
WRITTEN BY R. NANJAPPA
Post No. 8141
Date uploaded in London – – – 10 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் -63- இரு மணிகள் – தாலாட்டு (Lori)!
R. Nanjappa
தாலாட்டுப் பாடல்கள்!
குழந்தைகளைப் பாட்டுப் பாடித் தூங்க வைப்பது இந்தியர் வழக்கம்- நேற்றுவரை இருந்தது. இன்று மாறிவரும் வாழ்க்கை முறையால் அனேகமாக மறைந்து விட்டது எனலாம்.
சினிமாவில் பல நல்ல பாடல்கள் குழந்தைகளுக்காக வந்திருக்கின்றன. அவற்றில் இரண்டு முன்பு பார்த்தோம் இன்னும் இரண்டு அருமையான பாடல்களைப் பார்க்கலாம்.
ஆ ஜாரீ ஆ, நிந்தியா
आ जा री आ, निंदिया तू आ
झिलमिल सितारों से उतर
आँखों में आ, सपनें सजा
आ जा री आ, निंदिया तू आ
सोई कली, सोया चमन
पीपल तले सोई हवा
सब रंग गए एक रंग में
तूने ये क्या जादू किया
संसार की रानी है तू
राजा है मेरा लाड़ला
दुनिया है मेरे गोद में
पूरा हुआ सपना मेरा
ஆ ஜா ரீ ஆ, நிந்தியா தூ ஆ
ஃஜில்மில் ஸிதாரோ(ன்) ஸே உத்தர்
ஆன் கோமே ஆ, ஸப்னே ஸஜா
ஆ ஜா ரீ ஆ, நிந்தியா தூ ஆ
நித்திரை, வாயேன்! நீ இங்கு வா!
ஜொலிக்கும் தாரகையிலிருந்து இறங்கி வா
இங்கு கண்களில் கனவைப் புனை!
நித்திரை, நீ இங்கே வா!
ஸோயீ கலீ, ஸோயா சமன்
பீபல் தலே ஸோயீ ஹவா
ஸப் ரங்க் கயே ஏக் ரங்க் மே
தூ நே யே க்யா ஜாதூ கியா
பூக்கள் தூங்கிவிட்டன, சோலை உறங்கிவிட்டது
அரசமரத்தின் அடியில் காற்றும் தூங்கிவிட்டது!
அனைத்தும் உறக்கம் என்ற ஒரே வண்ணத்தில் அடங்கி விட்டன!
நீ என்ன மாயம் செய்து விட்டாய்!
நித்திரை, நீ இங்கே வா!
ஸம்ஸார் கீ ரானீ ஹை தூ
ராஜா ஹை மேரே லாட்லா
துனியா ஹை மேரே கோத் மே
பூரா ஹுவா ஸப்னா மேரா
நீயே சம்சாரத்தின் ராணி!
என் செல்வம் தான் இங்கு ராஜா
இந்த உலகமே என் மடியில் இருக்கிறது!
என் கனவு நிறைவேறியது!
நித்திரையே, நீ இங்கே வா!
Song: Aa jaa ri aa, nindya tu aa Film: Do Bigha ZAmin, 1953 Lyrics: Shailendra
Music: Salil Chowdhury Singer: Lata Mangeshkar.
YouTube link: https://www.youtube.com/watch?v=HuNCbL38eUw
ஷைலேந்த்ராவின் மிக எளிய கவிதை- ஆனால் காவியக் கடல்!
மை காவூ(ன்) தூ சுப் ஹோஜா
मैं गाऊँ, तू चुप हो जा
मैं जागूँ रे तू सो जा
धरती की काया सोई अम्बर की माया सोई
झिलमिल तारों के नीचे सपनों की छाया सोई
मैं ढूँढू रे तू खो जा
जाने हवायें कहाँ खोई सागर की भी लहरें सोई
दुनिया का सब दुखडा भर के तेरी दो अँखियाँ रे क्यों रोई
आँसू के शबनम धो जा
आँसू तेरे मुझको दे दे बदले में मेरी हँसी ले ले
तेरा तो मन सुख से खेले मेरा ह्रदय तेरा दुःख झेले
नए बीज ख़ुशी के बो जा
மை காவூ(ன்) தூ சுப் ஹோஜா
மை ஜாகூ(ன்) ரே தூ ஸோஜா
நான் பாடுகிறேன், நீ சப்தம் செய்யாதே
நான் விழித்திருப்பேன், நீ தூங்கு!
தர்தீ கீ காயா ஸோயீ, அம்பர் கீ மாயா ஸோயீ
ஃஜில்மில் தாரோ(ன்) கே நீசே, சப்னோ(ன்) கீ சாயா ஸோயீ
மை டூண்டூ(ன்) ரே தூ கோஜா
பூமியும் சுருண்டு படுத்துவிட்டது,
வானமும் அதன் ஜாலத்தை மறைத்து உறங்கிவிட்டது
மினுக்கும் தாரகைகளுக்குக் கீழே எங்கும் இன்பக் கனவு பரந்திருக்கிறது!
நீ எங்காவது ஒளிந்துகொள், நான் உன்னைத் தேடுவேன்!
ஜானே ஹவாய் கஹா(ன்) கோயீ, ஸாகர் கே பீ லஹரே ஸோயீ
துனியா கா ஸாப் துக்டா பர் கே தேரே தோ அன்கியா ரே க்யோ(ன்) ரோயே
ஆன்ஸூ கே ஷப்னம் தோ ஜா
காற்று எங்குபோய் ஒளிந்துகொண்டதோ தெரியவில்லை!
சமுத்திரத்தின் அலைகளும் உறங்கிவிட்டன
உலகத்தின் துக்கத்தை எல்லாம் சுமந்து,
ஏன் உன் இரு கண்களும் கண்ணீர் வடிக்கின்றன?
கண்ணீரைத் துடைத்துக்கொள்.
ஆன்ஸூ தேரே முஜ் கோ தே தே, பத்லே மே மேரே ஹன்ஸீ லே லே
தேரா தோ மன் ஸுக் ஸே கேலே, மேரா ஹருதய் தேரா துக் ஜேலே
நயீ பீஜ் குஷீ கே போ ஜா
மை காவூ(ன்) தூ சுப் ஹோஜா
உன் கண்ணீரை எனக்குத் தந்துவிடு!
என் சிரிப்பை நீ எடுத்துக்கொள்!
சந்தோஷத்தின் புதிய விதையை விதைத்துவிடு.
நான் பாடுகிறேன், நீ சப்தம் செய்யாதே
Song: Main Gaavun tu so ja Film: Do Ankhen Barah Hath 1956 Lyrics: Bharat Vyas
Music: Vasant Desai Singer: Lata Mangeshkar.
YouTube links:
இந்த மாதிரிப் பாடல்களைப் பற்றி நாம் என்ன எழுத முடியும்? இப்போது இப்படிப்பட்ட பாடல்கள் வருமா?
ஆயிரம் கம்ப்யூடர்கள் சேர்ந்தாலும் இது சாத்தியமா? இசையமைத்த வசந்த் தேசாயை எப்படிப் புகழ்வது!
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதத்தைப் பாருங்கள் ! வாயில்லா ஜீவன்களும் இசைக்கு அடிமையானதை எவ்வளவு தத்ருபமாகக் காட்டியிருக்கிறார் சாந்தாராம்!
நமது திரையுலக சரித்திரத்திலேயே இது போன்ற படம் வந்ததில்லை.
இந்த இரண்டு பாடல்களும் “லோரீ” என்ற இந்தவகைப் பாடல்களுக்கே இலக்கணம் வகுப்பதாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட பாடல்கள் இருப்பதையாவது இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்!
.
Attachments area
Aa Ri Aaja Nindiya Tu (HD) – Do Bigha Zamin Songs – Balraj Sahni – Meena Kumari – Lata Mangeshkar
Preview YouTube video Aaja Ri Aa Nindiya Tu Aa / Do Bigha Zamin 1953
Aaja Ri Aa Nindiya Tu Aa / Do Bigha Zamin 1953
Preview YouTube video main gaoon tu chup ho ja..lata-best lullaby-do aankhen barah hath
main gaoon tu chup ho ja..lata-best lullaby-do aankhen barah hath
Preview YouTube video MAIN GAAOON TU CHUP HO JA-BHARAT VYAS-VASANT DESAI (DO AANKHEIN BARAH HAATH)
MAIN GAAOON TU CHUP HO JA-BHARAT VYAS-VASANT DESAI (DO AANKHEIN BARAH HAATH )