
Post No. 8169
Date uploaded in London – – – 14 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாட்டுகள் – 67 – இரு மணிகள் – வடக்கு நோக்கி!
R. Nanjappa
வடக்கு நோக்கி!
பல ஹிந்திப் பாட்டுக்களின் மெட்டுக்கள் தமிழ்ப் படங்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து அங்கு போனது அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.
சாஸ்திரிய இசையில் நிலை வேறு. அடிப்படை ஸ்வரங்கள் ஹிந்துஸ்தானி, கர்னாடகம் இரண்டு முறைகளிலும் ஒன்றுதான், ஆனால் கையாளும் முறை வித்தியாசப்படும். பல ராகங்கள் ஒன்றாக இருந்தாலும் முற்றிலும் வேறான ராகங்களும் உண்டு.
ஹிந்துஸ்தானி இசையிலிருந்து நமக்கு வந்த ராகம் ‘த்விஜாவன்தி’. ஜெய்ஜெய்வன்தி என்ற ராகத்தை இப்பெயரில் நமக்கு அறிமுகப் படுத்தியவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர். அவர் தந்தை ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதர் உருவாக்கிய ராகம் ஹம்ஸத்வனி. இது இங்கிருந்து ஹிந்துஸ்தானிக்குப் போனது! அது அங்கு மிகவும் விரும்பத்தக்க ராகமாகிவிட்டது!
இப்படி நம்மிடமிருந்து வடக்கே போன இரு ராகங்களில் அமைந்த பாடல்களைப் பார்க்கலாம்
.
ஜா தோஸே நஹீ போலூ(ன்) கன்ஹையா
aaa
jaa tose nahin boloon Kanhaiyya
jaa tose nahin boloon Kanhaiyya
raah chalat pakdi mori bainyaa
raah chalat pakdi mori bainyaa
jaa tose nahin
jaa jaa tose nahin
jaa tose nahin boloon Kanhaiyya
roothi Raadhike
Krishna manaawat
murli ki saugandh uthaawat
roothi Raadhike
aaaa aaa aaa aaa
roothi Raadhike
Krishna manaawat
murli ki saugandh uthaawat
aaaa
maanat nahin Raaadhaa
maanat nahin Raaadhaa
maanat nahin Raaadhaa
jaa
jaa
jaa
aa tose nahin boloon
raah chalat pakdi mori bainyaa
raah chalat pakdi mori bainyaa
jaa tose nahin
jaa jaa tose nahin
jaa tose nahin boloon Kanhaiyya
runak jhunak jab choodiyaan khanki
lahar lahar odhaniya lahki
runak jhunak jab choodiyaan khanki
aaa
runak jhunak jab choodiyaan khanki
lahar lahar odhaniya lahki
mridang dahkaa
maan gayi raadhaa
maan gayi raadhaa
maan gayi raadhaa
Song: Ja Tose nahi boloon Film: Parivar, 1956 Lyrics: Shailendra
Music: Salil Chowdhury Singers: Manna Dey & Lata Mangeshkar.
YouTube Link: https://www.youtube.com/watch?v=xX2dai-9tfs
ஹம்ஸ்த்வனி ராகத்தில் அமைந்த அருமையான பாட்டு. எளிய நாட்டியப் பாடலாக அமைந்தது. ஷைலேந்த்ராவின் சாஹித்யம் எளியது- இது ராதா-க்ருஷ்ணரின் ஊடலைப் பற்றியது.
‘க்ருஷ்ணா, நீ போ, நான் உன்னுடன் பேசமாட்டேன், நீ என் கையைப் பிடித்தால் தான் என்ன, நான் பேச மாட்டேன்’ என்கிறாள் ராதை. கிருஷ்ணரின் குழலோ, குரலோ வேலை செய்யவில்லை. முதலில் ராதை அவற்றைக் கண்டுகொள்வதில்லை ( மானத் நஹி ராதா) பிறகு வழிக்கு வருகிறாள் ( மான் கயீ ராதா). டான்ஸ் பாட்டானதால் அதற்கே உரிய சொல் கட்டுக்கள் வருகின்றன. நாம் இந்த ராகத்தை வட இந்திய பாணியில் கேட்டு ரசிப்போம்!
இது ஹிந்துஸ்தானியில் ஜனரஞ்சகமான ராகமாகிவிட்டது இதோ சில சாஸ்திரீய ரிகார்டுகள்:
Ustad Rashid Khan Vocal ;https://www.youtube.com/watch?v=i4Jsy8_gCvQ
Pandit Hariprasad Chaurasia Flute : https://www.youtube.com/watch?v=Ki_GWjrpG9I
Ustad Bismillah Khan Shenai : https://www.youtube.com/watch?v=cbxcWkOLA4Q
கேட்டு மகிழலாம். நம்மைவிட நிதானமாகப் பாடுகிறார்கள்!
கலாவதி
நம்மிடமிருந்து வடக்கே போன இன்னொரு ராகம் “கலாவதி” இதை நம்மவர்கள் ‘வலஜி / வலசி’ என்பார்கள். இந்த ராகத்தில் ஒரு அருமையான கவ்வாலியை அமைத்திருக்கிறார் ரோஷன். ‘பர்ஸாத் கீ ராத்” என்ற படத்தில் (1960) வரும் 12 நிமிட கவ்வாலி இது. இன்றுவரை நமது திரை இசையில் கவ்வாலிப் பாடல்களின் சிகரமாகக் கருதப்படுகிறது இது. முதலில் இந்த ராகத்தில் தொடங்கினாலும் பின்னர் வேறு ராகங்கள் கலந்துவிடுகின்றன இந்தக் கவ்வாலியை எழுதியது ஸாஹிர் லுதியான்வி. இதற்குப் பொருள் சொல்வது கடினம்- அதிலுள்ள நயங்கள் மறைந்துவிடும். பாட்டை ரசிப்போம்.இது மிக நீண்ட பாட்டு.
Song: Na to karwan ki talash hai Film: Barsat Ki Raat 1960 Lyrics: Sahir Ludhianvi
Music : Roshan Singers: Manna Dey, Mohammad Rafi, S.D.Batish, Asha Bhonsle, Sudha Malhotra
YouTube link: https://www.youtube.com/watch?v=BQRHuMBtOYY&feature=emb_err_woyt
இந்தக் கவ்வாலியின் பொருளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் YouTube link பார்கவும்:
Hum Kisi Se Kum Nahin படத்திலும் ஒரு கவ்வாலி “ஹை அகர் துஷ்மன் ஃஜமானா- ஹம் கிஸீசே கம் நஹீ” இதே ராகத்தில் ஆர்.டி பர்மன் அமைத்திருக்கிறார்.
இந்த ராகத்தில் அவரோஹணத்தில் ஒரு சிறு மாற்றம் வந்தால் அது ‘ஜனசம்மோஹினி’ என்ற ராகமாக மாறிவிடுகிறது. இதில் அமைந்த பாடல்களில் பிரசித்தமான ஒரு பாடல் ரஃபி பாடியது.
கோயீ ஸாகர் தில் கோ பஹலாதா நஹீ
कोई सागर दिल को बहलाता नहीं
बेख़ुदी में भी करार आता नहीं
कोई सागर दिल को…
मैं कोई पत्थर नहीं इन्सान हूँ
कैसे कह दूं गम से घबराता नहीं
कोई सागर दिल को…
कल तो सब थे कारवाँ के साथ–साथ
आज कोई राह दिखलाता नहीं
कोई सागर दिल को…
ज़िन्दगी के आईने को तोड़ दो
इसमें अब कुछ भी नज़र आता नहीं
कोई सागर दिल को…
கோயீ ஸாகர் தில் கோ பஹலாதா நஹீ
பேகுதீ மே பீ கரார் ஆதா நஹீ
எந்தக் கடலும் என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை
சுய நினைவில்லாத போதும் மனதில் அமைதி இல்லை!
மை கோயீ பத்தர் நஹீ இன்ஸான் ஹூ(ன்)
கைஸே கஹூ(ன்) தோ கம் ஸே கப்ராதா நஹீ
நான் ஒன்றும் கல் இல்லை, மனிதன் தான்
சோகத்தைக் கண்டு பயமில்லை என்று எப்படிச் சொல்வேன்?
கல் தோ ஸப் தே காரவான் கே ஸாத் ஸாத்
ஆஜ் கோயீ ராஹ் திக்லாதா நஹீ
நேற்று எல்லோரும் என்னுடன் இந்த வரிசையில் இருந்தார்கள்
இன்று வழிகாட்ட ஒருவரும் இல்லை
ஃஜிந்தகீ கே ஐனா கோ தோட் தோ
இஸ் மே அப் குச் பீ நஃஜர் ஆதா நஹீ
வாழ்க்கை என்ற இந்தக் கண்ணாடியை உடைத்துவிடு
இதில் இப்போது எதையும் பார்க்க முடியவில்லை!
கோயீ ஸாகர் தில் கோ பஹலாதா நஹீ
எந்தக் கடலும் என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை
Song: Koi sagar dil ko Film: Dil Diya Dard Liya 1966 Lyrics: Shakeel Badayuni
Music ; Naushad Singer: Mohammad Rafi
YouTube link: https://www.youtube.com/watch?v=XisFzdMbGGY
Audio: https://www.youtube.com/watch?v=fVTTEEHK7C0
படத்தை ஒட்டிய பாடல். இங்கே அவர் ‘கடல்’ என்று சொல்வது வேறு சமாசாரம்!
இது நௌஷத்-ஷகீல்- ரஃபி அணியின் பாடல்களில் ஒன்று. ஓஹோ என்று சொல்லும் படி எதுவும் இல்லை, எனினும் இந்த கலாவதி-ஜனசம்மோஹினி ராகங்களின் தொடர்பைக் காட்டும் நல்ல பாடல்களில் ஒன்று..
Virus-free. www.avast.com |
Attachments area
Ja Tose Nahin Boloon Kanhaiya – Lata Mangeshkar, Manna Dey – PARIVAR – Kishore Kumar, Usha Kiran
Preview YouTube video Parivar – Ja Tose Nahin Boloon
Parivar – Ja Tose Nahin Boloon
Preview YouTube video Raga Hamsadhwani | Rashid Khan (Album: Sangeet Sartaj)
Raga Hamsadhwani | Rashid Khan (Album: Sangeet Sartaj)
Preview YouTube video Pandit Hariprasad Chaurasia – Raga Hansadhwani
Pandit Hariprasad Chaurasia – Raga Hansadhwani
Preview YouTube video Raag Rageshwari – Ustad Bismillah Khan
Raag Rageshwari – Ustad Bismillah Khan
Na To Karvan Ki Talash Hai – Manna Dey, Asha Bhosle – BARSAAT KI RAAT – Madhubala, Bharat
Preview YouTube video Na To Karvan Ki Talaash Hai-Barsaat Ki Raat
Na To Karvan Ki Talaash Hai-Barsaat Ki Raat
Preview YouTube video Koi Sagar Dil Ko Behlata Nahi Dil Diya Dard Liya
Koi Sagar Dil Ko Behlata Nahi Dil Diya Dard Liya
tag– ஹிந்தி படப் பாட்டுகள் – 67