ரதி ரஹஸியம் – காதல் விளையாட்டில் நடந்தது என்ன? (Post N0.8189)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8189

Date uploaded in London – – –17 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சம்ஸ்கிருத செல்வம்

ரதி ரஹஸியம் – காதல் விளையாட்டில் நடந்தது என்ன?

ச.நாகராஜன்

சம்ஸ்கிருதத்தில் காதல், செக்ஸ் பற்றிய கவிதைகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இதே அளவு தமிழிலும் உள்ளன.

உலகில் உள்ள மொழிகளில் ஒருவேளை அதிகமாக இப்படிப்பட்ட கவிதைகள் உள்ள மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டும் தானோ?!

படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் வர்ணனைகள், உணர்ச்சிகள், செயல்கள் என ஒவ்வோரு கவிஞனும் ஆண் பெண் உறவைப் பாடி இருக்கும் விதம் சொல்லுக்கு அடங்காத சுவையுடையதாகும்.

சில கவிதைகள் இதோ: –

உதட்டில் என்னடி காயம்?! உள்ளதைச் சொல்லு நீயும்!!

கிம் பாலே தவ சுவ்ரணோமயதரோ காத்ரம் ச கிம் தே ஸ்ருலயம்

    ராத்ராவத்ய விதக்தமோகபடுனா தஸ்டா புஜங்கேன வை |

யத்யேவம் சஹஸா ம்ருதாஸி ந கதம் காலேன வஷ்டா சதி

    ஜப்தம் தத்சமயேப்யனன்ய மனஸா ஹாஹேதி மந்த்ரோ மயா ||

கேள்வி :- “ஓ, அழகியே, ஏன் உனது உதடுகள் காயம் பட்டிருக்கின்றன, உனது மேனி தளர்ந்திருக்கிறது?

இரவில் காதல் விளையாட்டில் வல்ல புஜங்கத்தினால் கடி பட்டிருந்தாயா, என்ன? (புஜங்கம் என்பது இரகசிய காதலனையும் குறிக்கும், பாம்பையும் குறிக்கும்)

ஒரு வேளை கரிய பாம்பினால் கடிபட்டிருந்தால், நீ உடனே ஏன் இறக்கவில்லை?”

பதில் :- “ஓ, அதுவா? ‘அந்த நேரத்தில்’ ஹா, ஹா என்ற மந்திரத்தை ஒரு முனைப்பட்ட மனதோடு சொல்லி கொண்டிருந்தேன் அவ்வளவு தான்!”

தோழி கேட்ட கேலியான கேள்விக்கு தலைவியின் நக்கலான பதில்!

“Why is it, O Girl, that your lip is wounded and your body is in an exhausted state?

Were you bitten at night by a Bhujanga (Secret lover or snake) that is clever in love-sports (or : having a terrible hood?)

If you were bitten by a black cobra how is it that you are not dead at once? !”

“Well, the mantra, ha! Ha! was uttered by me at that time with a concentrated mind!” )

(Translation by A.A.R.)

**

கேளிக்ரஹத்தில் (உல்லாச விளையாட்டு அறையில்) ஈருடல் ஓருடல் ஆனதோ!

கேளிக்ருஹே வரதனௌ ஷிஷுதா நதாங்கி

     ப்ராணேஸ்வரஸ்தருணிமா ச பரஸ்பரேண |

ஆலிங்கஸ்ச காடமிதரேதரளீநதேஹி

     கஸ்யாபி நைகதரனிஸ்சயமாததாதே ||

உல்லாசமான படுக்கை அறையில், அந்த அழகியின் மேனி சற்றே அவளது மார்பக பாரத்தினால் வளைந்திருக்க, அங்கு அவளது தலைவன் (கணவன்) அவளை இளமையுடன் சேர்ந்தான். இந்த இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தழுவ, ஒருவர் உடலில் இன்னொருவர் ஊடுருவிச் செல்ல, இப்படியாக அவர்கள் மறைக்கப்பட்டு விடவே, ஒருவர் கூட அவர்களது தனித்தனியான மேனியைக் கவனிக்கமுடியாத நிலை ஏற்பட்டது!

In the pleasure-house, there is the young girl with her frame slightly stooping (due to the weight of her bosom), and there is the lord of her life (husband) united with youth; these two mutually embracing warmly have entered into the body of each other and are thus concealed and to no one is their separate identity clearly discernible.

(Translation by A.A.R.)

*

ரதி ரஹஸியம்! காதல் விளையாட்டு!!

குர்வந்தி ஸ்மரமந்திரே கரிகரக்ரீடாம் ஸ்தநயோ ஜானுனீ

    குல்பாட்குண்டபதானி ச ப்ரதிமுஹுநித்னந்தி தைராத்மன: |

இத்யேவம் கலயந்தி யே ஷஷிகலாமாலிங்ய நஜ்ஜந்தி தே

     ஷீதாம்ஷுபலபுத்ரிகாம் ஷஷிகரஸ்ப்ருஷ்டாமிவ ப்ரேயஸீம் ||

ரதி ரஹஸியத்தில் வரும் கவிதை இது!

அந்தக் காதலர்கள் தனது அன்புக்குரியவளின் கூந்தலைக் கோதி விட்டு, அவளது நெற்றியையும் கண்களையும் முத்தமிட்டு, உதடுகளையும், பற்களையும் கன்னங்களையும் இன்பம் தரக்கூடிய படி வலியைத் தந்து, அடிக்கடி அவர்களின் கன்னங்களில் முத்தமிட்டு, கழுத்திற்குக் கீழே உள்ள பிரதேசத்திலும், அக்குளிலும் தங்கள் நகக்குறிகளைப் பதித்து, அவளது மார்பகங்களை அழுந்த அழுத்தி, கரங்களால் அவளது நாபியை மெதுவாகத் தடவுகின்றனர்.

யானையின் துதிக்கை போல காதல் விளையாட்டு கிரஹத்தில் தங்கள் லீலைகளைச் செய்கின்றனர்.

அவர்களது முழங்கால்கள்,கணுக்கால்கள், கால் விரல்களை தங்களது முழங்கால், கணுக்கால், கால் விரலோடு பதித்து அன்புக்குரியவர் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி சந்திரனின் கதிர்கள் பட்டவுடன் உருகும் சந்திரகாந்தக் கல் போல பரவசத்தில் உருகுகின்றனர்.

Those lovers who fondle the tresses of their beloveds, kiss the forehead and eyes, give (pleasurable) pain to their lips by their lips and teeth, kiss frequently their cheeks, imprint their nail marks in the regions below the neck and armpits, press hard their bosoms and pound at their breasts and give gentle strokes with their palms on the navel; do the sportful activity In the house of love as is done by the trunk of an elephant and press hard at their knees, ankles and toes with their counterparts – doing such pleasing activities by embracing the beloved they melt in ecstasy as does the moonstone under the influence of the moon’s rays.

(Translation by A.A.R.)

அழகியின் கண் என்ற ஆயுதம்!

இயம் வ்யாதாயதே பாலா ப்ரூரஸ்யா கார்முகாயதே |

கடாக்ஷஸ்ச சராயந்தே மநோமி ஹரிநாயதே ||

இந்த அழகி ஒரு வில்லை வைத்திருக்கிறாள்,

அவளது வில்லானது  அவள் விழியின் வளைவு தான்,

அவள் நீள்விழி ஓரப் பார்வை தான் குறி பார்க்கப்பட்ட அம்பு

எனது மனம் தான்  அவள் குறி பார்க்கும் இலக்கு!

This damsel doth as an archer serve,

The bow she handles is her eye-brow curve,

Her side-long look is the arrow aimed,

My mind the deer, is the target maimed.

(Translation by Dr Velluri Subba Rao)

*

அழகி தரும் வெப்பம்!

அபூர்வோ த்ருஷ்யதே வாஹ்னி

    காமின்யாஸ்தனமண்டலே |

தூரதோ தஹதே காத்ரம்

    ஹ்ருதி லக்னாஸ்து சீதளா: ||

இந்த அழகியின் மார்பகங்களிலிருந்து எழும் வெப்பம் (அக்னி) பார்ப்பதற்கு விசித்திரமாக இருக்கிறது, மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கிரது. தூரத்திலிருக்கும் மனிதனை அது பலமாக எரிக்கிறது, ஆனால் அணைத்தாலோ குளிர்ச்சியைத் தருகிறது!

The fire that blazes in a maiden breast

Appears quite strange and different from the rest

It sure consumes the man that’s far away

But lo! Doth, tightly hugged his heat allay.

(Translation by Dr Velluri Subba Rao)

*

இப்படி ஆயிரக்கணக்கில் உள்ள காதல் காவியக் கவிதைகள் சம்ஸ்கிருதத்தில் ஏராளம் உள்ளன? இன்னும் சிலவற்றைப் படிக்க ஆசையா?

tags- ரதி , ரஹஸியம்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: