
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8454
Date uploaded in London – – –5 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கிரகங்களுக்குரிய ராசி வண்ணங்கள், ராசி உலோகங்கள் : பழைய கால நம்பிக்கைகள்!
ச.நாகராஜன்
வண்ணங்களும் உலோகங்களும் வாழ்க்கையை சீர் படுத்தும், வளமாக்கும் என்ற நம்பிக்கை எல்லா நாகரிகங்களிலும் உண்டு.
எகிப்திய, அஸிரிய, யூத நாகரிகங்கள் தொன்று தொட்டு இந்த நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு வண்ணம், ஒரு உலோகம் உண்டு என்பது அவர்கள் நம்பிக்கை.
1. கிரகங்களுடன் இனம் காணப்பட்ட உலோகங்கள்;
சூரியன் – தங்கம்
சந்திரன் – வெள்ளி
செவ்வாய் – இரும்பு
புதன் – பாதரஸம்
குரு – டின் (Tin)
சுக்கிரன் – தாமிரம்
சனி – காரீயம் (Lead)

2. கிரகங்களுக்குரிய வண்ணங்கள்
சூரியன் – தங்க வண்ணம்
சந்திரன் – வெள்ளி வண்ணம் அல்லது நிறம் மாறும் வண்ணம்
செவ்வாய் – சிவப்பு
புதன் – பாதரஸம்
குரு – நீலம்
சுக்கிரன் – பச்சை
சனி – கறுப்பு
3. ராசிகளுக்குரிய வண்ணங்கள்!
ராசிகள் 12 என்பதை அனைத்து நாகரிகங்களும் ஏற்றுக் கொண்டு கடைப்பிடித்து வந்திருப்பது ஒரு அதிசயமான விஷயம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே எல்லா நாகரிகத்தினருக்கும் ராசிகள் 12 தான்!
ஒவ்வொரு ராசிக்கும் என்ன வண்ணம் என்பதையும் எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் நம்பிக்கையுடன் கூறியுள்ளன!
மேஷம் – தீ வண்ணம்
ரிஷபம் – கரும் பச்சை அல்லது அடர்த்தியான பச்சை
மிதுனம் – செஸ்ட்நட் (Chestnet) வண்ணம்
கடகம் – வெள்ளி வண்ணம்
சிம்மம் – தங்க வண்ணம்
கன்னி – பல்வகை நிறங்கள் (Veriegated)
துலாம் – இளம் பச்சை (Water Green)
விருச்சிகம் – குங்கும வண்ணம்
தனுசு – ஆகாய நீலம்
மகரம் – கறுப்பு வண்ணம்
கும்பம் – சாம்பல் நிறம் (Grey)
மீனம் – கடல் நீலம் (Sea Blue)



4. நல்ல வண்ணங்களும் குணாதிசயங்களும்!
ஊதா நிறம் – நுண்ணறிவு, அறிவு (Intelligence, Knowledge)
நீலம் – கற்புத் தூய்மை, அன்பு (Chaste affection)
பச்சை – நம்பிக்கை, தன்னம்பிக்கை (Hope and Confidence)
ரோஸ் வண்ணம் – இனிமை (Sweetness of Disposition)
வெண்மை – தூய்மை, உண்மை, சந்தோஷம் (White, Purity, Truth and Joy)
சிவப்பு – பாச உணர்வு, ஆரோக்கியம், வலிமை (ardour, health and strength)
கீரை வண்ணம் (Amaranth) – நிலையான அமைப்பு, நம்பகத்தன்மை (Constancy, fidelity)
இளம் ஊதா (Lilac) – புத்துணர்ச்சி, முதல் குழந்தை (freshness, first born)
ஊதா, பச்சை, மஞ்சள் – வெற்றி (Triumph)
5. கெட்ட வண்ணங்களும் குணாதிசயங்களும்!
வெள்ளையும் கறுப்பும் (White and Black) – மரணம், துக்கம் (Death, Sorrow)
கறுப்பு – வருத்தம், துக்கம் (Sadness, grief)
ஆரஞ்சு வண்ணம் – சொகுசு (Luxury)
மஞ்சள் – பொய்மை, துரோகம், ஆசை, பேராசை (Falsity, treason, ambition, avarice)
பழுப்பு – செய்த தவறுக்கு வருத்தப்படல், துக்கம் (penitence and grief)
கருஞ்சிவப்பு – ஆடம்பரம், கர்வம் (Pomp, pride)
உதிர்ந்த இலையின் வண்ணம் (The colour of dead leaves) – துக்கம், சிதைவு, அழிவு (Grief, decay, ruin)
ஆதாரம் : Amulets and Superstitions by Sir E.Wallis Budge, Kr
M.A., Litt D., D.Litt., D.Lit., F.S.A., Published in 1930
***
OLD ARTICLES IN OUR BLOGS
tamilandvedas.com › tag › நிறங…
14 May 2019 – 6385. Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)).
tamilandvedas.com › 2019/05/14
14 May 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … முக்கியமான இன்டர்வ்யூவுக்குப் போகும் போது வெள்ளை நிற உடை தகாது என்பது சிலர் …
colour guide | Tamil and Vedas
tamilandvedas.com › tag › colour-guide
4 Feb 2016 – Posts about colour guide written by Tamil and Vedas. … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact.
colours of Ramayana | Tamil and Vedas
tamilandvedas.com › tag › colours-of-ramayana
6 May 2018 – Posts about colours of Ramayana written by Tamil and Vedas. … Lakshmana is golden, Hanuman is in purple and Ravana is in dark colours.
Yellow clad Krishna and Blue Clad Balarama! | Tamil and Vedas
tamilandvedas.com › 2014/10/02 › yellow-clad-krishna…
2 Oct 2014 – His life was very colourful and controversial. Let us look at some interesting facts about Balarama, who was Krishna’s elder brother. Puranas …
tags — கிரகங்கள், ராசி, வண்ணங்கள், உலோகங்கள்