ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம் (Post No.8274)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8274

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரபஞ்சத்தின் செங்கற்கள் போல உள்ள 118 மூலகங்களில் இதுவரை 24 மூலகங்களைப் பற்றி படித்தோம். நம் எல்லோருக்கும் சுப்பிரமணி தெரியும். ஆனால் ஆன்டி மணி ANTIMONY தெரியாது. முதலில் ஒரு சுவையான, ஆனால் அசிங்கமான, உபயோகத்தைப் பற்றிச் சொல்கிறேன்

மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு அந்தக் காலத்தில் ஆன்டிமணி மாத்திரை ANTIMONY METAL PILLS கொடுப்பார்களாம் பட்டாணி அளவுள்ள இந்த மாத்திரை குடலில் போய் அதன் விஷச்  சத்தை வெளியேற்றி குடலில் உள்ள  எல்லாவற்றையும் விரைவில் தள்ளும்.  பின்னர் மலத்துடன் மாத்திரையும் வந்து விழும். அதைக் கழுவி, சுத்தம் செய்து மறு நாளும் பயன்படுத்துவாராம் ; இதைவிடக் கொடுமை அதை தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று பரம்பரையாகவும்  பயன்படுத்தினராம்

***

இரண்டாவது சுவையான கதையைக் கேளுங்கள் .

உலகப் புகழ்பெற்ற இசை மேதை மொஸார்ட் (Mozart) .

35 வயதான உல்ப்காங் அமேதியஸ் மொஸார்ட் 1791ம் ஆண்டு வியன்னா நகரில் நோயில் விழுந்தார் . அக்டொபரில் படுக்கையில் படுத்தவர் டிசம்பரில் உயிரிழந்தார். மேலை உலகின் சங்கீத  மேதையின் அல்பாயுசுக்குக் காரணம் ஆண்டிமணி தான் .  சங்கீத  உலகில் போட்டி , பொறாமை கொள்ளை மலிவு. மொஸார்ட்டின் மீது பொறாமை கொண்ட அன்டோனியோ சலியேரி, ‘நான்தான் அவரை விஷம் வைத்துக் கொன்றேன்’ என்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக்கொண்டார். ஆனால் அப்படி அவர் ஒப்புக்கொண்ட சமயத்தில் வயதானோருக்கு வரும் நினைவாற்றல் இழப்பு நோய் (Senile Dementia) இருந்தது. இதனால் இவர் கொடுத்த வாக்குமூலத்தை ஏற்கமுடியவில்லை . இந்த நோயுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உளறுவார்கள்

இதற்கிடையில் டாக்டர்கள் அவருக்கு ஆன்டிமணி டார்ட்ரேட்  (Antimony Tartrate) மருந்து கொடுத்ததும் அதை அவர் விரும்பி உட்கொண்டதும் தெரியவந்தது. இதை அவர் தவறுதலாக அதிகம் எடுத்திருப்பார் ;அதனால்தான் உடல் நலம் குன்றினார்  என்று முடிவு செய்தார்கள்.

இதில் இன்னொரு வினோத விஷயமும் உண்டு. அக்காலத்தில் மிலிட்டரி / ராணுவ நோய் (Military Disease) என்று ஒரு கற்பனை நோய் உண்டு. அதனால்தான் அவர் 1701 நவம்பரில் இறந்தார் என்றும் எழுதி வைத்தனர். இந்த நோயின் அறிகுறிகள் – ஜுரம், கை,கால் , உடல் வீக்கம், வாந்தி. இவை அத்தனையும் ஆன்டிமணி சாப்பிட்டாலும் வரும் . உலகின் இசை நட்சத்திரம் மறைந்த அபவாதம் ஆண்டிமணியின் தலையில் விழுந்தது.

***

இனி ரசாயன விஷயங்களைப் பார்ப்போம்-

இது ஒரு உலோகம் .

வெள்ளி நிறத்தில் இருக்கும் .

அடையாளக் குறியீடு Sb.

 (ஸ்டிபியம் Stibium என்பது இதன் லத்தின் மொழிப்  பெயர் )

அணு எண் – 51

உ ருகு நிலை – 631 டிகிரி C

கொதி  நிலை- 1635 C

இது விஷ சத்துடையது. உடலுக்குத் தேவைப்படாதது.

பழங்காலத்தில் பலவித நோய்களுக்கு மருந்தாக இதை மேல் நாட்டினர் பயன்படுத்தினர் .

மிகச் சிறிய அளவில் உட்கொண்டால் உடலுறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் 

ரோமானிய வைத்தியர் டயஸ்காரிடஸ் (Dioscórides)  முதல் 1500 ஆண்டுகளுக்கு 25 வகையான ஆன்டிமணி மருந்துகள் பயன்பாட்டில் இருந்தன.

***

மூன்று டாக்டர்களுக்குத் தூக்குத் தண்டனை

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், வேண்டாத மனைவிமார்களை சொர்க்கத்துக்கு அனுப்ப வெள்ளைக்காரர்கள் ஆண்டிமணியைப் பயன்படுத்தினர். டாக்டர்கள் பால்மர்- 1885ம் ஆண்டு; ஸ்மேதர்ஸ்ட் – 1859; ப்ரிட்ச்சர்ட் -1865 ஆகியோர் மனைவிமார்  கொலை வழக்கில் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டனர் . இதே போல கணவனையும் ஒரு பெண் கொன்றாள் ; அவளுக்கு தண்டனை தரப்படவில்லை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா!

சத்திரம் நடத்திவந்த ஜார்ஜ் சாப்மேன் பல  பெண்களைக் கொன்றதற்காக 1902ல் தூக்கில் தொங்கவிடப்பட்டார் ; எல்லாம் ஆண்டிமணியின் லீலைகள்தான் .

பழங்கால மக்களும் இதைப் பலவகைகளில் பயன்படுத்தினர். பிரான்சில் லூவர் மியூசியத்தில் 5000ஆண்டு பழமையான ஆண்டிமணி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . எகிப்திய பெண்மணிகள் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணுக்கு மை தீட்ட இதன் உப்பை பயன்படுத்தினர் .பைபிளில் இஸபெல் என்ற அழகி மயக்குவதற்குப் பயன்படுத்தியதும் இதுதான். பாபிலோன் நகர சுவர்களை அழகு படுத்த நெபுகத் நேசர் இதை உபயோகித்தார்

இது தங்கம் போலவே ராஜத் திராவகத்தில் (Aqua regia)  கரையாததால் 1604ம் ஆண்டிலேயே, இதன் பெருமையை விளக்கும்  புஸ்தகமும் வெளியானது .

கிரேக்கர்கள் இதை போரில் பயன்படுத்திய விதம் எதிரிகளுக்கு திகில் ஊட்டியது. ஆன்டிமணி ஸல்ஃபைட் உப்பை எரியும் திரவத்துடன் சேர்த்து கப்பலில் இருந்து தீ வெடிகுண்டுகளை வீ சினர் . இதை எளிதில் அணைக்க முடியவில்லை. இது நீர் மேலும் எரிந்ததைக் கண்டு எதிரிகள் பயந்து நடுங்கினர்.

***

கிடைக்கும் இடம்

இன்று உலகில் இதன் தாது உப்புக்கள் சீனா , ரஷ்யா , பொலிவியா ,  தென் ஆஃப்ரிக்கா முதலிய நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது .

போர்னியோ, சுவீடன் , அமெரிக்கா , கனடா , போர்ச்சுகல், ஜெர்மனி முதலிய இடங்களில் வேறு உலோகங்களுடன் முடிச்சுகளாக (Nodules) கிடைக்கின்றன. இவற்றின் விஷத் தன்மை புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதால் உபயோகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

***

பொருளாதார உபயோகங்கள்

தாமிர தாதுக்களுடனும் இது கிடைக்கிறது . அமெரிக்காவில் பழைய ஈய பாட்டரிகளில் (Lead Batteries)  இருந்து ஆன்டிமணி எடுக்கின்றனர் இதை கலப்பு உலோகத்திலும் , அச்சுக்களிலும் பயன்படுத்துவர் . இந்த உலகத்துக்கு ஒரு அதிசய குணம் உண்டு. இது உருகி கெட்டியாகும் பொது விரிவடைகிறது. ஏனைய உலோகங்கள் சுருங்கும். இந்த அதிசய பண்பால் இதை சிலைகள் செய்ய பயன்படுத்தினர்.

ஸ்டோரேஜ் பாட்டரிகளில் (Storage Batteries)  , மற்றும் தீப்பற்றாத மெத்தைகள், கார் , டெலிவிஷன் பாகங்கள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது இதன் ஆக்சைட் தீயை அணைக்கும்.

வெளி நாடுகளில் தொட்டிலில் போடும் குழந்தைகளின் மர்மச் சாவுக்கு (Cot Deaths) மெத்தைகளில் கலக்கும் ஆன்டிமணிதான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் அது நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டது. வீட்டிலுள்ள தூசியில் இருக்கும்  ஆன் டிமணி இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பழங்கால ஈய குழாய்களில் இருந்து இந்த  தூசிப்படலம் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர் .

ஆன் டிமணி ஆராய்ச்சிகள் நீடிக்கின்றன . அவர் நல்லவரா , கெட்டவரா என்பது போகப் போகத் தெரியும் !!

tags — ஆன்டிமணி , மாத்திரை, மொஸார்ட் (Mozart), antimony

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: