வேதமே கடவுள், மனிதர் ஆகியோரின் கண்கள்- மநுநீதி நூல் நிறைவு (Post No.8202)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8202

Date uploaded in London – 18 June  2020  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மநு நீதி நூல் – பகுதி 52

மானவ தர்ம சாஸ்திரம் என்றும், மனு ஸ்மிருதி என்றும் அழைக்கப்படும் மநு நீதி நூலின் கடைசி அத்தியாயத்தில்  12 ஆவது அத்தியாயத்தில் –  73 ஸ்லோகங்களை மே 9 ம் தேதி பதிவிட்டேன். மொத்தமுள்ள 2685 ஸ்லோகங்களில்  மீதி உள்ள 73 ஸ்லோகங்களை இன்று காண்போம். கடைசி இரண்டு மூன்று அத்தியாயங்கள் பிரமாணர்களுக்கானது. ஆயினும் சில விஷயங்கள் பொதுவானவை.

இன்றுடன் மானவ தர்ம சாஸ்திரம் என்னும் உலகின் முதலாவது சட்டப் புஸ்தகம் நிறைவடைகிறது; இது 52-வது பகுதி . இதை நிறைவு செய்ய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று!

முதலில் Bullet Points புல்லட் பாயிண்டுகளில் சில சுவையான விஷயங்கள்:–

.

மநு தர்ம சாஸ்திரத்தின் ஸ்லோகங்கள் அனைத்தும் பிருகு என்னும் முனிவர் வாய் வழியாக வருகிறது. மநு நேரடியாக நம்மிடம் பேசவில்லை. சட்டப் புஸ்தகத்தை முடிக்கும் முன்பாக அவர் கூறுகிறார் –

“வேதங்கள் மனிதர்களின், முன்னோர்களின், கடவுளரின் சாஸ்வதமான கண்கள்.அவைகளை எவரும் முழுதாக அறிய முடியாது” (அவ்வளவு மறை பொருள் உடையன) -12-94

**

வேதங்கள்தான் மனித இனம் தழைக்க, நிலைத்து நிற்க உதவுகின்றன.12-99

**

எவன் ஒருவன் வேதத்தின் உட்பொருளை உணர்கிறானோ அவன் மோட்சத்தை அடைவான் 12-102

**

12-103 ல் மிக அழகாக சொல்கிறார்:- “வேதங்களைப் பற்றி தெரியாமலே இருப்பதை விட அதைப்  படிப்பவன் மேலானவன்.;வேதத்தை பொருளே தெரியாமல் பாராயணம் செய்தாலும் நல்லதுதான். ஆனால் அதைவிட நல்லது அதை நினைவிற் வைத்துக் கொள்வது . அதையும் விட சிறந்தது வேத தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுகுவதாகும்”. 12-103

இதை வள்ளுவனும் கூறுகிறான் :-

மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் குறள் 134

(வேதத்தை மறந்தாலும் கற்றுக்கொள்ள முடியும்; வேத தர்மம் சொல்லும் ஒழுக்கத்தைக் கைவிட்டால் விமோசனமே இல்லை–குறள் -134 )

வள்ளுவன் சொல்லும் பார்ப்பானின் பிறப்பொழுக்கம் என்ன என்றும் இதே அத்தியாயத்தில் மனு சொல்லி விடுகிறார் . அவை ஆறு குணங்கள் – ஸ்லோகம் 12-83

***

இரண்டு வகையான வேத தர்மங்கள் உண்டு; அவை  பிரவ்ருத்தி மார்க்கம், நிவ்ருத்தி மார்க்கம் என்று சொல்லி அவற்றையும் 12-88 முதலான ஸ்லோகங்களில்  விளக்குகிறார்.

***

ஜனநாயகம் வாழ்க !

பத்து பேர் கொண்ட அறிஞர் சபை மூலம் முடிவெடுக்கச் சொல்லி ஜனநாயக அசெம்பிளிக்கு பிள்ளையார் சுழி போடுகிறார் -ஸ்லோகம் 12-111 முதல் 12-115 வரை

ஆயிரம் முட்டாள்கள் உடைய அசெம்பிளியை விட ஒரு அறிஞன் சொல்லுவது மேல் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்  .

**

பகவத் கீதை கருத்துக்களையும் காண்கிறோம் 12-91 மற்றும் 12-125.

**

இறுதியில் எவன் ஒருவன் இந்த நீதி நூலைப் பின்பற்றுகிறானோ அவன் வாழ்வாங்கு வாழ்ந்து நல்ல கதியை அடைவான் என்றும் சொல்லுகிறார் . பிராமணர்களுக்கு மநு விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்ற மூன்று ஜாதியினரையும் விட மிகக் கடுமையானது என்பதை 12 அத்தியாயங்களையும் படித்தவர்களுக்கு நன்கு விளங்கி இருக்கும் .

மனு நீதி நூல் 12-126 உடன் நிறைவு பெறுகிறது.

முழு ஸ்லோக மொழிபெயர்ப்புகளை இணைப்பில் காண்க:-

tags –வேதமே கண்கள், நூல் நிறைவு, மநு நீதி நூல் – பகுதி 52

SUBHAM
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: