
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8146
Date uploaded in London – – –11 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
உயர்ந்தவர்களின் உள்ளம்!
ச.நாகராஜன்
உபகாரம் பெற்றால் துன்பம் அடைவர்!
உபகாரேண தூயந்தே ந சஹந்தேனுகம்பிதாம் |
ஆபத்ஸ்வபி துராராவ்யா நித்யதுக்கா மனஸ்வின: ||
உதவி மற்றவர்களால் தமக்குச் செய்யப்படும் போது அவர்கள் வேதனைப்படுகிறார்கள்; ஏனெனில் மற்றவர்களின் இரக்கத்தை அவர்களால் பொறுக்க முடிவதில்லை; கஷ்டகாலத்தில் கூட மற்றவர்கள் உதவி செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை. அந்த உயர்ந்த உள்ளங்கள் (மற்றவர்களின் நலனுக்காக நித்ய துக்கத்தை (தினசரி கவலைப்படுவதை) கொண்டிருக்கின்றனர்.
When help Is rendered to them they are pained, they do not tolerate others sympathy, they do not allow themselves to be served even during calamities; Thus high-minded men are ever worried (for the sake of others)
(Translation by A.A.R.)
*

பாம்புக்கு பால் வார்ப்பது போல நீசருக்குச் செய்யும் உதவி!
உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே |
பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம் ||
நீசர்களுக்குச் செய்யும் உதவி (உபகாரம்) அபகாரமாகவே (கெடுதலாகவே) அமைகிறது. பாலை அருந்தும் பாம்புகள், அவற்றின் விஷத்தையே கூட்டுகிறது.
Service rendered to a low person brings only disadvantage; enjoyment of milk increases only the poison of snakes.
*
வீரன் செய்நன்றி மறப்பதில்லை!
உபகாரேண வீரஸ்து ப்ரதிகாரேண யுஜ்யதே |
அக்ருதக்ஞோ ப்ரதிக்ரதோ ஹந்தி சத்தவவதாம் மன: ||
ஒரு வீரனானவன் மற்றவர்களிடமிருந்து பெரும் உதவியை நன்றியுடன் நினைத்து பதிலுக்கு நல்லதையே செய்கிறான். ஆனால் நன்றி கெட்ட ஒருவனோ அனைவராலும் நிந்திக்கப்படுகிறான்.
A chivalrous man feels grateful for the help he gets from others and does them good deed in return; but an ungrateful wretch is disdained by all.
(Translation by T.S.Raghavacharya)
*

தூரத்தில் இருக்கும் சூரிய, சந்திரர் போல உதவி புரிதல் வேண்டும்!
உபகார்யோபகாரித்வம் தூரே சேத் தா ஹி மித்ரதா |
புஷ்பவந்தௌ கிமாசன்னௌ பஷ்ய கைரவப்த்யயோ ||
தூரத்தில் இருந்தாலும் கூட உதவியைப் பெறுவதும் திருப்பிச் செய்வதுமே உண்மையான நட்பாகும்; (உண்மையைத் தான்) பாருங்களேன், சூரியனும் சந்திரனும் தாமரை மலருக்கும் அல்லி மலருக்கும் மிக அருகிலா இருக்கின்றன!
If the process of receiving and rendering help is done from afar that indeed is (true) friendship; see (the truth) are the sun and the moon quite near to the lotus and the lily ? (Translation by A.A.R.)
*
தீயதைச் செய்பவனுக்கும் நல்லதைச் செய்பவரே மகான்!
உபகாரிஷு ய: சாது: சாதுத்வே தஸ்ய கோ குண: |
அபகாரிஷு ய: சாது: ஸ சாது: சந்திருச்யதே ||
நல்லதைச் செய்யும் ஒருவனுக்கு நல்லதைச் செய்வதில் என்ன மகத்தான குணம் இருக்கிறது?! தீயதைச் செய்தாலும் நல்லதை திருப்பிச் செய்வதையே மகான்கள் குணமாகக் கொண்டுள்ளனர்.
And is there any saintlyhood
in recompensing good with good?
But worthy men go seeking still
the saints returning good for ill.
(Translation by A.W.Ryder)
*

சூரிய, சந்திரர்,பாம்பு,