
Post No. 8210
Date uploaded in London – – – 20 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 73 – ஒரு ராகம் இரு மலர்கள் – 6 – துர்கா ராகம்!
R. Nanjappa
துர்கா ராகம்!
துர்கா ராகம் கர்னாடக சுத்த சாவேரியிலிருந்து வந்தது என்று சிலர் சொல்வார்கள். தொடர்புடையதாக இருக்கலாம், அதிலிருந்தே வந்தது எனச் சொல்ல முடியாது என்பர் வேறுசிலர். பொறுமை, பயமின்மை ஆகிய மன நிலைகளைக் காட்டும் ராகம் என்பார்கள். இதில் இரண்டு பாட்டுக்கள்.
தும் நா ஜானே
तुम ना जाने, किस जहां में खो गए
हम भरी दुनियाँ में, तन्हां हो गए
मौत भी आती नहीं, आस भी जाती नहीं
दिल को ये क्या हो गया, कोई शय भाती नहीं
लूट कर मेरा जहां, छूप गए हो तुम कहाँ
तुम ना जाने, किस जहाँ…
एक जान और लाख गम, घुट के रह जाए ना दम
आओ तुमको देख लें, डूबती नज़रों से हम
लूट कर मेरा जहां, छूप गए हो तुम कहाँ
तुम ना जाने, किस जहाँ…
தும் நா ஜானே கிஸ் ஜஹான் மே கோகயே
ஹம் படீ துனியாமே தன் ஹா ஹோகயே
நீ எந்த உலகத்தில் மறைந்துவிட்டாயோ, தெரியவில்லை
நான் இந்தப் பரந்த உலகில் தனிமையாக ஆகிவிட்டேன்!
மௌத் பீ ஆதீ நஹீ, ஆஸ் பீ ஜாதீ நஹீ
தில் கோ யே க்யா ஹோகயா, கோயி ஷய் பாதீ நஹீ
லூட் கர் மேரா ஜஹா(ன்) சுப் கயே ஹோ தும் கஹா(ன்)
தும் நா ஜானே…
மரணம் வரமாட்டேன் என்கிறது, ஆசையும் விடமாட்டேன் என்கிறது!
மனதிற்கு என்ன நேர்ந்துவிட்டது, எதிலும் மகிழ்ச்சி இல்லை!
என் இடத்தைக் கொள்ளையடித்துவிட்டு
இப்பொழுது எங்கு மறைந்திருக்கிறாய்?
நீ எந்த உலகில் மறைந்துவிட்டாயோ, தெரியவில்லை!.
ஏக் ஜான் ஔர் லாக் கம், குட் கே ரஹ் ஜாயே நா தம்
ஆவோ தும் கோ தேக் லே(ன்), டூப்தி நஃஜ்ரோ(ன்) ஸே ஹம்
லூட் கர் மேரா ஜஹா(ன்) சுப் கயே ஹோ தும் கஹா(ன்)
தும் நா ஜானே…
இந்த ஒரு உயிருக்குதான் எத்தனை துன்பங்கள்!
இந்த உயிரை அப்படியே அமுக்குகின்றன!
இந்த மறையும் கண்ணொளியுடன் ஒருமுறை பார்த்துவிடுகிறேன், வா
என் இடத்தைக் கொள்ளையடித்துவிட்டு எங்கு மறைந்து போனாய், தெரியவில்லை
நீ எந்த உலகத்தில் மறைந்து விட்டாயோ, தெரியவில்லை!
Song: Tum na jaane kis jahan mein Film: Sazaa 1951, Lyrics: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer: Lata Mangeshkar
YouTube link: https://www.youtube.com/watch?v=uSkgzTahEfg
எத்தனை அழகிய பாட்டு! 70 வருஷங்கள் ஆகியும் கேட்கத் தெவிட்டாதது! துர்கா ராகத்தின் அம்சங்களை முற்றிலும் அடக்கியது! பர்மனின் ஆரம்பகால மகத்தான பாடல்களில் ஒன்று!
இப்பொழுது ஒரு அற்புதமான பாட்டு, 1938ம் வருஷத்தியது! கே/ஸீ,டே, உமா சஷீ, கே.எல் சைகல் என்ற மூன்று அற்புதக் குரல்களில்!
துனியா ரங்க் ரங்கீலி பாபா
கே.ஸி.டே
duniyaa rang rangeeli baabaa, duniyaa rang rangeeli
duniyaa rang rangeeli baabaa, duniyaa rang rangeeli
yeh duniyaa ik sundar bagiyaa shobhaa iski nyaari hai
yeh duniyaa ik sundar bagiyaa shobhaa iski nyaari hai
har daari par jaadoo chhaayaa
har daari par jaadoo chhaayaa
har daari matwaari hai
adbhut panchhi phool manohar
adbhut panchhi phool manohar
kali-kali chatkeeli baabaa
duniyaa rang rangeeli
duniyaa rang rangeeli baabaa, duniyaa rang rangeeli
a-ha-haa-a-ha-haa-a-ha-haa-a-ha-haa, a-ha-haa-a-ha-haa-a-ha-haa
அப்பனே, இந்த உலகம், இந்த வாழ்க்கை எத்தனை வண்ணமயமானது!:
இந்த உலகம் எத்தனை இன்பமயமானது!
இந்த உலகம் ஒரு அழகிய வண்ணமயமான சோலை!
இது தினமும் புதிது புதிதாக அழகிய வண்ணம் காட்டும்!
ஒவ்வொரு இலை, ஒவ்வொரு கிளையும் ஜாலம் நிறைந்தது!
ஒவ்வொன்றும் இன்பத்தில் திளைத்திருக்கிறது!
ஒவ்வொரு பறவையும் ஒரு அற்புதம்!
ஒவ்வொரு அழகிய மலரும் மனதைக் கொள்ளைகொள்கிறது!
ஆஹா, இந்த வண்ணமயமான உலகம்!
அப்பனே! மகிழ்ச்சியூட்டும் வண்ண உலகம்!
உமா சஷீ:
kadam kadam par aashaa apnaa roop anoop dikhaati hai
kadam kadam par aashaa apnaa roop anoop dikhaati hai
bigde kaaj banaati hai, dheeraj ke geet sunaati hai
bigde kaaj banaati hai, dheeraj ke geet sunaati hai
iskaa sur misri se meethaa iski taal sajeeli baabaa
duniyaa rang rangeeli
duniyaa rang rangeeli baabaa, duniyaa rang rangeeli
a-ha-haa-a-ha-haa-a-ha-haa-a-ha-haa, a-ha-haa-a-ha-haa-a-ha-haa
அப்பனே, இந்த உலகம் எத்தனை வண்ணமய மானது! இன்பமயமானது!
இங்கு ஒவ்வொரு அடியிலும் நம்பிக்கை, ஆசை மலர்கிறது!
விதியும் மாறுகிறது, நல்லது விளைகிறது!
தேனை விட இனிய கீதம், அரிய தாளத்துடன் மனதிற்கு இதமளிக்கிறது!
இந்த உலகம் வண்ணமயம், ஆனந்த மயம்!
அப்பனே, இந்த உலகம், இந்த வாழ்க்கை எத்தனை வண்ணமயமானது
இன்பமயமானது
கே.எல் சைகல்
dukh ki nadiyaa jeewan naiyaa aashaa ke patwaar lage
dukh ki nadiyaa jeewan naiyaa aashaa ke patwaar lage
o naiyaa ke khene waale
o naiyaa ke khene waale
naiyaa teri paar lage,
paar basat hai desh sunehraa
paar basat hai desh sunehraa
kismat chhail-chhabeeli baabaa
duniyaa rang rangeeli
duniyaa rang rangeeli baabaa, duniyaa rang rangeeli
duniyaa rang rangeeli baabaa, duniyaa rang rangeeli
அப்பனே, இந்த உலகம் எத்தனை வண்ணமயமானது!
வாழ்க்கை என்னும் ஓடம்–
நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்னும் இரு துடுப்புகளைக்கொண்டு
துக்கம் என்னும் நதியைக் கடக்கிறது!
ஒடக்காரனே, உனக்கு நல்லதே நடக்கட்டும்!
உனது ஓடம் நல்ல முறையில் அக்கரை சேர்வதாக!
அங்கே வியத்தகு உலகம் காத்திருக்கிறது!
என்றும் விளையாடும் விதி பார்த்திருக்கிறது!
உலகம் வண்ணமயமானது, அப்பனே, இன்பமயமானது!
Song: Duniya rang rangeeli Film: Dharti Mata, 1938 Lyrics: Pt.Sudarshan
Music: Pankaj Mullick Singers: K.C.Dey, Uma Sashi, K.L.Saigal
Youtube link : https://www.youtube.com/watch?v=cIB1rShQfNU
இந்தப் பாட்டின் அருமையை தற்காலத்தவர் முழுதும் உணர்கிறார்களோ, என்னவோ தெரியாது!
அப்போது சினிமா ‘பேசத்’ தொடங்கி சில வருஷங்களே ஆகியிருந்தது! பாட்டுப் பதிவில் உத்திகள் இல்லை! நடித்துக்கொண்டே பாட வேண்டும், அப்பொழுதே பதிவாகும்! இங்கு பாடும் மூன்று பேரில் இருவர் பெரிய புள்ளிகள்! கே.ஸி.டே மன்னா டேயின் மாமா! அவர் 14 வயதில் கண் பார்வை இழந்தார். பெரிய பாடகரானார், நடிக்கவும் செய்தார், இசையும் அமைத்தார். எஸ்.டி. பர்மனுக்கும் ஆசிரியர்! பிறருக்கு குரல் கொடுப்பதை விரும்பவில்லை, அதனால் மன்னா டேவிற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அவரை அறிமுகப்படுத்தினார்!
கே.எல் சைகல் பற்றிச் சொல்லவே வேண்டாம்! பின் வந்த எல்லா பாடகர்களுக்கும் அவர்தான் ஆதர்சம்!
இங்கு மூவரின் குரல்களும் எவ்வளவு இயற்கையாக இருக்கின்றன! பாடிக்கொண்டே நடித்தார்கள், ஆனாலும் எவ்வளவு நன்றாகப் பதிவாகியிருக்கிறது! காலத்தால் அழியாத பாடல்! இதை நாம் மறக்காமல் செய்தது அன்றைய ரேடியோ சிலோன்!
துர்கா ராகத்தில் அமைந்த அரிய பாடல்! பாடலும் எத்தனை அழகிய கவிதையாக இருக்கிறது!
மிஸ்ஸியம்மாவில் வந்த “பிருந்தா வனமும் நந்த குமாரனும்” என்ற பாட்டிற்கு இதுதான் ஆதாரம்!
இப்படி ஒரு ராகத்தில் எத்தனை நல்ல மெட்டுக்கள் அமைக்கிறார்கள்!
Attachments area
Tum na jane kis jahan me kho gaye..Sazaa1951- Lata -Sahir – S D Burman..a tribute
Tum Na Jaane Kis Jahaan Mein Kho Gaye | Sazaa (1951) Songs | Nimmi | Popular Hindi Classics
Preview YouTube video Duniya Rang Rangili Baba-Dharti Mata(1938)