‘நீ பசுவை வணங்கினால் நான் நாயை வணங்குவேன்’ (Post No.8313)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8313

Date uploaded in London – 9 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீ பசுவை வணங்கினால் நான் நாயை வணங்குவேன் !!!

வேத காலத்திலும் போட்டி பொறாமை உண்டு; அசுரர்கள் உண்டு; இப்படி சண்டையிட்டுப் பிரிந்து போ னவர்களைத்தான்  இன்று நாம் பார்சிக்கள் (Parsees) என்று அழைக்கிறோம்.

ஆண்டுதோறும் சுதந்திர மாவீரன் வாஞ்சிநாதனை பிறந்த நாளன்று நாம் வணங்குகிறோம் ; கொடுங்கோலன் கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்றவன் அவன் ; நாம் அவன் சிலைக்கு மாலை பூட்டும் அதே நாளன்று இந்திய விரோதிகள் ‘ஆஷ் துரை ஜிந்தாபாத்’ என்று அங்கே முழங்குவது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். இவர்கள் வெள்ளைக் காரர்கள் இந்த நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்று தீர்மானம் போட்ட இந்திய விரோதிகள்.

இதே போல வேத காலத்திலும் ஒரு அசுரர் கும்பல் இருந்தது. அவர்கள் சண்டை காரணமாக ஈரானுக்குச் சென்றனர். அவர்களை 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் முஸ்லீம்கள் படுகொலை செய்யத் துவங்கியவுடன் இந்தியாவுக்கே ஓடி வந்தனர். பின்னர் நல்ல பிள்ளைகளாகி இந்தியாவின் தொழில் முன்னேற்றத்துக்கும், அணுகுண்டு செய்யவும் உதவி செய்தனர். இன்று அத்தனை நல்ல பார்சிக்களுக்கும் தபால்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளோம்.

போட்டிக்கு ஒரு கட்சியை ஆரம்பிப்பவர் தாய்க் கட்சியிலுள்ள எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றுவர் அல்லது அவர்களுக்கே குழப்பம் வந்து விடும்.

ஆகையால் சவுராஷ்டிரா (குஜராத்) தேசத்திலிருந்து போனவர் ஒரு மதத்தை ஆரம்பித்தார் ; அவரை ஈரானிய உச்சரிப்பில் ஜொராத்திரர் என்றனர். வேத கால கவிதைகளை ‘சந்தஸ்’ என்பர். நாம் தமிழில் சொல்லும் சந்தமும் அதிலிருந்து வந்ததுதான். ஆகையால் அவர் தன புஸ்தகத்தை ‘சந்தஸ் அவஸ்தா’ என்றார் . அதை ஈரானிய உச்சரிப்பில்  செண்ட் அவஸ்தா (Zend Avesta) என்றனர்.

(ஜரா சந்தர் அல்லது ஜொராஷ்டிரர் (Zoroaster) என்பது சவுராஷ்டிரர் என்பதன் மருவு என்றும் செண்ட் அவஸ்தா (Zend Avesta) என்பது சந்தஸ் என்பதன் மருவு என்றும் காஞ்சி பரமாசார்யர் சொன்னதை தெய்வத்தின் குரல் புஸ்தகத்தில் காணலாம்.; ஈரான் என்பதன் பழங்கால பெயர் ஆர்யன் ; மற்றொரு

பெயர் பாரஸீகம், பெர்ஸியா (Persia) என்பதாகும்).

ஜொராஷ்டிரர் சொன்னார்:-

“இந்துக்கள் போலவே தீயை வணங் குவோம் ; ஆனால் யாகம் செய்ய வேண்டாம் .

இந்துக்கள் போலவே பூணுல் அணிவோம் ; ஆனால் இந்திரனை மட்டந்தட்டி இழிவான பொருளில் ‘தேவன்’ என்று அழைப்போம்; அதற்குப் பதிலாக வருணனை அசுரன் என்று வாழ்த்துவோம் ; நமது பாஷையில் தேவன் என்றால் கீழ் ஜாதி;அசுரன் என்றால் உயர் ஜாதி .

அவர்கள் மேரு மலை, இமய மலையுள்ள வட திசையை புனிதமானது என்கின்றனர்; நாம் தெற்கு திசையை புனிதமானது என்று சொல்லி தென்புலத்தாரின் கடவுள் எமதர்மனை உயர்த்துவோம் ; ஈரானில் யமா என்பதை இமா / (Yima) யிமா என்று உச்சரிப்பர்.

இந்துக்கள் பசுவை புனிதமாக கருதுகிறார்கள்; நாம் எமனின் வாகனமான நாயை தவிசில் / சிம்மாசனத்தில் ஏற்றுவோம் ; இனிமேல் பார்சிக்களுக்கு நாய்தான் புனித பிராணி” என்று சவுராஷ்டிரர் உத்தரவு போட்டார். இவர் புத்தருக்கு 200 ஆண்டு முன்னர் வாந்தவர்; ரிக்வேத காலத்துக்கு மிகவும் பிற்பட்டவர் . சுமார் கி.மு. 800.

கோபத்தில் ஏதேனும் செய்தால் அது குதர்க்கமாகத்தான் இருக்கும்.

இந்திரன் தேவலோக கடவுள்; வருணன் பூலோக கடவுள்; வேதத்தில் சொல்லப்படும் அர்யமா (Aryama) என்பதை அஹிர் மான் (Ahirman) என்று சொல்லி மட்டம் தட்டினார் . அசுர் மஸ்த்தா – அசுரர் மஹத்- (Asura Mazda) பெருமை பொருந்திய அசுரன் – நமது கடவுள் என்றார்

வேத கால கடவுளர் அன்பு, கருணை அடிப்படையில் அமைந்தனர் . பார்ஸி கடவுள்கள் ராணுவப் போக்கில்  அமைக்கப்பட்டனர் ; மனிதர்களைத் தவிர ஊர்வன பறப்பன  எல்லாவற்றையும் அடித்துக் கொல்லுங்கள்; ஏனெனில் அவை தீமையின் வடிவம் என்றனர். ஆனால் நாய்கள் மட்டும் புனிதமானவை”.

நாய் பற்றி பார்சிக்கள் சொன்னதைப் பாருங்கள் :–

அவர்களுடைய சட்டப் புஸ்தகம் வெந்திதாத் (Vendidad)  – வேதவத் – வித்வத் — என்பதன் திரிபாக இருக்கலாம்.

வேதத்தில் நான்கு கண்களையுடைய நாய் எமனின் கூட வரும்; ஆகையால் அதை புகழ்ந்தனர்;  ஒரு பார்சி இறந்து போனவுடன் மஞ்சள் வர்ண காதுகளை உடைய வெள்ளை நாய்க்கு சடலத்தை அடையாளம் காட்டவேண்டும் ; அப்போது சடலத்தைச் சுற்றியுள்ள தீய சக்திகள் ஓடிவிடும்.

பார்சி சட்டப் புஸ்தகம் கூறுகிறது –

மனிதனைக் கொன்றால் 200 கசையடி ;

நாய்க் குட்டியைக் கொன்றால் 500 கசையடி ;

வீட்டைக் காக்கும் நாயைக் கொன்றால் 700 கசையடி ;

ஆடுகளைக் காக்கும் நாயைக் கொன்றால் 800 கசையடி ;

முள்ளம் பன்றியைக் கொன்றால் 1000 கசையடி ;

முள்ளம் பன்றி பயிர்களை அழிக்கும்

மற்ற பிராணிகளை சாப்பிடுவதால் அதற்கு மதிப்பு!!

****

இந்துக்கள் சோமலதை எனப்படும்  கொடியைக் கொண்டு சோம யாகம் செய்தனர்; அதற்குப் போட்டியாக இவர்கள் மாதுளம்பழ மரக் குச்சிகளை வைத்து யாகம் செய்தனர்.

பெண்கள் விஷயத்திலும் இந்துக்கள் போல கற்பு முதலிய கடுமையான விதிகள் இல்லை .

புத்தருக்கு முந்தைய காலத்தில் பாரசீகத்தை ஆண்டவன் குரு (Kuru) . இதை கிரேக்கர்கள் குரோஸ், கைரோஸ் (Kuros, Kyros) என்று எழுத, ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் சைரஸ்/ கைரஸ் (Cyrus the Great; 600 BCE ) என்று எழுதினர் ; இவனுடைய ஆட்சி சிந்து நதிக்கரை வரை, பரவியிருந்தது ; இவனுக்கு இந்தியா அஞ்சல்தலை வெளியிட்டது. இவனு ககு முந்தியும் ஒரு குரு (Kuru; Cyrus I –652 BCE)  இருந்தான். இவர்கள் எல்லோரும் பாண்டவ – கௌரவர்களின் மூதாததையரான குரு  வம்சத்தை (Kuru Dynasty) சேர்ந்தவர்கள் . அதற்கும் முந்தைய பரசு (Parsu)  என்பவரை ரிக் வேதம் (8-6-46) குறிப்பிடுகிறது அதிலிருந்து வந்ததுதான் பாரசீகம்- பெர்சியா .

இவர்களுக்குப் பின்னால் பாரசீகத்தை ஆண்டவன் டேரியஸ்(Darius) ; அவன் ஒரு கல்வெட்டில் “நான் அசுரன் – நான் அசுரன் மகன்” என்று பெருமை படப் பேசுகிறான். ரிக் வேதத்தின் பழைய  பகுதிகளில் இந்திரனையும் வருணனையும் அசுரர் என்று புகழ்கின்றனர்; அசுரர் என்ற சிறப்பு அடை மொழி ரிக் வேதத்தில் 26 முறை இந்திரனுக்கும் மற்ற கடவுளருக்கும் வருகிறது .

உபநிஷத் கதையில் , அசுரர்களும் தேவர்களும், மனிதர்களும் சென்று உபதேசம் கேட்ட போது “த , த , த” என்று கடவுள் சொன்னதை “3 த , த , த” கதையில் எழுதி இருக்கிறேன். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பார்க்   கடலைக் கடந்த சிலைகள், சிற்பங்கள் தென் கிழக்காசிய நாடுகள் முழுதும் உள்ளன ; புத்தர் காலத்தை ஒட்டி மத்திய கிழக்கு பகுதியை ஆண்ட அஸீரிய (Assyria Kings = Asura Kings) மன்னர் அனைவரும் தனது பெயருக்கு முன்னர் அசுர (Ashur) என்று சேர்த்துக் கொண்டனர் ; இவர்களும் இந்துக்களே ;ஆனால் வேத வழக்குகளை பின்பற்ற மறுத்தனர் . இதை மநு தர்ம சாஸ்த்திரம் வரையுள்ள எல்லா நூல்களும் இயம்புகின்றன.

***

ஹரப்பாவில் (Hariyupiya)  பயங்கர யுத்தம்

ரிக்வேதத்தில் சிந்து வெளி நகரமான ஹரப்பாவை ‘ஹரியூபிய’ என்று எழுதியுள்ளனர் ; அங்கு இந்திரர்களுக்கும் பாரசீக படை எடுப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திரன் வெற்றி பெற்றதை ஐத்ரேய பிராமணம் விரிவாக செப்புகிறது.

வாரசீகரின் (Varasika) பேரன்கள் அதில் இறந்து பட்டனர் ; வாரஸிக என்பதே பாரசீகம் / பெர்சியா / ஈரான் என்பதாகும்  (V=P)

பரசுராமர் தொடர்பு !!!

‘ப’ வும் ‘வ’- வும் (P=V) இடம் மாறும் ;நாம் வங்கம் என்றால் வங்காளியர் ‘பங்கால்’ Bengal  என்பர்; “தமிழ் ஒரு அதிசய மொழி” என்று 2014ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் ஒரு பட்டியல் கொடுத்துள்ளேன்

வாரஸிக = பாரசீக

***

பரசுராமர்- ஜமதக்கினி

பாரசீக மன்னர்களின் குடும்ப புரோகிதர் வசிஷ்டர் அல்ல; விசுவாமித்திரர் அல்ல; உசாநச (Usaanasa)  ; ரிக் வேதம் இவரைப் பழங்கால க்கவி என்று புகழ்கிறது ; கண்ணனும் கவிகளில் நான் உஷனஸ் (Ushanas) என்று பெருமைபடப் பேசுகிறார் . இவர் ‘பிருகு’ வம்சத்தில் வந்தவர் பார்கவ கோத்ரம். ; அசுரர் குருவான சுக்ராசாரியரான ‘உஷனஸ்’ எனப்படுகிறார் ஜமதக்கினி , அவர் மகன் பரசுராமன் எல்லோரும் ‘பிருகு’ வழி  வந்தவர்களே .

ஆனால் மிகப் பழங்கால உஷனஸ் என்பது பெருமை மிகு ‘பட்டம்’ ஆனதால் காலத்தை நிர்ணயிக்கும் போது  கவனமாகப் பயன்படுத்த வேண்டும் ; தேவர் குருவான பிருஹஸ்பதியும் அதே குடும்பத்தினர் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்; துரோணர்தான் பாணடவர்க்கும் குரு ; கௌரவர்க்கும் குரு ; சிறந்த மாணவன் ஆன அர்ஜுனனுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த போதும், எதிர் தரப்பில் நின்று போரிட்டார் ; இதை சுக்ர- பிருஹஸ்பதி , அசுரர்-தேவ , இந்திய -பாரசிக ஹரப்பா மோதலில் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்; சங்கத் தமிழ் இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே “இரு  அந்தணர்” என்று சுக்ராசார்யாரையும் பிருஹஸ்பதியையும் குறிப்பிடுகிறது

சுருங்கச் சொல்லின் ………………..

பிருஹஸ்பதி = வியாழன் = குரு ; தேவ குரு

சுக்ரன் = வெள்ளி = அசுரர் குரு = பர்ஸு = பரசு ராமன் = பெர்சியா = பாரசீகம் = ஈரான்

சுபம்

SOURCE BOOKS – ARYA TARANGINI – VOLUME ONE – A. KALYANA RAMAN , 1968

HINDU DHARMA – KANCHI PARAMACHARYA LECTURES ,  BHARATIYA VIDHYA BHAVAN, 2000

tags – நாய் வழிபாடு, பார்ஸி , பாரசீகம் , பெர்சியா , ஈரான், ஜொராஷ்டிரர் , பரசு , ராமன் குரு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: