இரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தை பதில்! சம்ஸ்கிருத புதிர்!! (Post no.8301)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8301

Date uploaded in London – – –7 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இரு கேள்விகளுக்கு ஒரு வார்த்தையிலேயே பதில் வேண்டும் – சம்ஸ்கிருத புதிர் கவிதை!

ச.நாகராஜன்

ஒரு சம்ஸ்கிருத புதிர் கவிதை. இரு கேள்விகள், ஆனால் விடை ஒன்றாகத் தான் இருக்க வேண்டும், இரு கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாக இருக்க வேண்டும்.

கேள்விகள் இதோ:

உலகைக் காப்பது எது?

யாரால் பார்க்க முடியாது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

அடுத்த இரு கேள்விகள்:

யார் கடவுளரை வெறுக்கின்றனர்?

தானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது  எது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

அடுத்த இரு கேள்விகள் ;

வயிறு இல்லாதவன் யார்?

கண்ணைப் பார்க்க விடாமல் செய்வது எது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

அடுத்த இரு கேள்விகள்:

வானில் விளையாடுவது எது?

அழகிய பெண்களுக்கு அழகைத் தருவது எது?

இந்த இரு கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையில் பதில் வர வேண்டும்.

இப்படிக் கேள்விகளைக் கேட்ட கவிஞர் கூறுகிறார்;

“ஓ, நுட்பமான புத்தியை உடையவனே, நீ உன் மனதை நன்கு கவனப்படுத்தி ஒவ்வொரு இரு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல், பார்ப்போம்!

கவிதை இது தான்:

கிம் த்ராணம் ஜகதாம் ந பஷ்யதி ச க: கே தேவதா வித்திஷ:

  கிம் தாது: கரபூஷணம் நிருதர: க: கிம் பிதானம் தூஷாம் |

கே கே கேலனமாசரந்தி சுத்ருஷாம் கிம் சாருதாபூஷணம்

   புத்தயா ப்ரூஹி விசார்ய சூக்ஷ்மமதிமம்ஸ்த்வேகம் த்ரயோருத்தரம் ||

இப்போது பதில்களைப் பார்ப்போம்:

உலகைக் காப்பது அந்தா: அதாவது உணவு.

பார்க்க முடியாதவன் அந்தா: அதாவது அதாவது குருடன்.

இரு கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் விடை.

அடுத்து, கடவுளரை வெறுப்பவர் தானவா: அதாவது அசுரர்.

தானம் கொடுப்பவனின் கையை அலங்கரிப்பது தானவா: அதாவது தானத்தைக் கொடுக்கும் போது சொரியும் நீர்!

அடுத்து, வயிறு இல்லாதவன் தம: அதாவது ராகு.

கண்ணைப் பார்க்க விடாமல் செய்வது தம: அதாவது இருட்டு!

அடுத்து, வானில் விளையாடுவது வய: அதாவது பறவைகள்.

அழகிய பெண்களுக்கு அழகைத் தருவது வய: இளமைப் பருவ வயது!

ஆக இப்படி இரு பொருள் தரும் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து கேள்விகளைத் தொடுத்து விட்டார் சாமர்த்தியமான கவிஞர்.

இது போன்ற புதிர்க் கவிதைகள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன!

இந்தக் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் இதோ:

What protects the world (people)?

(andha – food)

Who does not see?

(Andha – blindman)

Who hate the Gods?

(Dhanavah – Demons)

What adorns the hand of donor?

(Danavaj – water offered at the time of giving gifts)

Who is without belly?

(tamah – Ragu)

What screens the eyes?

(tamah – darkness)

Who sport in the sky?

(vayah – birds)

What is the ornament that beautifies charming girls?

(vayah – youthful age)

Applying your mind tell the answers, O man of subtle intelligence, noting that the answer is the same for two questions each.

                                             (Translation by A.A.R)

***

tags – இரு கேள்வி, ஒரு வார்த்தை பதில், சம்ஸ்கிருத புதிர்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: