ஹிந்தி படப் பாடல்கள் -70- ஒரு ராகம்,இரு மலர்கள்-3 (Post No.8190)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8190

Date uploaded in London – – – 17 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் -70- ஒரு ராகம்,இரு மலர்கள்-3 பைரவி!

R. Nanjappa

இந்த பைரவி ராகம்தான் நமது இசைஞர்களுக்கு மிகவும் பிடித்த ராகம் போலும்! இதில் நூற்றுக்கணக்கான பாட்டுகள் இருக்கின்றன.ஒரு காலத்தில் மூத்த இசைஞர்கள் நௌஷத்தும் ஷங்கர் ஜெய்கிஷனும் போட்டி போட்டுக்கொண்டு இந்த ராகத்தில் மெட்டுகள் அமைத்தார்கள். ஒவ்வொரு அக்ஷரத்திலும் பல பாட்டுக்கள்-எதை தேர்வுசெய்வது! “ஓ, இதுவும் பைரவிதானா” என்று வியக்கவைக்கும் இரு பாட்டுகளைப் பார்ப்போம்

  ஏ தில் துஜே கஸம் ஹை   ai dil tujhe kasam hai, tuu, himmat na haarana din zindagi ke jaise bhi guzare guzaarana ai dil tujhe kasam hai …

என் நெஞ்சே, உனக்குத்தான் சொல்கிறேன், நீ தைரியத்தை இழக்காதே வாழ்க்கையின் பாதை எப்படிப் போனாலும் அத்துடன் வாழத் தெரிந்துகொள் நெஞ்சே, உனக்குத்தான் சொல்கிறேன்


  ulfat ke raaste mein milenge hazaar gam ban jaaye jaan par bhi to gam se na haarana ai dil tujhe kasam hai …   அன்பின் பாதையில் ஆயிரம் வருத்தங்கள் வரும் உயிரே போனாலும் துக்கத்திற்கு பணிந்துவிடாதே நெஞ்சே, உனக்குத்தான் சொல்கிறேன்  


rone se kam na honge kabhi teri mushakilen bigade hue naseeb ko hans kar sanvaarana ai dil tujhe kasam hai …   அழுவதால் என்றும் உன் கஷ்டங்கள் குறையப்போவதில்லை கஷ்டங்கள் வந்தாலும் சிரித்து சமாளிக்கத் தெரிந்துகொள் நெஞ்சே, உனக்குத்தான் சொல்கிறேன்


  duniya sitam kare to na karana gila koi jo tere ho chuke hain tu unako pukaarana ai dil tujhe kasam hai …   உலகம் உனக்கு துன்பம் தருகிறதா? எங்கும் புகார் சொல்லாதே உனக்கென்று இருப்பவர்களை உதவிக்கு அழை! நெஞ்சே, உனக்குத்தான் சொல்கிறேன்  

Song; Ae dil tujhe kasam hai Film: Dulari, 1949 Lyrics : Shakeel Badayuni Music : Naushad Singer: Lata Mangeshkar Youtube link:  https://www.youtube.com/watch?v=YqHcE_pjJhY            https://www.youtube.com/watch?v=SCCv51zvsV8   

என்ன எளிய பாடல், கலப்பில்லாத பைரவி மெட்டு! லதாவின் ஆதி காலக் குரல், இன்னும் பண்படவில்லை. .அவரது ஹிந்தி-உருது உச்சரிப்பும் அவ்வளவு சரியில்லை! இந்த உச்சரிப்பை சரிசெய்ய நௌஷத் மிகுந்த முயற்சி செய்தார். இந்த எளிமையிலேயே ஒரு தனிக்கவர்ச்சி இருக்கிறது! இது பைரவி ராகப் பாட்டிற்கு ஒரு சிறந்த மாதிரி.   இப்பொழுது ஒரு வித்தியாசமான பாட்டு!  

மேரா ஜூதா ஹை ஜாபானீ  

मेरा जूता है जापानी ये पतलून इंगलिश्तानी
सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिन्दुस्तानी

निकल पड़े हैं खुल्ली सड़क पर अपना सीना ताने
मंजिल कहाँ, कहाँ रुकना है,उपरवाला जाने
बढ़ते जाए हम सैलानी, जैसे एक दरिया तूफानी
सर पे लाल टोपी रूसी


ऊपर-नीचे नीचे-ऊपर लहर चले जीवन की
नादान है जो बैठ किनारे, पूछे राह वतन की
चलना जीवन की कहानी, रुकना मौत की निशानी

होंगे राजे राजकुंवर हम बिगडे दिल शहज़ादे
हम सिंघासन पर जा बैठें जब जब करें इरादे
सूरत है जानी पहचानी दुनिया वालों को हैरानी 
 

மேரா ஜூதா ஹை ஜாபானி, யே பத்லூன் இங்க்லிஷ்தானி ஸர்பே லால் டோபி ரூஸி, ஃபிர் பீ தில் ஹை

ஹிந்துஸ்தானி    என் செருப்பு ஜப்பனில் செய்தது, என் பேன்ட் இங்கிலிஷ்காரர்களுடையது என் தலையில் சிவப்பு குல்லாய் ரஷ்யர்களுடையது ஆனால் என் மனது என்றும் இந்தியன் தான்!   நிகல் படே ஹை குல்லி ஸடக் பர், அப்னா ஸீனா தானே அப்னா ஸீனா தானே மன்ஃஜில் கஹா(ன்), கஹான் ருக்னா ஹை, ஊபர் வாலே ஜானே ஊபர் வாலா ஜானே பட்தே ஜாயே ஹம் ஸைலானி, ஜைஸே ஏக் தரியா தூஃபானி ஸர் பே லால் டோபீ ரூஸி..  


.நான் திறந்த பாதைக்கு வந்துவிட்டேன் என் மன தைரியத்தினால் நம்பிக்கையுடன் வந்துவிட்டேன் அடையவேண்டிய இலக்கு எங்கே இருக்கிறது?  எங்கே நிற்கவேண்டும்? இது ஆண்டவனுக்குத்தான் தெரியும்! நான் முன்னேறிச் செல்கிறேன், நதியின் மேல் வீசும் பெருங்காற்றுபோல் முன்னேறிச் செல்கிறேன் தலையில் சிவந்த ரஷ்யத் தொப்பி இருந்தால் என்ன, என் மனது என்றைக்கும் இந்தியன் தான்!  

  ஊபர் நீசே, நீசே ஊபர், லஹர் சலே ஜீவன் கீ லஹர் சலே ஜீவன் கீ நாதா(ன்) ஹை ஜோ பைட் கினாரே பூசே ராஹ் வதன் கீ பூசே ராஹ வதன் கீ சல்னா ஜீவன் கீ கஹானீ, ருக்னா மௌத் கீ  நிஷானீ ஸர் பே லால் டோபி ரூஸி…   மேலே இருப்பது கீழே, கீழே இருப்பது மேலே- இப்படித்தான் வாழ்க்கை அலைபோல மேலும் கீழும் செல்கிறது! இங்கே கரையில் சும்மா உட்கார்ந்து தன் இடத்திற்கு வழியை விசாரிப்பவனைப் பற்றி என்ன சொல்ல, வெட்டிப்பயல்!

சென்றுகொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நின்றுவிடுவது மரணத்தின் அடையாளம்! தலையில் சிவப்பு ரஷ்யத் தொப்பி இருந்தால் என்ன!   ஹோங்கே ராஜ், ராஜ்குவர் ஹம், பிக்டேதில் ஷஹ ஃஜாதே பிக்டே தில் ஷஹ ஃஜாதே ஹம் ஸிங்காஸன் பர் ஜா பைடே, ஜப் ஜப் கரே இராதே ஜப் ஜப் கரே இராதே ஸூரத் ஹை ஜானீ பஹசானி, துனியா வாலோ(ன்) கோ ஹைரானீ ஸர் பே லால் டோபி ரூஸி….   நானும் ஒரு நாள் ஒரு ராஜ்யத்தில் ராஜகுமாரனாக இருப்பேன் ஆனால், நான் கொஞ்சம் கர்வம் பிடித்தவன்! நினைக்கும் பொழுது  சிம்மாசனத்தில் அமருவேன்!  ஆனல், இதென்ன இது தெரிந்த முகமாக இருக்கிறதே என உலகத்தவருக்கு என்னைக் கண்டு ஆச்சரியமாகிவிடும்! தலையில் சிவப்பு ரஷ்யத் தொப்பி இருந்தால் என்ன, என் மனது என்றைக்கும் இந்தியன் தான்!  

Song: Mera jhootha hai japani Film: Shri 420 1955 Lyrics: Shailendra Music; Shankar Jaikishan  Singer: Mukesh YouTube link: https://www.youtube.com/watch?v=TdQwPwmsUC0&feature=emb_err_woyt https://www.youtube.com/watch?v=uFVxlJmQLC0    

ஹிந்தித் திரை இசையிலேயே மிகப் பிரபலமான பாட்டு! ஒரு சேனலில் மட்டும் 4.2 கோடிப் பேர்கள் பார்த்திருக்கிறார்கள்! இந்தியா தவிர உருது, அராபிய, பெர்ஷியன் மொழி தெரிந்த இடங்களிலும்  ரஷ்யா மற்றும் கீழை ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமான பாட்டு! ஷைலேந்த்ராவின் கவிதை எளிமையான சொற்களில் வாழ்க்கைத் தத்துவத்தையே போதித்து விட்டது! இத்தகைய ஜன ரஞ்சகமான பாட்டு பைரவி ராகத்தில் அமைந்தது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்!  

Virus-free. www.avast.com Attachments area Preview YouTube video Ai Dil Tujhe Kasam Hai – Dulari (1949) Song – Madhubala – Geeta Bali – Shyam Ai Dil Tujhe Kasam Hai – Dulari (1949) Song – Madhubala – Geeta Bali – Shyam Preview YouTube video Aye Dil Tujhe Kasam Hai Lata Mangeshkar in Dulari Aye Dil Tujhe Kasam Hai Lata Mangeshkar in Dulari Preview YouTube video Shree 420 – Mera Joota Hai Japani – Mukesh – Lata Mangeshkar Shree 420 – Mera Joota Hai Japani – Mukesh – Lata Mangeshkar Preview YouTube video Mera Joota Hai Japani- Sree 420- Lyrics Hindi And English– Translation & Meaning Mera Joota Hai Japani- Sree 420- Lyrics Hindi And English– Translation & Meaning  
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: