
WRITTEN BY R. NANJAPPA
Post No. 8216
Date uploaded in London – – – 21 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
R. Nanjappa
ராகம் பிலூ!
பிலூ திரை இசைக்காரர்களுக்கு மிகவும் பிடித்த ராகம். பல வித சந்தர்ப்பங்களில், பல மன நிலைகளை வெளியிட இது வசதியானது. உ.பி, பீஹார் பகுதிகளில் நாட்டுப்புற இசையும் இந்த ராகத்தின் சாயல் கொண்டது. இது மழைக் காலத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மகிழ்ச்சி, களிப்பு, மனதைத் தொடும் நிகழ்ச்சிகள் ஆகிய நிலைகளில் இந்த ராகத்தை பயன்படுத்துவர். நமது சினிமாவில் அனேகமாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள்.
கீழ்வரும் பாட்டு சாந்தாராமின் “பர்ச்சாயின்” என்ற படத்தில் வருவது. இங்கே ஹீரோ வாழ்க்கையில் பல துன்ப அனுபவங்களால் மனம் தளர்ந்திருக்கிறார். கண் பார்வையும் இல்லை. அவருக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்த பாடல். கேள்வி பதில் வடிவில் இருக்கிறது.
அப்னீ கஹோ, குச் மேரீ ஸுனோ
Apni kaho, kuch meri suno
kya dil ka lagaana bhool gaye, kya bhool gaye
நீ எதாவது சொல், நான் சொல்வதையும் கேள்
மனம் விட்டுப் பேசிப் பழகுவதை மறந்துவிட்டாயா, என்ன?
Rone ki aadat aisi padi,
hansne ka taraana bhool gaye, haan bhool gaye
அழுவதே வழக்கமாகிவிட்டது
சிரிப்பதையே மறந்துவிட்டேன்; ஆம், சிரிப்பதையே மறந்துவிட்டேன்
kaali raaten beet gayin
phir chandni raaten aayi hain
phir chandni raaten aayi hain
இருண்ட இரவுகள் மறைந்துவிட்டன
மீண்டும் நிலவொளியுடன் கூடிய இரவுகள் வந்து விட்டன
dil mein nahin ujiyaala mere
gham ki ghataayen chhayi hain
gham ki ghataayein chhaayi hain
என் மனதில் ஒளி எதுவும் இல்லை
துன்பத்தின் மேகமே சூழ்ந்திருக்கிறது
preet ke waade yaad karo
kya preet nibhana bhool gaye
kya bhool gaye
அன்பின் உறுதிமொழியை நினைவுபடுத்திக் கொள்
அன்பின் மொழியை நிறைவேற்றுவதைக் கூட மறந்து விட்டாயா, என்ன?
நீ எதாவது சொல்…
bhoola hua hai raah musaafir
bichhda hua hai manzil se
bichhda hua hai manzil se
பயணிக்கு வழி மறந்துபோய் விட்டது
இலக்கிலிருந்து விலகிவிட்டான்
khoye huye raste ka pata
tum poochh lo khud apne dil se
tum poochh lo khud apne dil se
மறந்து போன வழியை உன் மனதைக் கேட்டே தெரிந்துகொள்
chalte chalte itna thake
manzil ka thikana bhool gaye
haan bhool gaye
வழி நடந்து நடந்தே இத்தனை களைத்துப் போய்விட்டேன்
இலக்கின் திசையே மறந்துபோய்விட்டது
ஆம், மறந்து போய் விட்டது
nazdeek badho
nazdeek badho
yeh mausam nahin phir aane ka
yeh mausam nahin phir aane ka
அருகில் நகர்ந்து வா, சிறிது அருகில் வா
இந்த மாதிரி சமயம் மீண்டும் வராது
nazdeek shama ke jaane se
kya haal hua parwaane ka
kya haal hua parwaane ka
விளக்கின் அருகில் சென்றால்
விட்டிற் பூச்சிக்கு என்ன நேரும், தெரியுமா?
mitne ka fasaana yaad raha
jalne ka fasaana bhool gaye
kya bhool gaye
மறைந்து போன கதை நினைவிருக்கிறது
எரிந்துபோன கதை மறந்துவிட்டது போலும்!
(அன்பில் கரைந்தது மறந்துவிட்டது போலும்)
apni kaho kuch meri suno
kya dil ka lagaana bhool gaye
kya bhool gaye
ஏதாவது சொல், நான் சொல்வதையுக் கேள்
Song: Apni kaho, kuch meri suno Film: Parchain 1952, Lyrics: Noor Lucknowi
Music: C.Ramchandra Singers: Talat Mahmood & Lata Mangeshkar
Youtube link: https://www.youtube.com/watch?v=anFM9w4dI28
இப்போது இதே ராகத்தில் வேறு இரட்டையர்கள் குரலில் ஒரு பாட்டு:
து ஜோ மேரே ஸுர் மே
तु जो मेरे सुर में, सुर मिला ले, संग गा ले,
तो जिंदगी हो जाए सफल,
तु जो मेरे मन को, घर बना ले, मन लगा ले,
तो बंदगी हो जाए सफल
चांदनी रातों में, हाथ लिए हाथों में,
डूबे रहे एक दूसरे की रसभरी बातों में,
तु जो मेरे संग में, मुस्कुरा ले, गुनगुना ले,
तो जिंदगी हो जाए सफल
तु जो मेरे मन…
क्यूँ हम बहारों से, खुशियाँ उधार लें,
क्यूं ना मिल के हम ही खुद अपना जीवन सवार लें,
तू जो मेरे पथ में, दीप उगा ले, हो उजाले,
तो बंदगी हो जाए सफल…
तु जो मेरे सुर में…
म ध नि सा, म ग रे सा, नि ग ग, सा रे रे, नि सा सा,
ग रे सा नि ध म, ग सा ग म ध नि सा…
तु जो मेरे सुर में, सुर मिला ले, संग गा ले,
तो जिंदगी हो जाए सफल,
तु जो मेरे सुर में…
து ஜோ மேரே ஸுர் மே சுர் மிலாலே, ஸங்க் காலே
தோ ஃஜிந்தகீ ஹோஜாயே ஸஃபல்
நீ என் ஸ்வரத்துடன் உன் ஸ்வரத்தை இணைத்து,
என்னுடன் சேர்ந்து பாடினால்
வாழ்க்கையே நிறைந்துவிடும்!.
து ஜோ மேரே மன் கோ கர் பனாலே,,மன் லகாலே
தோ பந்தகீ ஹோஜாயே சஃபல்.
நீ என் மனதில் குடிபுகுந்து, மனதிற்குப் பிடித்துவிட்டால்
பின் இந்த பிணைப்பு பயனுள்ளதாகிவிடும்!
சாந்த்னீ ராதோ(ன்) மே, ஹாத் லியே ஹாதோ(ன்) மே
டூபே ரஹே ஏக் தூஸ்ரே கீ ரஸ்பரீ பாதோ(ன்) மே
து ஜோ மேரே ஸங்க் மே முஸ்குராலே, குன்குனாலே
தோ ஃஜிந்தகீ ஹோஜாயே ஸஃபல்
நிலவொளி வீசும் இந்த இரவில், கைகோர்த்து
நம் இனிய பேச்சில் மயங்கி இருப்போம்!
நீ என்னுடன் சேர்ந்து முறுவலித்து, சேர்ந்து பாடினால்
வாழ்க்கையே பயனுள்ளதாகிவிடும்!
க்யோ(ன்) ஹம் பஹாரோ(ன்) ஸே குஷியா(ன்) உதார் லே
க்யோ(ன்) ந மில்கே ஹம் ஹீ குத் அப்னா ஜீவன் ஸவார் லே
துஜோ மேரே பத் மே தீப் உகாலே, ஹோ உஜாலே
தோ ஃஜிந்தகீ ஹோஜாயே ஸஃபல்
நாம் ஏன் இந்த வசந்தத்திலிருந்து மகிழ்ச்சியை பெறக்கூடாது?
நாம் இருவரும் சேர்ந்து ஏன் இந்த வாழ்க்கையில் பயணிக்கக்கூடாது?
நீ என் வழியில் தீபத்தை ஏற்றுவாய், ஒளி பரவிவிடும்
பின் வாழ்க்கை பயனுள்ளதாகி விடும்!
Song: Tu jo mere sur mein Film : Chitchor 1976
Lyrics& Music: Ravindra Jain
Singers: Yesudas & Hemlata
Youtube link ; https://www.youtube.com/watch?v=pNiFNdwfC…..
சாஸ்திரீய அடிப்படை என்றால் வெளுத்துக்கட்ட ஏசுதாசுக்கு என்ன தடை!
இந்தப் பாட்டிற்கு அவர்குரல் மிகவும் பொருந்தி இருக்கிறது!
ஒரே ராகத்தில் இரண்டு மெட்டுக்கள், இரண்டுவித சூழ்நிலைகளில்!
இதுதான் நம் இசையமைப்பாளர்களின் திறமை!
இங்கே ஹேமலதா சற்றுத் தடுமாறுவது போல் தோன்றும்! அது கதையின் தொடர்பினால் வருவது! இங்கே பாடும் பெண்மணி பாட்டு கற்றுக்கொள்கிறார்!
யாதோன் கீ பாராத் படத்தில் (1973) வரும் “சுராலியாஹை தும் நே ஜோ தில் கோ” என்ற பாட்டும் இதே ராகத்தில் அமைந்த மெட்டு தான்! ஆர்.டி.பர்மனின் இசை!
Youtube link: https://www.youtube.com/watch?v=HvY9nHIAneg
பின்னணி இசையினால் மேற்கத்திய மெட்டுபோல் தெரியும்!
இப்படி பல ராகங்களிலும் பல மெட்டுக்களை அமைத்திருக்கிறார்கள் நம் பழைய இசையமைப்பாளர்கள்.
ராகம் என்றாலும் சொந்தக் கற்பனையும் இருக்கும்- ராகத்தை அப்படியே ‘காப்பி’ யடிக்க மாட்டார்கள்!. ராக அடிப்படை+ கற்பனை நுணுக்கம் இரண்டும் சேரும்போது நல்ல பாட்டு உருவாகிறது!
இந்தத் தொடர் அடுத்த கட்டுரையுடன் நிறைவடைகிறது.
Virus-free. www.avast.com |
Attachments area
apani kaho kuchh meri suno..best of talat – lata – parchhaiyan 1952– V. shantaram-
Preview YouTube video Tu Jo Mere Sur Mein Sur Milaye from Movie chitchor
Tu Jo Mere Sur Mein Sur Milaye from Movie chitchor
Preview YouTube video Tu Jo Mere Sur Mein