நிகழ்காலத்தின் சக்தி! (The power of Now!) – இந்த க்ஷணத்தை நழுவ விடாதீர்! (Post No.8233)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8233

Date uploaded in London – – –24 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நிகழ்காலத்தின் சக்தி! (The power of Now!) – இந்த க்ஷணத்தை நழுவ விடாதீர்!

ச.நாகராஜன்

நிகழ்காலத்தைக் கவனி!

நிகழ்காலம் என்பது 4 முதல் 8 விநாடிகள் என்று அறிவியல் விளக்குகிறது. எவன் ஒருவன் நிகழ்காலத்தில் வாழ்கிறானோ அவனுக்குப் பிரச்சினைகளே ஏற்படாது. ஒரு சுபாஷிதத்தைப் பார்ப்போம் :-

பவிஷ்யம் நாநுசந்தத்தே நாதீதம் சிந்தயத்யபி |

வர்தமானநிமேஷம் து ஹஸன்னேவாநுவர்ததே ||

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதையோ அல்லது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையோ இவன் சிந்திக்க மாட்டான். ஆனால் நிகழ்காலத்தில் என்ன நடக்கிறதோ அதை புன்சிரிப்புடன் பார்த்து கொண்டு செல்வான்.

This one do not consider what is to happen, nor about what has already passed; but he simply smiles and goes after the current affairs.

(Translation by Dr N.P. Unni, Ex-Vice Chancellor, Sri Sankaracharya Sanskrit University, Kaladi, Kerala)

*

நிகழ்காலத்தைக் கவனித்து நட!

யததீதமதீதம் தத் சந்திக்தம் யத்நாகதம் |

தஸ்மாத் யத்ப்ராப்தகாலம் தன்மானவேன விதீயதாம் ||

எது நடந்ததோ அது (கடந்த காலத்தில்) நடந்து முடிந்து விட்டது. எது நடக்கப்போகிறதோ அது (எதிர்காலத்தில்) இனிமேல் தான் நடக்கப் போகிறது. ஆகவே இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதைப் பற்றித்தான் மனிதர்கள் கவனிக்க வேண்டும்.

What has already happened is over and what is to happen in future is yet to come. Hence what is to be done at present should be taken care by humans.

(Translation by Dr N.P. Unni, Ex-Vice Chancellor, Sri Sankaracharya Sanskrit University, Kaladi, Kerala)

*

ஒவ்வொரு க்ஷணமும் அரிதே!

ஆயுஷ: க்ஷண ஏகோபி சர்வரத்னைர்ன லப்யதே |

நியதே தத்வ்ருதா யேன ப்ரமாத: சுமஹானஹோ: ||

ஆயுளில் ஒரு க்ஷணம் கூட அனைத்து ரத்னங்களையும் கொடுத்து அடைய முடியாது. அப்படிப்பட்ட அரிய கணங்களை வீணாக்குபவன் ஒரு முட்டாள்.

Even a moment of the life span could not be procured by all the jewels. He who wastes such precious time is a fool.

(Translation by Dr N.P. Unni, Ex-Vice Chancellor, Sri Sankaracharya Sanskrit University, Kaladi, Kerala)

*

கோடி தங்கக் காசுகள் கொடுத்தாலும் ஒரு க்ஷணம் கிடைக்காது!

ஆயு: க்ஷணலவமாத்ரம் ந லப்யதே ஹேமகோடிபி: க்வாபி |

தச்சேத் ரச்சதி சர்வ தத: காதிகா ஹானி: ||

ஆயுளில் ஒரு கணம் கூட கோடிக்கணக்கான தங்கக் காசுகள் கொடுத்தாலும் கிடைக்காது. அது கழிந்து விட்டால் அதை விட கேடு வேறு என்னவாக இருக்க முடியும்!

Even a moment of life could not be obtained by crores of gold coins and if it passes what could be more harmful than this.

(Translation by Dr N.P. Unni, Ex-Vice Chancellor, Sri Sankaracharya Sanskrit University, Kaladi, Kerala)

*

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்!

ந கச்சிதபி ஜானாதி கிம் கஸ்ய ஷ்வோ பவிஷ்யதி |

அத: ஷ்வ: கரணீயானி குர்யாத்தைவ புத்திமான் ||

நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே நாளை செய்ய வேண்டியதை இன்றே புத்திமானானவன் செய்ய வேண்டும்.

Nobody knows as to what is to happen tomorrow. Hence whatever is to be done tomorrow may be done today itself if one is intelligent.

(Translation by Dr N.P. Unni, Ex-Vice Chancellor, Sri Sankaracharya Sanskrit University, Kaladi, Kerala)

கபிலதேவ நாயனார் பாடிய கபிலர் அகவலில் வரும் வரிகள் இவை;

பெருக்காறொத்தது செல்வம்

பெருக்காற் றிடிகரை யொத்த திளமை

இடிகரை வாழ் மரமொத்தது வாழ்நாள்

ஆதலால் ஒன்றேசெய்யவும்வேண்டும்

அவ்வொன்றும நன்றேசெய்யவும்வேண்டும்

அந்நன்றும் இன்றேசெய்யவும்வேண்டும்

அவ்வின்றும் இன்னேசெய்யவும்வேண்டும்

அவ்வின்னும்

நாளைநாளைஎன்பீராகில்

நாளைநம்முடைமுறைநாள் ஆவதுமறியீர்

நமனுடை முறைநாள் ஆவதுமறியீர் (138 அடிகள் கொண்டது கபிலர் அகவல்)

இந்த அகவலினால் பெரிதும் கவரப்பட்ட மஹாகவி பாரதியார் அதை எளிய நடையில் புதிய பாடலாகத் தந்தார்.

அவற்றில் வரும் வரிகள் இவை :-

மரந்தோன்றுதல் போன்றது வாழ்நாளும்

தோற்றங் கொண்டிதனிடையே – நீர்

செயத்தக்க செய்கையும் ஒன்றே தான்

வேற்றுளங் கொள்ளாமே – செய்ய

வேண்டியது நன்றே தான்

நன்றே செய்யவும் வேண்டும் – அதை

நாளைச் செய்வோமென்று போக்காமே

இன்றே செயல் வேண்டும் – அதை

இப்பொழுதே செய்திடல் வேண்டும்

அன்றிப்புள் சோம்பரினால் – இதை

ஆற்றுவம் நாளையென்றிருப்பரேல்

கொன்றுமை நாளைக்கே – நமன்

கொண்டு சென்றாற் பின்னரெது செய்வீர்

நாளைக்கு நாளைக்கென்றால் – அது

நம்முடை நாளோ, நமனுடைத்தோ?

வேளைக்குள் அறம் செய்வீர்!

tags – நிகழ்காலத்தின் சக்தி, The power of Now

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: