
Post No. 8235
Date uploaded in London – 24 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழர்களுக்கு 1500 ஆண்டு கால நல்ல பெயரும் உண்டு ;கெட்ட பெயரும் உண்டு. முதலில் நல்ல பெயரைப் பார்ப்போம்.சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலகிலேயே நீண்டகாலம் ஆண்ட மன்னர் பரம்பரை ஆகும். ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் (King Kharavela) என்ற புகழ் பெற்ற மன்னன் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் கூட்டணி பற்றி குறிப்பிட்டிருக்கிறான் . அவனது காலம் கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு. அவன் 113 ஆண்டுக் ((த்ரமில சங்காதன் = தமிழ் கூட்டணி ) கூட்டணியை முறியடித்ததாகக் குறிப்பிடுவதால் அசோகர் காலத்தை நெருங்கி விடுகிறோம். அவனும் தமிழ் மன்னர்களைக் குறிப்பிடுகிறான் ஆக 12, 13 நூற்றாண்டு வரை இந்த மூன்று வம்சம் பற்றியும் நாம் படிக்கிறோம். அதற்குப் பின்னர் சுந்தர பாண்டியன் அழைப்பில் வந்த முஸ்லீம் மன்னர்கள் தமிழ் அரச வம்சத்தை அடியோடு ஒழித்து விட்டனர். அங்குமிங்கும் ஒன்றிரண்டு ‘செல்லாக்காசுகள்’ வம்ச பரம்பரை பற்றி பிதற்றின அசோகன் காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை 1500 ஆண்டுகளுக்கு மூவேந்தர்களும் இருந்தார்கள். இது போல மூன்று வம்சங்கள் உலகில் வேறு எங்கும் ஆண்டதில்லை . ஆக (Guinness Book of Records) கின்னஸ் புஸ்தகத்தில் பொறிக்க வேண்டிய விஷயமே .
கெட்ட பெயர் என்ன?
உலகிலேயே தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்ட வம்சமும் தமிழ் வம்சமே. இது போல 1500 ஆண்டுகளுக்கு சண்டையிட்ட வம்சம் எதுவுமில்லை . ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதை சங்க இலக்கியம் முதல் சுந்தர பாண்டியன் காலம் வரை பார்க்கிறோம். பிரான்சுக்கும்- இங்கிலாந்துக்கும் இடையே ஆயிரம் ஆண்டு யுத்தம் (1000 Year War) நடந்ததாகவெல்லாம் வரலாறு சொல்லும். ஆனால் அவர்கள் இடத்தை வெவ்வேறு வம்சங்கள் ஆண்டன. பாபிலோனிய, சுமேரிய, எகிப்திய நாகரீகங்களிலும் எண்ணற்ற வம்சங்கள் இருந்தன.
வடக்கிலுள்ள நந்த, மௌர்ய , குஷான, குப்த வம்சங்களும் 500 ஆண்டு என்ற எல்லையைக் கடக்கவில்லை.
இதைவிட பெரிய அதிசயம் பாண்டியர் பற்றியதாகும். அந்த அரசர்கள் அந்த வம்சத்து தொடர்ச்ச்சியைக் காட்டுவதற்கு ‘சடையன்’, ‘மாறன்’ என்ற பட்டங்களை மாறி மாறி பயன்படுத்தியதாகும் . இது போல சேர, சோழ வம்சங்களில் காண முடியாது.

ஜடா வர்மன் மகன் மாற வர்மன்
மாற வர்மன் மகன் ஜடா வர்மன்
என்று மாறி மாறி வரும்
மாறவர்மன் அவனி சூளாமணி 620-645 (பொது ஆண்டு அல்லது கி.பி)
செழியன் சேந்தன் 654-670
அரிகேசரி மாறவர்மன் 670-700
கோச்சடையன் ரணதீரன் 700-730
மாறவர்மன் ராஜசிம்மன் 730-765
பராந்தக நெடுஞ்சடையன் 765-815
மாறவர்ம ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் 815-862
வரகுண வர்மன் 862-880
பராந்தக வீர நாராயணன் 880-900
மூன்றாம் மாறவர்மன் ராஜசிம்மன் 900-920
சோழர் வெற்றி
வீர பாண்டியன் 946-966
ஜடாவர்மன் பராந்தக பாண்டியன் 1087-1132
மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் 1132-1163
சடைய வர்மன் குலசேகரன் 1163 1175
xxxxx மாறவர்மன் ????????
ஜடா வர்மன் குலசேகரன் 1190-1218
மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1216-1238
????????
ஜடா வர்மன் சுந்தர பாண்டியன் 1252-1270
மாற வர்மன் குலசேகரன் 1278-1310
ரவி வர்மன் குலசேகரன் 1311-1312
இவர்களுக்கெல்லாம் முந்தியவன் கடுங்கோன் 570-600
Source -1974 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மலர் (for kings list)
****
பாண்டிய மன்னர்களின் வரலாற்றில் நிறைய புரியாத புதிர்கள் உள்ளன .
திருவிளையாடல் புராணம் முழுதும் சம்ஸ்கிருதப் பெயர்களே உள்ளன . ஆக தமிழ் பெயர்களுடன் சம்ஸ்கிருதப் பெயர்களையும் பயன்படுத்தியதை அறிகிறோம்.
மேற்கண்ட பட்டியலில் ‘சுந்தர’, ‘குல சேகர’ என்ற இரண்டு மட்டுமே திருவிளையாடல் புராணத்துடன் ஒத்துப் போகின்றன . ஆனால் அதில் அப்பர் காலத்துக்கு முந்திய வரலாறுகளையும் காண்கிறோம்.
இதைவிட பெரிய புதிர் சுந்தர பாண்டியன் ஆகும்.
நமக்குத் தெரிந்த சுந்தர பாண்டியன்கள் இரண்டு பேர்.
ஒருவர் மீனாட்சியின் கணவர் சுந்தரர்.
இரண்டாவது ஆதி சங்கரர், அவரது சம்ஸ்கிருத உரையில் புகழும் சுந்தர பாண்டியன்.
ஆதி சங்கரர் காலத்தை 732 என்று கொண்டாலும் மேற்கூறிய பட்டியலில் சுந்தர பாண்டியன் இல்லை. காஞ்சி
பரமாசார்ய (1894-1994) சுவாமிகள் சொல்லுவது போல ஆதி சங்கரரை (BCE) கி.மு. காலத்தில் வைத்தால் மதுரை மீனாட்சி கதையும், மெகஸ்தனீஸ் சொல்லும் ‘பண்டேயா’ ராணி கதையும் பழைய சுந்தர பாண்டியனுடன் பொருந்துகிறது .
எனது கருத்து
எகிப்திலும் இந்தியாவிலும் பட்டா பிஷேக காலத்தில் மன்னருக்கு ஒரு புதுப்பெயர் கொடுக்கப்பட்டது. ஆக 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சுந்தர பாண்டியர் இருந்திருக்க வேண்டும். அவருடைய தமிழ்ப் பெயரை நாம் அறியோம் . எப்படி மாறன் , சடையன் பெயர்கள் குறைந்தது 700 வருடங்களுக்குப் பின்பற்றப்பட்டதோ அது போல அதற்கு முந்தைய 700 வருடங்களுக்கு ‘வழுதி’, ‘செழியன்’ என்ற பட்டங்கள் மாறி, மாறி வந்துள்ளன.
வாழ்க தமிழ் வளர்க பாண்டியர் புகழ்
****



கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே……….
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி’ – என்று தமிழர்கள் ஆடுவார்கள், பாடுவார்கள். இது உயர்வு நவிற்சி அணி; இதை அறியாத பாமரர் இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் (literal meaning) கொள்வர். அதாவது நாஸா (NASA) வெளியிடும் செவ்வாய், புதன் கிரக பரப்பைப் பார்த்தால் பிரம்மா ண்டமான பாறைகளைப் பார்க்கலாம். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் பூமியும் இருந்தது. பின்னர் கோடிக்கணக்கான ஆண்டுகளில் பெய்த மழை , அடித்த வெப்பத்தில் அவை சிறிதாக உடைந்தன; மணற்பரப்பும் உருவானது. தமிழர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக நம்பும் ஜீவன்களும் நமது நிலப்பரப்பில் இப்போதும் உள .
TAMIL GEOLOGIST!
ஆனால் இதிலும் ஒரு விஞ்ஞான உண்மையை தமிழன் வெளியிட்டுவிட்டான். முதலில் ‘கல்’-தான் இருந்தது; பின்னர் அது மண்ணாயிற்று . அதற்குப் பின்னர் உலோக காலம் (Copper age, Bronze age, Iron age) வந்தது என்று ஜியாலஜி படிப்போர் அறிந்த விஷயங்களை அதே வரிசையில் தமிழன் சொல்லிவிட்டான்.
இது புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள வரிகள்; இதை இயற்றியவர் ஐயனாரிதனார் . இவர் இளம்பூரணர் ,
நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்களுக்கும் முந்தையவர். ஆக குறைந்தது 800, 900 ஆண்டுகளுக்கு முந்தி வாழ்ந்தவர் அவருக்கு இவ்வளவு புவி கர்ப்பவியல் (Geology) — ஜியாலஜி தெரிந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதைவிட உலகெங்கிலும் நடக்கும் தமிழ்ச் சங்கங்களில் ஏன் சண்டை நடைபெறுகிறது என்பதையும் அவர் விளக்கி விடுகிறார். “வாளொடு” (born with the sword) முன் தோன்றிய மூத்தகுடி என்பதில் சண்டைபோடும் குணம் ரத்தத்தில் இருக்கிறது (Genetically programmed to fight) மரபணுவில் இருக்கிறது, உளவியலில் (Psychological; mindset) இருக்கிறது என்பது அவருக்கு — ஐயனாரிதனாருக்கு — புரிந்திருக்கிறது!!
மேலும் பாரதி தாசனும் இதை உறுதி ப் படுத்துகிறார் –
“கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!…………..
உதவாதினி ஒரு தாமதம் ; உடனே விழி தமிழா”
–என்று உந்துதல் கொடுக்கிறார்
ஆக தமிழன் எங்கிருந்தாலும் சேர, சோழர், பாண்டியர் போல உட்சண்டை (infighting) போட்டுக்கொண்டு , சுந்தர பாண்டியன், எட்டப்பன் போல மாற் றானை (Muslim invaders and the British) அழைத்து தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதி போலும் .
இலங்கைக்குள் பலவகை தமிழர்கள் இருப்பதும், பல்வேறு தமிழ் அமைப்புகள் போட்டி அமைப்புகளை உருவாக்கி வெவ்வேறு தமிழ்த் தேர்வுகள், இசைத் தேர்வுகள் நடத்துவதும், தமிழ்க் கோவில்களின் கமிட்டியிலிருந்து பிரிந்து போய் புதுப் புதுக் கோவில்களை அமைப்பதும் வெளிநாட்டிலும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்று சொல்லுவதைப் பார்க்கலாம்!!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை
Tags — பாண்டிய, கல்வெட்டு,
ஜடா வர்மன் ,மாற வர்மன், கல் தோன்றி மண்
–subham–