
Post No. 8155
Date uploaded in London – 12 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
போர்ச்சுகல் நாட்டின் கோ மாதா கோவிலை
கிறிஸ்தவர்கள் உடைத்த கொடுமை (Post No.8155)
கிருஷ்ண பரமாத்மா 7 காளைகளை அடக்கி நப்பின்னையை மணந்ததை நா ம் அறிவோம். சங்க இலக்கிய நூலான ‘கலித்தொகை’யும் கண்ணன் செய்த லீலைகளை வருணித்து ஜல்லிக்கட்டு விளையாட்டின் தோற்றத்தைக் காட்டுவதை நாம் அறிவோம்.
கிருஷ்ண பரமாத்மா துவக்கி வைத்த இந்த மஞசு விரட்டு இன்று தமிழ் நாட்டிலும் ஸ்பெயின் (Spain) மற்றும் ஸ்பானிய கலாசாரம் பரவிய இடங்களிலும் நடைபெறுகிறது. ஆனால் நாம் இப்போது காளைகளைக் கொல்வதில்லை ; மற்ற கலாசாரங்களில் கொன்று விடுவார்கள் . இத்துடன் இணைத்துள்ள படத்தில் (Portugal) போர்ச்சுக்கல் நாட்டில் கோ மாதா (Cow Goddess) கோவிலை கிறிஸ்தவர்கள் இடித்த தினத்தைக் கொண்டாடுவதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதியும் உள்ளனர்.

ஊரின் பெயர் – பாண்டி டி லிமா (Ponte de Lima) ; ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவின் பெயர் – வாசஸ் டாஸ் கார்டோஸ் (Vacha das Cordos) .அவ்வளவும் ஸம்ஸ்கிருத சொற்கள்; வாசஸ் என்பது பசு. கோ மாதா ; நாம் இந்தியாவில் வங்கம் என்பதை வடக்கே பெங்கால் என்பர் ; அதாவது உலகம் முழுதும் ‘வ’ என்னும் எழுத்தும் ‘ப’ என்னும் எழுத்தும் இடம் மாறும் ; வாசஸ் என்பது பசுஸ் ; கார்டோ என்பது சரடு, அதாவது கயிறு.; ‘க’ என்னும் எழுத்தும் ‘ச’ என்னும் எழுத்தும் இடம் மாறும்; கார்ட் என்பது சரடு. போர்ச்சுகிசிய மொழியிலும் இந்த விழாவின் பெயர் பசுவைக் கயிற்றால் இழுப்பது (Cow by Ropes or Strings) என்று சொல்லுவர் ; என்சைக்ளோபீடியாவுக்குள் புகுந்தால் பசுவுக்குப் பதிலாக இப்போது காளை மாட்டைப் பயன்படுத்துவதையும் காணலாம். முதலில் அந்த ஊர் கிராமக் கோவிலில் எகிப்து நாட்டின் ஐசிஸ் (Isis) எனப்படும் கோ மாதா — பசு தெய்வம் – கோவில் இருந்ததாகவும் அதை கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவக் கோவிலாக மாற்றிய நாளை ஆண்டுதோறும் ஜூன்மாதம் கொண்டாடுவதாகவும் எழுதி இருப்பர்.
அன்று பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குழுமி இருப்பார்கள். காளை மாட்டை ‘சர்ச்’சுக்குக் கொண்டு சென்று அதை போதையூட்டும் இரண்டு விஷ அம்புகளால் தாக்குவர். பின்னர் அதை நகர தெருக்களில் அவிழ்த்து விடுவார்கள் ; அதை வீரர்கள் அடக்கி விடுவார்கள்.

என்சைக்ளோபீடியாவில் மேலும் சில தகவல் உளது ; கிறிஸ்தவ பாதிரிகள் பசு தெய்வத்தின் சிலையை நகரத்தில் கயிறு கட்டி இழுத்து வந்து, சுக்கு நூறாக உடைத்து இந்த விழாவை ஏற்படுத்தியதாவும் (Cow Goddess Statue Broken into pieces) இந்த தெய்வத்தை கிறிஸ்தவ மதம் உலகில் தோன்றுவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் பினீஷியர்கள் (Phoenicians) இந்த நாட்டுக்குக் கொண்டு வந்ததாகவும் எழுதி வைத்துக்குள்ளனர் . இன்றும் கூட காளை மாட்டை அம்புகளால் தாக்கிவிட்டு அதை மூன்று முறை ‘சர்ச்’சை வலம் வரச் செய்து தெருவுக்கு இழுத்துப் போகிறார்கள். இப்படி ‘மூன்று முறை’ வலம் வருவது இன்றும் இந்துக்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்.
புனிதமான ‘கோ மாதா’ கோவிலை மதம் மாற்றியதோடு இல்லாமல் பசுவுக்குப் பதில் காளைக்கு போதை ஏற்றிக் கொடுமைப் படுத்துவதை எல்லா புஸ்தகங்களிலும் டூரிஸ்ட் பிரசுரங்களில் பெருமையாக எழுதியும் வைத்துள்ளனர்.
உலகில் பிராணி வதையைத் தடுப்பதாகக் கூறி இந்தியாவில் அவ்வப்போது அயோக்கியத்தனங்களில் ஈடுபடும் சர்வதேச அயோக்கியர்கள் இதைக் கண்டுகொள்வதுமில்லை. ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின் போது கொல்லப்படும் ஒட்டகங்களுக்கு முதலைக்கு கண்ணீர் விடுவதுமில்லை..


****
கிரேக்க நாட்டில் மினோவன் (Minoan) நாகரீகத்திலும் காளை அடக்கும் காட்சி உளது; சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீ கத்தில் (Indus-Sarasvati River Civilization) எருமை மீது ஈட்டியுடன் பாயும் காட்சி உளது . கோ மாதா வழிபாடு, காமதேனு வழிபாடு வெவ்வேறு கதைகளுடன் உலகெங்கிலும் இருக்கிறது. நம்மூர் ஸ்தல புராணங்களைப் போல அதே கடவுளுக்கு வெவ்வேறு ஊர்களில் வேறு வேறு கதைகள் இருக்கும்.
போர்ச்சுகல், கோ மாதா, கோவில்,
கிறிஸ்தவர்கள் Ponte de Lima, Vacas das Cordas
–SUBHAM–