
Post No. 8159
Date uploaded in London – 12 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

உடல் ஓட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளில் (Siamese Twins) பல வகை உண்டு. உடலின் எந்தப் பகுதிகள் எந்த அளவுக்கு ஒட்டி இருக்கின்றன என்பதை ப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றனர் ; சில குழந்தைகளை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்க முடிகிறது; மற்றவர்கள் அப்படியே வாழ்கின்றனர். இவர்களுடைய நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் , செக்ஸ் SEX வாழ்க்கை பற்றி நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருக்கின்றன .
50 லட்சம் குழந்தை பிறந்தால் , ஒரு குழந்தை இப்படிப் பிறக்கிறது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தலை இரண்டும் ஒட்டிப்பிறந்த இரண்டு சகோதரிகள் பற்றி 2014 வரை டெலிவிஷனில் செய்திகள் வந்தன. கிறிஸ்டா (Christa) , டாட்டியானா (Tatiana) ஹோகன் என்ற இரண்டு பெண் குழந்தைகளின் தலைகளும் ஓட்டிப் பிறந்தன.இவர்கள் பற்றிய சுவையான செய்திகள் –
ஒருவர் பார்த்தால் மற்றவளுக்கும் அது தெரியும். ஒரு பெண்ணின் கண்களை மூடிவிட்டு மற்றொரு பெண்ணை ஒரு பொருளை பார்க்கச் சொன்னால் பொருளைப் பார்க்காதவளும் சொல்லிவிடுவாள் . ஒரு பொம்மையைப் பார்க்காத பெண்ணும் அந்த பொம்மையை சரியான விதத்தில் எடுக்கும் அற்புதத்தைக் காணலாம்.
இருவரின் (feelings) உணர்ச்சியும் ஒன்றே. ஒரு பெண்ணைக் கண்டித்தால் மற்றொரு பெண்ணும் அழுவாள் . இந்தச் செய்தி பத்திரிகையில் வந்த பொழுது அவர்களுக்கு வயது 4. இப்போது 14 வயது இருக்கும். மூளையின் செயல்பாடு குறித்து ஆராயும் மருத்துவர்கள் இவர்களுடைய செயல்பாட்டை ஆராய்கின்றனர்.
தாயின் பெயர் பெலிசியா சிம்ஸ். தந்தையின் பெயர் பிரெண்டன் ஹோகன். அவருக்கு 22 வயதில் இரட்டைக் குழந்தை பிறந்தது. இவர்களைக் கவனித்துவரும் குடும்ப டாக்டர் சொன்னார்- “ஒரு பெண்ணின் கண்ணில் உள்ள ரெடினா Retina திரையில் விழும் உருவத்தை மற்றொரு பெண் அறிவாள் .உடலில் உணர்வுகளை அறியும் மூளையின் தலாமஸ் (Thalamus) பகுதி ஒட்டியிருப்பதே இதற்கு காரணம் என்கிறார்.
தாயின் கர்ப்பத்தில் 5 மாதத்தில்தான் குழந்தையின் தலை ஒட்டியிருப்பது தெரியவந்தது . சிசேரியன் (Caesarean Section) அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளைப் பிறப்பித்தனர். இதுவரை இந்த வகையில் பிறந்த குழந்தைகள் எட்டு. அவற்றில் மூன்று மட்டுமே உயிர் பிழைத்தன .
tags — 2 தலை, மூளை ஒன்று, மருத்துவ அதிசயம்

–SUBHAM—