கலிகால ஜோதிடர்கள்! (Post No.8203)

Mumbai Astrologer 50 years ago

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8203

Date uploaded in London – – –19 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜோதிடர்களுக்கான தகுதி பற்றிப் படித்தோம்; ஆனால் கலிகாலத்தில் ஜோதிடர்கள் எப்படி இருக்கிறார்கள்? நையாண்டியாக பெரியவர் நீலகண்ட தீக்ஷிதர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

கலிகால ஜோதிடர்கள்!

ச.நாகராஜன்

கலி காலத்தில் எல்லா நல்லவையுமே தலை கீழாக மாறும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்!

இதற்கு ஜோதிடர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

கலி காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று நீலகண்ட தீக்ஷிதர் கலி விடம்பனா என்ற நூலில் அழகுறைக் கூறியுள்ளார்.

அதில் ஜோதிடர்களுக்கு மட்டும் ஒன்பது ஸ்லோகங்களை ஒதுக்கியுள்ளார்.

அவற்றைப் பார்ப்போம் :-

चारान् विचार्य दैवज्ञैर्वक्तव्यं भूभुजां फलम्  ।

ग्रहचारपरिज्ञानं तेषामावश्यकं यतस् ॥ १४ ॥

உளவாளிகள் மூலமாக தேவையான தகவல்களைப் பெற்ற பின்னரே மன்னரின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை ஜோதிடர்கள் மன்னனிடம் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும் போது மன்னரின் ஜாதகத்தைப் பொறுத்த வரையில் கிரகங்களைப் பற்றி அறிய வேண்டியதற்கும் அதன் சஞ்சாரங்கள் பற்றியும் அறிய வேண்டியதற்கு என்ன அவசியம் இருக்கிறது? (ஸ்லோகம் 14 )

 The future events in the life of kings should be forecast by astrologers after getting the necessary information through spies. Where then is the need for them to study the planets and their movements, in relation to the horoscope of the kings? (Sloka – 14)

Astrologer Board in Wembley, London Year 2020

*

पुत्र इत्येव पितरि कन्यकेति मातरि  ।

गर्भप्रश्नेषु कथयन् दैवज्ञो विजयी भवेत् ॥ १५ ॥

ஒரு ஜோதிடர் வெற்றி பெறுவது எப்படியெனில் : பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையென்று தந்தையிடமும், தாயிடம் அது ஒரு பெண் குழந்தை என்றும் சொன்னால் வெற்றி பெறலாம்! (ஸ்லோகம் 15)

The astrologer scores success in his predictions for would-be parents by telling the father to be that the newborn will be a boy and the would-be mother that it will be a girl. (15)

*

आयुस्प्रश्ने दीर्घमायुर्वाच्यं मौहूर्तिकैर्जनैस् ।

जीवन्तो बहुमन्यन्ते मृताः प्रक्ष्यन्ति कं पुनस् ॥ १६

ஜோதிடம் கேட்க வருவோர் தங்கள் ஆயுளைப் பற்றிக் கேட்கும் போது ஜோதிடர் சொல்ல வேண்டியது இது தான் – அவர்கள் நீடித்து வாழ்வர் என்று சொல்ல வேண்டும். அவர்கள் நீடித்து வாழ்ந்தால் அவர்கள் ஜோதிடரைப் பற்றி மிக உயர்ந்த அபிப்ராயத்தைக் கொள்வர். அவர்கள் (அற்பாயுளில்) இறந்து விட்டாலோ கேள்வி கேட்க அவர் இல்லை என்பதால் ஒருவித கேள்வியும் எழாது. (ஸ்லோகம் 16)


 When persons enquire about their lifespan, the astrologer should say that they would live long. If they live that long, they will think highly (of the astrologer) and if they die, further questions do not arise as the questioner is no more (16)

*

Astrologer Board in Wembley, London Year 2020

सर्वं कोटिद्वयोपेतं सर्वं कालद्वयावधि  ।

सर्वं व्यामिश्रमिव च वक्तव्यं दैवचिन्तकैस् ॥ १७ ॥

நடந்து விட்ட கடந்த காலம் பற்றியோ அல்லது நடக்கவிருக்கும் எதிர்காலம் பற்றி ஜோதிடர் சொல்வதில் நடப்பனவற்றில் எதிரெதிர் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். எதிர்காலம் பற்றிய ஜோதிடர்களின் எல்லாக் கணிப்புகளிலும் அதை இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளும் படி இருக்க வேண்டும். (ஸ்லோகம் 17)

All that the astrologer says on the past or the future, should cover opposite poosibilities. All prophecies of astrologers should be capable of double interpretation. (17)

*

Astrologer Board in Wembley, London Year 2020

निर्धनानां धनावाप्तिं धनिनामधिकं धनम्  ।

ब्रुवाणाः सर्वथा ग्राह्या लोकैर्ज्यौतिषिका जनास् ॥ १८ ॥


ஏழைகளுக்கு வளமான காலம் வரும் என்றும் பணக்காரர்களுக்கு இன்னும் அதிகப் பணம் வரும் என்றும் சொல்லும் ஜோதிடர்கள் எப்போதுமே மக்களால் பெரிதும் மதிக்கப்படுவர். (ஸ்லோகம் 18)

The astrologers who forecast properity for the poor and more prosperity for the rich are always respected by the people. (18)

*

Astrologer Board in Wembley, London Year 2020

शतस्य लाभे ताम्बूलं सहस्रस्य तु भोजनम्  ।

दैवज्ञानामुपालम्भो नित्यः कार्यविपर्यये  ॥ १९ ॥

ஜோதிடர் சொன்ன பலன் படி நூறு ரூபாய் கிடைத்தது எனில் அவர் சில வெற்றிலை மற்றும் பாக்குகளையும் வாங்கக் கூடிய அளவு தக்ஷிணை பெறுவார். அதுவே ஆயிரம் ரூபாயாக இருந்ததெனில் அவருக்கு நல்ல விருந்து கிடைக்கும். அவரது கணிப்பு தப்பாகப் போய் விட்டதெனில் அவருக்கு அதிக பட்சமாக எச்சரிப்பும் கண்டிப்பும் தான் கிடைக்கும்! (ஸ்லோகம் 19)

 If the prediction of the astrologer results in gain of a hundred rupees, he will get enough to buy a few betel leaves and arecanuts. If it is a thousand rupees, he will be treated to a meal. If the prophecy goes awry, he may at best get an admonition. (19)

*

अपि सागरपर्यन्ता विचेतव्या वसुंधरा  ।

देशो ह्यरत्निमात्रेऽपि नास्ति दैवज्ञवर्जितस् ॥ २० ॥

கடல் சூழ்ந்த இந்த பூமி முழுவதையும் ஒருவர் சோதித்தாலும் ஜோதிடர்கள் இல்லாத ஒரு சிறு துண்டுப் பகுதியைக் கூடக் காண முடியாது!

                                    (ஸ்லோகம் 20)


Even if one examines the entire world girdled by the oceans, one will not find a piece of land not occupied by astrologers. (20)

*

वारान् के चिद्ग्रहान् के चित्के चिदृक्षाणि जानते  ।

त्रितयं ये विजानन्ति ते वाचस्पतयः स्वयम्  ॥ २१ ॥

சில ஜோதிடர்கள் நாள்களின் பெயர்கள் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிலரோ கிரகங்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். இன்னும் சிலரோ கிரகங்களின் குறிப்பிட்ட சஞ்சார நிலை பற்றி அறிந்திருப்பர். இவை அனைத்தையும் ஒரு ஜோதிடர் அறிந்திருந்தார் எனில் அவர் நிஜமாகவே (ஜோதிடத்தின் ஊற்றெனத் திகழும்) ப்ருஹஸ்பதிக்கு நிகரானவர் தான். (ஸ்லோகம் 21)

Some astrologers are familiar with the names of days, some with the names of the planets and others with the latitudes (and longitudes). Anyone who is familiar with all these three will verily be Lord Brhihaspati (the fountainhead of astrological science). (21)

*

नैमित्तिकाः स्वप्नदृशो देवतानाम् [[अमी त्रयः]]  ।

निसर्गशत्रवः सृष्टा दैवज्ञानाममी त्रयस् ॥ २२ ॥


இயற்கையானது ஜோதிடர்களுக்கு மூன்று எதிரிகளை உருவாக்கியுள்ளது. அந்த மூன்று எதிரிகள் இவர்களே 1) சகுனங்களை விளக்கிக் கூறும் நிபுணர்கள் 2) கனவுகளை அலசி ஆராய்ந்து கூறுவோர் 3) தெய்வங்களை வழிபடுவோர்! (ஸ்லோகம் 22)

Nature has created three enemies for the astrologers: they are: experts in the interpretation of omen, analysts of dream and those who worship gods. (22)

 நீலகண்ட தீக்ஷிதர் வாழ்ந்த காலம் : 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

அவர் அன்றே கூறியது இன்றும் பொருந்துகிறது அல்லவா!

***

குறிப்பு :- கலிவிடம்பனா உள்ளிட்ட பல நல்ல நூல்களை பல தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பார்க்க வேண்டிய சில தளங்கள் :-

https://www.sanskritworld.in/index/detailview/book_id/kalividambana

http://vidyavrikshah.org/literature/kalividambana/kali2.html

இந்தத் தளத்தில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்பே மேலே தரப்பட்டுள்ளது.

நன்றி : வித்யாவ்ருக்ஷா

http://www.sanskritebooks.org/2011/08/complete-collection-of-kavyamala-series-of-books-of-nirnaya-sagar-press/

tags — Astrologer Board , London, கலிகாலம், ஜோதிடர்கள்

Leave a comment

2 Comments

 1. R Nanjappa

   /  June 19, 2020

  This reminds us of what Shakespeare wrote in Macbeth (about witches);:
  And be these juggling fiends no more believed
  That palter with us in a double sense;
  That keep the word of promise to our ear
  And break it to our hope.

 2. Santhanam Nagarajan

   /  June 19, 2020

  double sense! great men think alike! thanks

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: