எழுமின்! விழிமின்! பாரதத்தை வல்லரசு ஆக்க உழைமின்! (Post No.8283)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8283

Date uploaded in London – – –4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜூலை 4! 1902ஆம் வருடம். வெள்ளிக்கிழமை. இரவு மணி சுமார் ஒன்பது. இந்தப் பூவுலகை விட்டு சமாதி எய்தினார் ஸ்வாமி விவேகானந்தர். அதை நினவு கூரும் ஜூலை நான்கு அன்று

ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி!

எழுமின்! விழிமின்! பாரதத்தை உயர்த்தி வல்லரசு ஆக்க தளராது உழைமின்!

ச.நாகராஜன்

பாரதத்திற்கு எழுச்சி ஊட்ட எடுத்த அவதாரம் விவேகானந்த அவதாரம்.

சுவாமிஜி வாழ்ந்த காலம் 39 வருடம் 5 மாதம் 24 நாள். அதற்குள், தான் செய்ய வேண்டிய அவதார காரியத்தை அவர் செய்து முடித்தார்.

தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு மேலை நாடுகள் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணி நடை உடை பாவனைகளில் மேலை நாட்டினரைக் காப்பி அடித்த இந்திய மக்களுக்கு அவர் கூறிய உபதேசம் :

“நீங்கள் அம்ருதஸ்ய புத்ரர்கள். தூக்கத்தில் ஆழ்ந்து இருக்காதீர்கள். உங்கள் தேசத்தின் பெருமையை உணருங்கள். அனைவருக்கும் வழி காட்டுங்கள். உயருங்கள். எழுமின், விழிமின். உலகிற்கு வழி காட்டும் அளவு உயரும் வரை தளராது உழைமின்” என்றார் அவர்.

அவரிடம் வழ வழா கொழ கொழா வார்த்தைகளே கிடையாது.

சொல்ல வந்ததை, உணர்த்த வந்ததை ஆழமாக, கம்பீரமாகச் சொல்லி விடுவார்.

உலகெங்கும் சுற்றிப் பார்த்த அவர் தனது முடிவார்ந்த முடிவாக இப்படிச் சொன்னார்:

“Going around the whole world, I find that people of this country are immersed in great Tamas (inactivity), compared with people of other countries. On the outside, there is a simulation of the Sattvika (calm and balanced) state, but inside, downright inertness like that of stocks and stones – what work will be done in the world by such people. How long can such an inactive, lazy, and sensual people live in the world?…”

இதை விடத் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

“உலகெங்கும் சுற்றிப் பார்த்த நான் மற்ற நாடுகளை விட இந்த நாட்டு மக்கள் தமஸில் – செயலற்ற தன்மையில் – மூழ்கி இருப்பதைப் பார்க்கிரேன். வெளியில் சாத்வீகம் – ஆனால் உள்ளேயோ மண்ணாங்கட்டியும் பாறைகளும் போல ஜடமான ஒரு தன்மை – இந்த மக்களை வைத்து என்ன வேலையைத் தான் செய்ய முடியும்? எவ்வளவு காலம் தான் இப்படிப்பட்ட  ஜடங்களான. சோம்பேறிகளான,புலன் நுகர்வு மிக்க மக்கள் வாழ முடியும்?”

இதனால் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்புவது என்ற முடிவு தான் அது!

அவர் கூறினார்:

“So my idea is first to make the people active by developing their Rajas, and thus make them fit for the struggle for existence.  With no strength in the body, no enghusiasm at heart, and no originality in the brain, what will they do – these lumps of dead matter! By stimulating them I want to bring life into them – to this I have dedicated my life. I will rouse them through the infallible power of Vedic Mantras. I am born to proclaim to them that fearless message – “Arise, Awake”!

“ஆகவே எனது எண்ணம், முதலில் அவர்களை ராஜஸ குணத்தை மேம்படுத்தி அவர்கள் செயல்பட வைக்க வேண்டும் என்பது தான். இப்படி அவர்களை முதலில், வாழ்வதற்கான போராட்டத்திற்குத் தயாராக ஆக்க விழைகிறேன். உடலில் கொஞ்சம் கூட வலிமை இல்லாத போது, இதயத்தில் உற்சாகம் இல்லாத போது, மூளையில் சுயமான தன்மை இல்லாத போது இந்த செத்த மொத்தைகளால் என்ன தான் செய்ய முடியும்?! அவர்களைக் கிளர்ந்து தூண்டி விட்டு அவர்களில் உயிர்ப்பைக் கொண்டு வர நான் விரும்புகிறேன். இதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். என்றுமே பிழையாத வேத ம்ந்திரங்களின் மூலமாக அவர்களை எழுப்புவேன். “எழுமின், விழிமின்” என்ற அச்சமற்ற அந்தச் செய்தியைப் பிரகடனப்படுத்தவே நான் பிறந்திருக்கிறேன்.”

அடடா, எப்படிப்பட்ட கம்பீரமான, அற்புதமான, தெளிவான வார்த்தைகள்!

பால கங்காதர திலகரிலிருந்து நிவேதிதை வரை அனைவருக்கும் உத்வேகம் ஊட்டி புதிய இந்தியாவை அமைக்க வழி வகுத்த வீரத் துறவி அவர்.

1892இல் சந்யாசியாக இந்தியா முழுவதும் வலம் வந்த போது பம்பாயிலிருந்து புனே செல்லும் ரயிலில் விவேகானந்தர் ஏறிய பெட்டியில் திலகர் இருந்தார். அவரிடம் சுவாமிஜி அறிமுகப்படுத்தப்பட்டார். எட்டு முதல் பத்து நாட்கள் வரை அவர் திலகர் வீட்டில் இருந்தார்.

அவரது ஆன்மீக சக்தியை அப்போதே திலகர் உணர்ந்தார். பின்னர் சர்வமத சபை மாநாட்டில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று அவர் பாரதம் மீண்டவுடன் தன் வீட்டிற்கு வந்த அதே சந்யாசி தானா விவேகானந்தர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார் திலகர்.

‘ஆம், அவனே தான் இவன்’ என்று பதில் வந்தது.

பின்னர் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திலகர் அவரை பேலூர் மடத்தில் தரிசித்தார்.

தேநீர் அளித்து அவரை உபசரித்து அவருடன் அளவளாவினார் விவேகானந்தர்.

அவர் திலகரிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் இப்படி:”நீங்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு வங்காளம் வாருங்கள், நான் மஹாராஷ்டிரம் வருகிறேன். ஏனெனில் சொந்த ஊரில் எப்போதுமே மற்ற இடத்தில் இருக்கும் அளவு ஒருவனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்காது அல்லவா?”

அனைவரும் நகைத்தனர்.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய திலகர் முதல் கடைசி இந்தியன் வரை அனைவருக்கும் அவர் உற்சாகம் ஊட்டினார்; உழைக்கச் சொன்னார்.

“எழுமின்! விழிமின்! பாரதத்தைத் தலையாய இடத்தில் இருக்கச் செய்யும் வரை தளராது உழைமின்!”

இந்த அவரது உபதேச உரையை மேற்கொள்வோம்; பயணிப்போம்! வெற்றி பெறுவோம்!

tags — எழுமின்! விழிமின்! , பாரத, வல்லரசு

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: