ஹிந்தி படப் பாடல்கள் – 72 – ராகம் கமாஜ்! Post No.8204))

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8204

Date uploaded in London – – – 19 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 72 – ஒரு ராகம் இரு மலர்கள் – ராகம் கமாஜ்!

R. Nanjappa

கமாஜ்

கமாஜ் ராகம் சிருங்கார ரசத்திற்கு உகந்ததெனச் சொல்வார்கள். அதன் பல நிலைகளையும்  பிரதிபலிப்பது. கேட்பதற்கு மிக இனிமையானது, கனமானதல்ல. இந்த ராகத்தில் அமைந்த இரு பாடல்களைப் பார்க்கலாம்

ஸகீ ரீ, ஸுன்

सखी री सुन बोले पपीहा उस पार

बोलत ऐसी मीठी बोली छेड़े मन के तार

सखी री सुन बोले पपीहा उस पार

नी सा नी
नी सा री सा नी नी री सा

नी सा री सा नी नी री सा

पी पी की जब तान सुनाए, बिरहन मन घबराए
पी पी की जब तान सुनाए, बिरहन मन घबराए
भूली बतियाँ याद दिलाए
भूली बतियाँ याद दिलाए
पापी बारम्बार

सखी री सुन बोले पपीहा उस पार

सा नी सा नी सा
सा नी सा नी सा
सा नी री सा नी

नी सा री सा नी नी री सा

बैरी ऐसी धुन में बोले सुन सुन मनवा डोले
बैरी ऐसी धुन में बोले सुन सुन मनवा डोले
कानोँ में अमृत रस घोले
कानोँ में अमृत रस घोले
रह रह मधुर पुकार

सखी री सुन बोले पपीहा उस पार  

ஸகீரீ ஸுன் போலே பபீஹா உஸ் பார்

போலத் ஐஸீ மீடி போலீ, சேடே மன் கே தார்

ஸகீ ரீ ஸுன் போலே பபீஹா உஸ் பார்

தோழீ, கேள்! குயில் அந்தப் பக்கம் கூவுகிறது!

அது அவ்வளவு இனிமையாகக் கூவுகிறது..

இதய வீணையை மீட்டுகிறது!

தோழீ, கேள்! குயில் அங்கு கூவுகிறது!

பீ பீ கி ஜப் தான் ஸுனாயே, பிரஹன் மன் கப்ராயே

பூலி பதியா யாத் திலாயே

பாபி பாரம்பார்

பீ பீ என்று திரும்பத் திரும்பப் பாடி,

பிரிவில் என் மனதில் பயம் தோற்றுவிக்கிறது

மறந்துபோன மென்மையான விஷயங்களை நினைவுபடுத்துகிறது

பாவி, திரும்பத் திரும்பப் பாடுகிறது!

பைரீ ஐஸீ துன் மே போலே, ஸுன் ஸுன் மன்வா டோலே

கானோ(ன்) மே அம்ருத் ரஸ் கோலே

ரஹ் ரஹ் மதுர் புகார்

அவ்வளவு இனிமையாகப் பாடி என் மனதை அலைபாயச் செய்து விட்டது

எனக்கு எதிரியாகி விட்டது!

காதில் அமுத ரசத்தைப் பொழிகிறது!

இனிய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

தோழீ, கேள்! குயில் அங்கு கூவுகிறது!

Song: Sakhi ri, sun bole papiha Film: Miss Mary 1957 Lyricist: Rajendra Krishan

Music: Hemant Kumar Singers: Lata Mngeshkar & Asha Bhonsle

YouTube link:  https://www.youtube.com/watch?v=zS4b3WlymvE

What a tremendous song this is! Rajendra Krishan has written the ideal lyrics to bring out the Shringara rasa of this song! Hemant Kumar has set a delightful tune! The voices of the Mangeshkar sisters match well. 

இந்தப் படம் தமிழில் ‘மிஸ்ஸியம்மா”, தெலுங்கில் ‘மிஸ்ஸம்மா” என்று வந்தது. இந்த சீனில் மீனாகுமாரி பாட்டு சொல்லித் தருகிறார். இதே சீனில் தெலுங்கில் ஆந்தோளிகா ராகத்தில் த்யாகராஜரின் “ராக ஸுதாரஸ” என்ற சங்கீதத்தின் பெருமையைச் சொல்லும் பாட்டு இருக்கும். தமிழில் அதே ராகத்தில் தஞ்சை ராமையாதாஸ் அதை தமிழில் எழுதினார். அங்கு சிருங்கார ரசம் இல்லை. இங்கு அந்த ரசமே பிரதானமாக இருக்கிறது- ஸாஹித்யம் அதற்கேற்ற மாதிரி அற்புதமாக அமைந்துவிட்டது! இரண்டு சரணத்தில் சொல்லவேண்டியதைச் சொல்லி விளக்கிவிட்டார் ராஜேந்த்ர க்ருஷ்ணா!

இது கமாஜ் ராகப் பாடலுக்குச் சிறந்த உதாரணம்.

இன்னொரு சிறந்த பாடல் :

அப் க்யா மிஸால் தூ(ன்)

अब क्या मिसाल दूँ मैं तुम्हारे शबाब की
इंसान बन गयी है किरण माहताब की

चेहरे में घुल गया है हसीन चाँदनी का नूर
आँखों में है चमन की जवान रात का सुरूर
गर्दन है एक झुकी हुई डाली डाली गुलाब की
अब क्या मिसाल दूँ

गेसू खुले तो शाम के दिल से धुआँ उठे
छुले कदम तो झुक के ना फिर आसमान उठे
सौ बार झिलमिलाए शमा शमा आफताब की
अब क्या मिसाल दूँ 

दीवारदर का रंग, यह आँचल, यह पैरहन
घर का मेरे चिराग है बूटा सा यह बदन
तस्वीर हो तुम्ही मेरे जन्नत के जन्नत के ख्वाब की

अब क्या मिसाल दूँ 

அப் க்யா மிஸால் தூ(ன்) மை தும்ஹாரே ஷபாப் கீ

இன்ஸான் பன் கயீ ஹை கிரண்  மாஹ்தாப் கீ

உன்னுடைய அழகிற்கு நான் எதை உவமையாகச் சொல்ல முடியும்?

நிலவின் கிரணமே மனித உரு தாங்கி வந்திருக்கிறது!

சேஹ்ரே மே குல் கயா ஹை ஹஸீன் சந்த்னீ கா நூர்

ஆன் கோ மே ஹை சமன் கீ ஜவான் ராத் கா ஸுரூர்

கர்தன் ஹை ஏக் ஜுகீ ஹுயீ டாலீ டாலீ குலாப் கீ

அப் க்யா மிஸால் தூ(ன்)

சந்திரனின் அழகிய ஒளி உன் முகத்தில் கரைந்து விட்டது

உன் கண்கள் இனிய முன்னிரவாகிய சோலை போன்று இருக்கின்றன

உன் கழுத்தோ ரோஜாமலரின் தாழ்ந்த கிளைபோல் இருக்கிறது

உன்னுடைய அழகிற்கு இணையாக நான் இப்போது எதைச் சொல்வது?

கேஸூ குலே தோ ஷாம் கே தில் ஸே துவா(ன்உடே

ஸுலே கதம் தோ ஜுக் கே நா ஃபிர் ஆஸ்மான் உடே

ஸௌ பார் ஜில்மிலாயே மா மா ஆஃப்தாப் கீ

அப் க்யா மிஸால் தூ(ன்)

உன் கூந்தல் விரிந்தபோது,

இரவு விரிந்தது போன்று என் மனதிற்குப் பட்டது

உன் கால்கள் தரையில் பட்டதும்,

வானம் மீண்டும் எழாது என்று தோன்றியது

இந்தச் சூரிய ஓளி நூறு மடங்கு ஜொலித்தது!

உன் அழகிற்கு எதை ஒப்பிடுவது?..

.

தீவார்தர் கா ரங்க்  யஹ் ஆன்சல், யஹ் பைர்ஹன்

கர் கா மேரே சிராக் ஹை பூடா ஸா யஹ் பதன்

தஸ்வீர் ஹோ தும் ஹீ மேரே ஜன்னத் கே க்வாப் கீ

அப் க்யா மிஸால் தூ(ன்)….

உன்னுடைய உடை, என் அடைக்கலத்தின் நிறமாகும்

இந்த மெல்லிய உடலே என் வீட்டின் விளக்காகும்!

என் கனவில் காணும் சொர்க்கத்தின் உருவம் நீ தான்!

உன் அழகிற்கு எதை இணையாகச் சொல்வது!

Song: Ab kya misal dhun Film: Aarti, 1962 Lyrics: Majrooh Sultanpuri

Music: Roshan Singer. Mohammad Rafi

YouTube link:  https://www.youtube.com/watch?v=ad5BcGFpxog

இது மிகப் பிரபலமான பாட்டு. ரஃபியின் குரலில் இனிமையாக அமைந்த பாடல். ரோஷனின் சிறந்த இசை. இருந்தாலும் இந்தப் பாட்டில் என்ன நயம் இருக்கிறது? ஒரு பெண்ணை வர்ணிக்கும் சராசரிப் பாட்டு தான்! மேலும் இந்த வர்ணனை இந்த நாயகிக்குப் பொருந்தவில்லை! முதலில் பார்த்த பாட்டிலும் இங்கும் நாயகி ஒருவர் தான்- மீனா குமாரி- இது தற்செயலாக அமைந்தது! இரண்டிலும் மீனா குமாரியின் தோற்றத்தைப் பாருங்கள்-எதில் உண்மை அழகு? பாட்டை நான் குறை சொல்லவில்லை- கவிதையில் நயம் இல்லை என்பது என் கருத்து.

முன்பு பார்த்த ராஜேந்த்ர கிருஷ்ணாவின் கவிதை இலக்கியத் தரத்தில் அமைந்தது. 

இந்த இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இருந்தாலும் மெட்டுக்கள் வேறு! சங்கீதப் பரிச்சயம் உள்ளவர்கள்தான் மெட்டை வைத்து ராகத்தைச் சொல்ல முடியும்!

இரண்டும் நல்ல பாட்டுக்களே!

Virus-free. www.avast.com

Attachments area

Preview YouTube video Sakhi Ri Sun Bole Papiha (HD) – Miss Mary (1957) – Meena Kumari – Lata mangeshkar Hits

https://i.ytimg.com/vi/zS4b3WlymvE/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Sakhi Ri Sun Bole Papiha (HD) – Miss Mary (1957) – Meena Kumari – Lata mangeshkar Hits

Preview YouTube video Miss Mary (1957) sakhi ri sun bole papeeha us paar Asha Lata Hemant Rajendar Krishan

https://i.ytimg.com/vi/hgublnQTcUk/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Miss Mary (1957) sakhi ri sun bole papeeha us paar Asha Lata Hemant Rajendar Krishan

Preview YouTube video Ab Kya Misaal Doon | Classic Romantic Song | Mohmmed Rafi’s Best Song | Aarti 1962 Hindi Movie

https://i.ytimg.com/vi/ad5BcGFpxog/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Ab Kya Misaal Doon | Classic Romantic Song | Mohmmed Rafi’s Best Song | Aarti 1962 Hindi Movie

Preview YouTube video Ab Kya Misal Doon Main Tumhare Shabaab Ki | Lyrical Song | Aarti 1962 | Mohammed Rafi Hit Songs

https://i.ytimg.com/vi/WchI8cTVxi8/hqdefault.jpg

https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

Ab Kya Misal Doon Main Tumhare Shabaab Ki | Lyrical Song | Aarti 1962 | Mohammed Rafi Hit Songs

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: