்போது அந்த விலங்குகள் பறவைகளை அன்புடன் வரவேற்கும். முதலை வாய்க்குள் கூட பறவைகள் புகுந்து சுத்தம் செய்யும். ஆனால் ஒரு தீ ங்கும் ஏற்படாது. இதோ லண் ட னில் ஒரு மானின் கண்களில் உள்ள பூச்சிகளை பறவை எடுப்பதைப் பாருங்கள் .
Xxxx

பாசி மழை
பாச மழை (அன்பு), பாச வலை (தமிழ் சினிமா), தவளை மழை , மீன் மழை , ரத்த நிறத்தில் மழை , முதலியன பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆ னால் கடல் பாசி மழை போல வானத்திலிருந்து வருவதும், விழுவதும் அபூர்வமே. இங்கிலாந்தில் பெர்க்லி என்னும் நகரில் இப்படி பாசி மலை பெய்தது. எல்லோருக்கும் வியப்பு. 32 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு சாமர்செட் பகுதியிலுள்ள கிளிவ்டன் கடற்கரையில் இருந்த பாசிகளை வாயுதேவன் சுமந்து வந்து தெரு முழுக்க வீசி மகிழ்ந்தான்.
விசித்திரமான பருவ நிலை இது போல பல விந்தைகளைச் செய்யும்.யாரோ உங்களுடைய எதிரிகள் இப்படி விஷமம் செய்வதாக நினைத்து ஆத்திரப்பட்டு விடாதீர்கள்.


xxxx

மண் உண்ட கண்ணன் கதை நம் எல்லோருக்கும் தெரியும்; யசோதை, அவன் வாயைத் திறக்கச் சொன்னவுடன் மண்ணுக்குப் பதிலாக உலகத்தையே கண்டாள். நீங்களும் உலகத்தையே சாப்பிட இதோ ஒரு ட்ரிக். ஒரு ஆப்பிளை எடுத்து, அதன் மீது உலக மேப் தெரியும்படி அழகாகக் கடியுங்கள் ‘ஆப்பிளே உலகம் உலகமே ஆப்பிள்’ என்ற வடிவம் வந்தபின்னர் , இதோ பார், ஒரு நிமிடத்தில் உலகையே விழுங்குகிறேன் பார் என்று கர்ஜியுங்கள். பின்னர் இதோ பார், என்று காட்டிவிட்டு உலக ஆப்பிளைக் கடித்துக் கடித்துச் சாப்பிடுங்கள் . பயங்கர ‘கை தட்டல்’ ஒலி

xxxx