ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 2 (Post N08295)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8295

Date uploaded in London – – –6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் ஜூன் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. ஹெல்த்கேர் மாதந்தோறும் திருநெல்வேலியிலிருந்து வெளியாகிறது. ஜூன் 2020 முதல் டிஜிடல் இதழாகவும் வெளி வருகிறது. ஆர்வமுள்ளோர் ஆசிரியர் R.C. ராஜா அவர்களை – rcraja2001@gmail.com -என்ற மின்னஞ்சல்  மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.

புத்தக அறிமுகம்

ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 2

(Healthy Mind, Healthy Body)

வேதாந்த கேசரி பத்திரிகை வெளியீடு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை – 4

ச.நாகராஜன்

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி.. ..

ஸ்ரீ பரிவ்ராஜக வ்ரஜப்ராணர் எழுதிய Native American Healing  என்ற கட்டுரை பல் அரிய சுவையான செய்திகளைத் தருகிறது.

அமெரிக்காவின் பூர்வீகக் குடிமக்களின் சிகிச்சை முறை அபாரமானது. அவர்களில் சிலர் இயல்பாகவே வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளனர்.

Shoshone medicine man என்று அழைக்கப்படும் ரோலிங் தண்டர் (Rolling Thunder) என்பவர் ஒவ்வொரு வியாதியும் வலியும் ஒரு காரணத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.

“மருத்துவர்களாகிய நாங்கள் சிலசமயம் கேஸை எடுப்பதற்கு முன்னர் அதை எடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை நிர்ணயிக்க மூன்று நாட்கள் ஒருவரைக் கவனிக்கிறோம்” என்று கூறுகிறார் அவர்

கனவுக் காட்சிகள் சிலரை மருத்துவராக்குகின்றன.

ப்ரேவ் பஃபலோ (Brave Fuffalo) என்பவரை பேட்டி காணும் போது அவருக்கு வயது 73. அவர் பத்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது அவர் ஒரு கனவு கண்டார். கனவில் தோன்றிய சிறிய வட்டமான கற்கள், “நாங்கள் வாகன் டங்காவால் (Wakan Tanka – அனைத்தையும் உருவாக்கிய இறைவனுக்கு பூர்வீகக் குடிமக்கள் தந்த பெயர்) படைக்கப்பட்டோம்; உனக்கு சிகிச்சை தருவதற்கான சக்தி உண்டு; தேவையான போது எங்கள் உதவியை நாடு” என்று கூறின. அவர் சிறந்த மருத்துவரானார்.

இப்படி பல ஒவ்வொரு பூர்வீகக் குடியும அபாரமான தகவல்களைத் தருகிறது.

ரால்ஃப் டாம்வெர்த் (Ralf Damwerth)  என்பவர் The Need for Holistic Medicine என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அதில் ஜெர்மனியில் உள்ள மருத்துவ முறைகளை நன்கு விளக்கி விட்டு சரியாக ஜெர்மனி மருத்துவத்தை ஆராய்ந்தால் ஒரு லட்சம் மருத்துவர்கள் நோயாளிகளுடன் பேச்சு ரீதியான மருத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளலாம் என்கிறார்.

Listening to the Body’s Inner Voice என்ற கட்டுரையை கார்லா மார்டினெஸ் (Carla Martinez) தருகிறார்.

ஒரு நோயாளியுடன் ஒரு டாக்டர் பேசும் முதல் பத்து நிமிடமே அவரது சிகிச்சை முறையை நிர்ணயிக்கிறது என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம்! நாம் நிச்சயம் குணமாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஒரு நோயாளிக்கு இருக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் விட இறைவனின் அருள் வேண்டுவது இன்னும் முக்கியம். The will of God will never lead you where the grace of God cannot keep you  – இறைவனின் கருணை அருள்பாலிக்காத இடத்திற்கு கடவுளின் சித்தம் உங்களைக் கொண்டு செல்லாது என்று அவர் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

சாம் கிரேசி (Sam Craci) எழுதியுள்ள An Appointment with Life என்ற கட்டுரை பல சுவையான அறிவியல் தகவல்களைத் தருகிறது. அவர் முழு ஆரோக்கியத்திற்கான  15 படிகளைக் கூறுகிறார் இப்படி:-

 1. உங்கள் உணவை அது தான் வாழ்க்கையின் முக்கியமான அம்சம் என்று நினைத்து உண்ணுங்கள்.
 2. ஜீரணம் சரியாக இருக்க உணவை நன்கு மென்று உண்ணுங்கள்.
 3. வயிறை முழுவதுமாக நிரப்பாமல் 20 % காலியாக இருக்க விடுங்கள்.
 4. உணவை ஜீரணித்து உட்கிரகிக்கத் தக்க வகையில் உணவு வகைகளைச் சேருங்கள்.
 5. தினமும் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரை அருந்துங்கள் – ஆனால் உணவுடன் அல்ல! மூடிய கண்டெய்னரில் வைக்கப்பட்ட நீரை ஸ்ட்ராவை உபயோகித்துக் குடியுங்கள்.
 6. உணவு 75% ஆல்கலின் ஆஷ்- ஃபார்மிங்காகவும் 25% ஆசிட் ஃபார்மிங் உணவாகவும் இருக்க வேண்டும். இது மிக மிக முக்கிய்மானது. (75% alkaline ash-forming foods and 25% acid-forming foods- this is very ciritical)
 7. ஆர்கானிக் பழங்களையும் கறிகாய்களையும் உண்ணுங்கள்
 8. கறிகாய்களை அளவுக்கதிகமாக வேக வைக்காதீர்கள்.
 9. குடலைச் சீராக வைக்க இனிப்பு கலக்காத தயிரை தினமும் சாப்பிடுங்கள்.
 10. குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
 11. சுவாசத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து விட்டுச் சீராக வைக்க முயற்சி எடுங்கள். மன அழுத்தத்தைக் குறையுங்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்
 12. தேவையான நேரம் உறங்குங்கள்; உடல்பயிற்சி செய்யுங்கள்.
 13. தினமும் உங்கள்  உடலில் சூரிய வெளிச்சம் தேவையான் அளவு படட்டும்.
 14. யாரையும் விமரிசிக்காதீர்கள். அன்புடனும் இரக்கத்துடனும் அனைவரையும் நோக்குங்கள்; அவர்களை உங்களுடைய சொந்தமாகவே நினைத்துப் பழகுங்கள்.
 15. தியானம் செய்யுங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள். உடல், மனம் அமைதியுறட்டும். நேர்மையான செயல்களைச் செய்யுங்கள். நல்ல எண்ணங்களை எண்ணுங்கள். வாக்கில் சுத்தமாக இருங்கள். புன்னகை புரியுங்கள். அது மாயாஜாலம் செய்யும்.

அடுத்து எம். லொநீ வு எழுதியுள்ள அகுபங்சர் (Acupuncture by M.Lonnie Wu) கட்டுரை இது பற்றிய பல சுவையான தகவல்களைத் தருகிறது  3000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் தோன்றிய கலை அக்கு பங்சர். உடலில் 14 பிரதான வழிகள் உள்ளன (14 main pathways) இவற்றில் 12 – வயிறு,பெருங்குடல் என்பன போன்ற – எந்த அங்கங்கள் வழியாக அது செல்கிறதோ அதன் பெயரைப் பெற்றுள்ளன. இது தவிர நிறைய இணைப்புத் தடங்களும் உள்ளன. அகுபங்சரில் முக்கியமான இடங்களில் ஊசி குத்தப்படுகிறது. எங்கு குறை இருக்கிறதோ அங்கு தேவையான சக்தி தரப்படுகிறது.

இந்த நூலில் இன்னும் பல அரிய கட்டுரைகள் ஆரோக்கியம் பெறுவதற்கான ஏராளமான குறிப்புகளைத் தருகின்றன.

ஆரோக்கியமும் சந்தோஷமும் ஒன்றுக்கொன்று சேர்ந்தே நடை போடுகின்றன. சந்தோஷமாக ஒருவர் இல்லையெனில் ஆரோக்கியமாக அவர் இல்லை என்று பொருள். ஆகவே ஆரோக்கியம் அடைவதை ஒருவர் முக்கிய லட்சியமாகக் கொண்டு அதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்தால் சந்தோஷம் தானே வந்து சேரும்.

வாழ்க வளமுடன்!

tags — ஆரோக்கியமான, மனம்

–subham —

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: