
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8271
Date uploaded in London – – –2 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஸ்தல யாத்திரை : இதுவரை நான்கு கட்டுரைகளில் நாம் பார்த்த தலங்களின் எண்ணிக்கை 1363! ஒரு தலமே இரு தலைப்புகளில் இடம் பெறக் கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!
ச.நாகராஜன்
20. ஐந்து மணிகள் சிதறி விழுந்த தலங்கள்!
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று ஐந்து மணிகளாக உடைபட்டுச் சிதறியது.
அவற்றுள் சிவப்பு மணி – திருவண்ணாமலையாகவும்
மரகதம் – ஈங்கோய்மலையாகவும்
மாணிக்கம் – திருவாட்போக்கியாகவும்
நீலம் – பொதிகையாகவும்
வைரம் – கொடுமுடியாகவும் ஆயின.
21.ஆறு ஆதார தலங்கள்
திருவாரூர் – மூலாதாரம்
திருவானைக்கா – ஸ்வாதிஷ்டானம்
அருணகிரி – அநாகதம்
காளஹஸ்தி – விசுத்தி
காசி – ஆஞ்ஞா
கைலாஸம் – பிரமரந்தரம்
22. நவ தாண்டவ தலங்கள்
1. கைலாஸம் – ஸந்தியா நிருத்தம்
2. வெண்காடு – புஜங்க தாண்டவம்
3. வட ஆலங்காடு – ஊர்த்துவ தாண்டவம் (8 வகைகள்)
4. சிதம்பரம் – பரமானந்த தாண்டவம்
5. மதுரை, கீழ்வேளூர் – வியத்தியஸ்த தாண்டவம் (10 கை)
6. கும்பகோணம் – அம்பிகா தாண்டவம் (அம்பிகை கையில் தாளம், இடுப்பில்
சங்கிலி மாத்திரம், வைகல் – இடுப்பில் சங்கிலி மாத்திரம்)
7. வழுவூர் – வாமாங்கிரிமூக தரிசனம் (8 கை)
8. பேரையூர் – ஸம்ஹாரதாண்டவம்
9. உத்தரகோசமங்கை – அதிரகசிய தாண்டவம்





23. புத்தராலேயே சொல்லப் பட்ட புத்த ஸ்தலங்கள்
ஒவ்வொரு பௌத்தரும் செல்ல வேண்டிய நான்கு ஸ்தலங்களை புத்தரே அறிவித்திருக்கிறார். அவையாவன:-
லும்பினி :- புத்தர் அவதரித்த தலம் (நேபாளத்தில் உள்ளது)
புத்த கயா :- மஹாபோதி ஆலயம், பீஹார். இங்குள்ள போதி மரத்தின் அடியில் தான் புத்தர் ஞானம் அடைந்தார்.
சாரநாத் :- உத்தர் பிரதேசத்தில் உள்ளது. இங்கு தான் புத்தர் தனது முதல் உபதேச உரையை வழங்கினார்.
குசிநகரம் :- (இப்போது குசி நகர் என அழைக்கப்படும் இது உத்தர
பிரதேசத்தில் உள்ளது).இங்கு தான் புத்தர் பரிநிர்வாண நிலையை எய்தினார். (மரணமடைந்த இடம்)


24. பௌத்த ஸ்தலங்கள்
மேற்கண்ட நான்கு தலங்கள் புத்தராலேயே அறிவிக்கப்பட்ட தலங்களாகும். பின்னர் எழுந்த புத்த மத புனித நூல்கள் எட்டு தலங்களை புனித தலங்களாக கூறுகின்றன. ஒவ்வொரு பௌத்தரும் இந்த “எட்டு பெரும் இடங்களை” (The Eight Great Places) – அட்டமஹதானானி என குறிக்கப்படும் தலங்களை தரிசிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன.
- லும்பினி
- புத்த கயா
- சாரநாத்
- குசி நகரம்
- ஸ்ராவஸ்தி : இரு அற்புதங்கள் நிகழ்ந்த இடம். இங்கு தான் புத்தர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இந்த நகரில் தான் பெரும்பாலும் புத்தர் வசித்து வந்தார்.
- ராஜ்கிர் : நளகிரி என்னும் மதயானையை அடக்கி நட்பு கொள்ள வைத்த இடம். பழங்காலத்தில் பாரதத்தின் புகழ் பெற்ற பெரும் நகரம் இது.
- சங்காஸா : சொர்க்கத்திலிருந்து பூமிக்கு எழுந்தருளிய இடம் இது.
- வைசாலி : ஒரு குரங்கிடமிருந்து தேனைப் பெற்ற இடம் இது. பீஹாரில் உள்ளது இது. பழைய காலத்தில் வைசாலி நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்த மகோன்னத நகர் இது.





tags — பாரத ஸ்தலங்கள் – 6 ,பௌத்த ஸ்தலங்கள்
***