“ஓ, எனது காதலனின் மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்று!” (Post No.8311)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8311

Date uploaded in London – – –9 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

“ஓ, எனது காதலனின் மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்று!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத காதல் கவிதைகளில் நுட்பமான உணர்ச்சிகள், அபூர்வமான நல்ல தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வர்ணிக்கப்படுவது வழக்கம்.

ஒரு கவிதை இது:

கிம் த்வம் தூதி கதா கதாஸ்மி சுபகே தஸ்யாந்திகம் காமினி:

   த்ருஷ்ட: கிம் சுசிரம் கரோதி கிமசௌ வீணா விநோதக்ரியாம் |

சௌபாக்யோதய கர்வித: கிமவதனம் நைவோத்தரம் தத்தவான்

    கிம் கர்வான் ந ஹிம் பாஷ்பகதூகததயா தூர்தஸ்ய மாயா ஹி சா ||

சார்தூலவிக்ரிதம் என்ற சந்தத்தில் அமைந்த கவிதை இது!

சுபகே, காமினி, வீணா விநோத கிரியை, சௌபாக்யோதய கர்வித:, மாயா போன்ற அழகிய வார்த்தைகளை கவனித்து அனுபவிக்க வேண்டும்.

கவிதை என்ன சொல்கிறது, பார்ப்போம்!

ஒரு அழகிய உணர்ச்சிப் பெருக்கான காதல் கவிதை இது. காதலனிடம் தன் தோழியை தூது அனுப்புகிறாள் காதலி. அவளும் அவனிடம் சென்றாள்.திரும்பி வந்தாள். பின்னர் நடந்த சம்பாஷணை தான் இது!

“ஓ, என் தோழீ! நீ அவனிடம் போனாயா?”

“ஆம், நான் போனேன், என் அழகியே, உன் காதலன் அருகே சென்றேன்.”

“அவனை உற்று கவனித்தாயா?”

“ஆம், நெடு நேரம்!”

“அவன் என்ன செய்து கொண்டிருந்தான்?”

“வீணையை இசைத்துக் கொண்டிருந்தான்.”

“சௌபாக்யவான் என்ற கர்வத்தில் அவன் என்ன சொன்னான்?”

“ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை!”

“ரொம்ப கர்வமோ?”

“இல்லை இல்லை, அவன் தொண்டை உணர்ச்சிப் பெருக்கால் பேச முடியாமல் அடைத்து விட்டது!”

“ஓ, எனது காதலனான அந்த போக்கிரியின் மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்றோ!”

“Did you, girl messenger, go to him?”

“Yes, I went, charming lady, to the proximity of your lover.”

“Did you observe him?”

“Yes, for a long time.”

“What was he doing?”

‘Playing on the lute.”

“Proud of his handsomeness, what did he say?”

“He spoke not a word in reply.”
“Was it due to his pride?”
“No, his throat was choked with tears (emotion).”

“O all that is deceitful pretensions of that rouge of my lover.”

                                         (Translation by A.A.R.)

tags — காதலன்,  மாயா ஜாலம்.

***

Leave a comment

Leave a comment