லட்சம் புதிர்கள் – 11 (151 முதல் 200 முடிய) (Post N0.8161)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8161

Date uploaded in London – – –13 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

லட்சம் புதிர்கள் – 10 கட்டுரை எண் 7892 வெளியான தேதி 28-4-2020

லட்சம் புதிர்கள் – 11 (151 முதல் 200 முடிய)

ச.நாகராஜன்

கேள்விகள் :

ராமாயணம்

151) லோக பாலர்கள் மொத்தம் எத்தனை பேர்?

152) குசனுக்கு எத்தனை மனைவிகள்?

153) லவனுக்கு எத்தனை மனைவிகள்?

154) பத்து அவதாரங்களில் ராமாவதாரம் எத்தனையாவது அவதாரம்?

155) ராமரின் வனவாசம் எத்தனை ஆண்டுகள்?

156) ராமர் திரும்பி வரும் வரை பரதன் எதை பூஜித்து அயோத்தியை ஆண்டு வந்தார்?

157) சீதையைத் தேடி லங்கைக்குச் சென்றது யார்?

158) தன் அடையாளமாக அசோகவனத்தில் ஹனுமானிடம் சீதை தந்தது என்ன?

159) மிதிலையில் ராமர் நாண் ஏற்றிய வில் யார் தந்தது?

160) எந்த திதியில் இராவணனை இராமர் வென்றார்?

161) இராம இராவண யுத்தத்தில் இராமருக்குத் தேர் ஓட்டியது யார்?

162) அயோத்தியின் முதல் அரசன் யார்?

163) ஜனகர் எந்த நாட்டின் அரசர்?

164) இறுதியில் வைகுந்தம் ஏக ராமர் எந்த நதியில் இறங்கினார்?

165) அரக்கன் சுபாகுவை வதம் செய்தது யார்?

166) மாரீசனைக் கொன்றது யார்?

167) கும்பகர்ணனை வதம் செய்தது யார்?

168) லவணாசுரன் ராவணனுக்கு என்ன உறவு?

169) மேகநாதனின் மாமா யார்?

170) பரசுராமரின் தந்தை யார்?

171) பரசுராமரின் தாய் யார்?

172) சுக்ரீவனின் தந்தை பெயர் என்ன?

173) ஹனுமானின் தந்தை யார்?

174) இராவணனின் மனைவி பெயர் என்ன?

175) மண்டோதரியைத் தவிர இராவணனுக்கு எத்தனை மனைவிகள்?

176) இராவணனுக்குப் பயந்து காகமாக உருவெடுத்தது யார்?

177) மேகதூதனின் இன்னொரு பெயர் என்ன?

178) இந்திரஜித்திற்கு அந்தப் பெயர் எதனால் ஏற்பட்டது?

179) சீதைக்கு ஜானகி என்ற பெயர் எப்படி வந்தது?

180) மஹரிஷி பரசுராமருக்கு பார்கவ என்ற பெயர் ஏன் வந்தது?

181) தனுர் வேதத்தில் எத்தனை வகை உண்டு?

182) இக்ஷ்வாகுவிற்கு எத்தனை புதல்வர்கள்?

183) ரோமபாதர் எந்த தேசத்தின் அரசர்?

184) புரு எந்த பிரதேசத்தின் அரசன்?

185) சீதையைத் தேட பாண்டிய நாட்டிற்கு சுக்ரீவன் அனுப்பியது யாரை?

186) பரதன் தன் இளமைப் பருவத்தைக் கழித்தது எங்கு?

187) ஹனுமான், அங்கதன் சீதையைத் தேடச் சென்ற திசை எந்த திசை?

188) எந்த திசைக்குக் குபேரன் அதிபதி?

189) கேகய நாட்டின் தலைநகர் எது?

190) ராமர், சீதை, லக்ஷ்மணன் தங்கியிருந்த பஞ்சவடி எந்த நதிக் கரையில் அமைந்துள்ளது?

191) கர,தூஷணர் வசித்த இடம் எது?

192) ராமர் ராவணனை எந்த அஸ்திரத்தை ஏவி வதம் செய்தார்?

193) யாரிடமிருந்து இராவணன் வாளைப் பெற்றான்?

194) இராவணனின் வாளின் பெயர் என்ன?

195) ராமருக்கு தண்டசக்ரா, காலசக்ரா, விஷ்ணுசக்ரா, ஐந்திரசக்ரா ஆகிய் ஆயுதங்களைத் தந்தது யார்?

196) நாராயணாஸ்திரத்தை ராமருக்குக் கொடுத்தது யார்?

197) பகீரதனின் புதல்வன் பெயர் என்ன?

198) இந்திரனின் தேர் சாரதி யார்?

199) மாதலியின் புதல்வன் பெயர் என்ன?

200) சத்ருக்னனின் புதல்வன் பெயர் என்ன?

விடைகள் :

151) 8 152) 1 153) 2 154) ஏழாவது 155) 14 156) பாதுகை 157) ஹனுமான் 158) சூடாமணி 159) சிவபிரான் தந்த வில் 160) தசமி 161) மாதலி 162) இக்ஷ்வாகு 163) மிதிலை 164) சரயு 165) ராமர் 166) ராமர் 167) ராமர் 168)சகோதரியின் மகன் 169) துந்துபி 170) ஜமதக்னி முனிவர் 171) ரேணுகா 172) ரிக்ஷராஜன் 173) கேசரி 174) மண்டோதரி 175) 1000 176) யமன் 177) இந்திரஜித் 178) போரில் இந்திரனைத் தோற்கடித்ததால் 179) ஜனகரின் புதல்வி என்பதால் 180) அவர் பிருகு வம்சத்தில் பிறந்ததால் 181) 4 182) 100 183) அங்க தேசம் 184) காசி 185) அங்கதனை 186) தாய் மாமன் வீட்டில் 187) தெற்கு 188) வடக்கு 189) ராஜக்ருஹம் 190) கோதாவரி நதி 191) தண்டக வனம் 192) ப்ரஹ்மாஸ்திரம் 193) சிவபிரானிடமிருந்து 194) சந்திரஹாஸம் 195) மஹரிஷி விஸ்வாமித்திரர்

196) மஹரிஷி விஸ்வாமித்திரர் 197) காகுஸ்தன் 198) மாதலி 199) கோமுக் 200) சுபாகு

tag– லட்சம் புதிர்கள் – 11

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: