அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு -1 (Post No.8256)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8256

Date uploaded in London – – –29 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு – முதலாம் கட்டுரை!

உலக நாடுகளும் தலைமைப் பொறுப்பிற்கான மதம் பற்றிய தகுதியும்! – 1

ச.நாகராஜன்

உலகில் உள்ள நாடுகளில் குறைந்த பட்சம் 30 நாடுகள் மிக திடமாகவும் தெளிவாகவும் தாங்கள் ஒரு மதத்தைச் சார்ந்திருப்பதாக தங்கள் அரசியல் சட்டத்தில் கூறுகின்றன.

லெபனானில் அந்த நாட்டின் ஜனாதிபதி மரொனைட் கிறிஸ்டியன் சர்ச்சில் (Maronite Christian Church)  உறுப்பினராகத் தான் இருக்க வேண்டும். அந்த நாட்டின் பிரதம மந்திரி சன்னி பிரிவைச் சேர்ந்த ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும். பாராளுமன்ற சபாநாயகரோ ஷியா முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்.

சுமார் 17 நாடுகளில் நாட்டின் உயர் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்.

ஜோர்டானை எடுத்துக் கொண்டால் உயர் பொறுப்பில் இருப்பவர் முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும். டுனீஷியாவில் அந்த நாட்டில் பிறந்த எந்தவொரு முஸ்லீம் ஆண் மற்றும் பெண் ஓட்டர், ஜனாதிபதி வேட்பு மனுத் தாக்கச் செய்யத் தகுதி பெற்றவர்.

மலாசியா, பாகிஸ்தான், மௌரிடானியா (Mauritania) ஆகிய நாடுகளில் முஸ்லீம் குடி மக்கள் தான் அரசுப் பொறுப்பின் உயரிட இடத்திற்கு வர முடியும்.

அண்டோரா (Andorra) நாட்டில் ஒரு கிறிஸ்தவர் தான் உயர் அரசுப் பொறுப்பிற்கு வர முடியும்.

பூடான் மற்றும் தாய்லாந்து புத்த மதத்தைச் சேர்ந்தவர் தான் அரசுப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகின்றன.

இந்தோனேஷியா பஞ்சசீலக் கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர் தான் உயர் அரசுப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகிறது. அங்கு முஸ்லீம்கள் தான் மெஜாரிட்டியினர் என்பது குறிப்பிடத் தகுந்தது. “அனைத்துப் பண்பாடுகளின் சங்கமமாக” பஞ்சசீலம் திகழ்கிறது.

பர்மா (மயன்மார்) தனது ஜனாதிபதி எந்தவொரு மதத்தையும் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்கிறது.

பொலிவியா, மெக்ஸிகோ, எல்சால்வடார் உள்ளிட்ட எட்டு நாடுகள் மத போதகர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக் கூடாது என்று கூறுகின்றன.

இன்னும் சுமார் 19 நாடுகள் அரசின் தலைமைப் பீடத்தில் உள்ளவர்கள் மதத்தைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இவற்றில் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, நியூஜிலாந்து உள்ளிட்ட 16 நாடுகள் காமன்வெல்த் உறுப்பினர்கள் – இவற்றிற்கு இரண்டாம் க்வீன் எலிஸபத்  தான் – Defender of Faith  என்றும் இவர் அழைக்கப்படுகிறார்-அரசின் தலைவர். இந்த வகையில் சேரும் மற்ற நாடுகள் – டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன்.

உலகின் 85 சதவிகித நாடுகள் தங்கள் குடி மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அரசின் தலைமைப் பொறுப்பிற்கு வரத் தகுதியுள்ளவர் தான் எனக் குறிப்பிடுகின்றன.

  அமெரிக்காவில் எந்த ஒரு மதம் பற்றியும் குறிப்பு இல்லை. ஆனால் அங்குள்ள பல மாகாணங்கள் “நம்பிக்கை இல்லாதோர்” (non believers) (அதாவது நாத்திகர்கள் எனலாமா?) அதிகாரப் பதவியை வகிக்கத் தடை செய்கின்றன. ஆனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான் அதிகாரப் பதவிக்கு வரவேண்டும் என்பதில்லை என்று கூறிவிட்டது.

பெரும்பாலும் அரசியல் சட்டங்கள் தாம் இவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உலக நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பீடு செய்யும் முயற்சியை புரபஸர் எஸ்.கே.சக்ரபர்த்தி மேற்கொண்டு பல சுவையான தகவல்களைத் தருகிறார்.

அவர் கூறும் சில கருத்துக்களையின் அடிப்படையில் ‘இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு’ என்ற

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

-தொடரும்

tags- அரசியல் சட்டம்-1 , ஒப்பீடு,

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: