
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 8420
Date uploaded in London – 29 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெரிய கம்பெனிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஊழியர்கள் , அவர்கள் வாங்கும் சம்பளத்தை நியாயப் படுத்துவதற்காக சாப்ட்வெர் அப்டேட் (Software Update) செய்து நம்மைத் தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள். உடனே அப்டேட் Update செய் என்று நம்மை மிரட்டவும் செய்கிறார்கள். அவர்களுக்கு அடிபணிந்து அப்டேட் செய்தலோ நாம் முன்னர் செய்த வேலை எல்லாம் கண்டபடி மாறும் அல்லது மறையும். இன்னும் சில கம்ப்யூட்டர்களோ எழுதியதை எல்லாம் சேவ் SAVE செய்யாமல் நம்மைக் காராசேவை ஆக்கிவிடும் . மைக்ரோசாப்ட் (MICROSOFT) போன்ற நிறுவனங்களோ ஆண்டுதோறும் வோர்ட் WORD விலைக்கு வாங்குபடி செய்து நம்மைக்கொள்ளை அடிக்கிறார்கள். அவர்கள் கம்பெனிகளை அடிக்கும் கொள்ளையோ கணக்கு வழக்கு இல்லை . எல்லாம் இறுதியில் நம் தலை மீது விழும். ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள்!!
இந்த சூழ்நிலையில் நாம் தினமும் கந்த சஷ்டி கவசத்துடன் கம்ப்யுட்டர் கவசம் படிப்பதும் தேவை ஆகிறது என்று கருதி தேவராய சுவாமிகளுக்குப் போட்டியாக ஒரு நகைச் சுவை கவசம் எழுதி அதை பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் பரப்பிவருகிறார்கள் . என் அண்ணன் சீனிவாசன் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எனக்கு அனுப்பினார். நானும் ‘மன்னுயிர்க்கெல்லாம் இன்பம் கிடைக்க’ இங்கே பகிர்கிறேன்.; அனைவரும் படித்துப் பயன்பெறுக. எந்தக் கம்ப்யூட்டராவது UPDATE YOUR SOFTWARE NOW ‘அப்டேட் யுவர் சாப்ட் வேர் நவ்’ என்று மிரட்டினால் மூன்று முறை படியுங்கள்!!!
பில் கேட்ஸ் வாழ்த்து

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!
சரணம்
காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க–
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
tags –பில் கேட்ஸ், கம்ப்யூட்டர் கவசம்

—-SUBHAM—