
Post No. 8464
Date uploaded in London – – –7 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சம்ஸ்கிருதச் செல்வம்
உருவத்தைக் கண்டு எடை போடாதே!
ச.நாகராஜன்

சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் தொடர்ச்சியாக இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்:
குலானி சமுபேதானி கோபி: புருஷதோஷ்வத: |
குலசங்க்யாம் ந கச்சந்தி யானி ஹீனானி வ்ருத்தத: ||
எத்தனை ஆண் மக்கள் இருந்தாலும் சரி, எவ்வளவு குதிரைகளும் பசுக்களும் இருந்தாலும் சரி, குடும்பத்தில் நல்லொழுக்கம் இல்லையேல் அப்படிப்பட்ட குடும்பங்கள் குடும்பங்களாகக் கருதப்பட மாட்டாது.
Such families, though thery are in possession of (any number of ) male members, horses and kine, if found in lacking in good conduct, can not be counted among families.
(Translation by S. Bhaskaran Nair)
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பார் வள்ளுவரும்!
*
கேசின் ம்ருகமுகா வ்யாக்ரா: கேசித் வ்யாகரமுகா ம்ருகா: |
தத் ஸ்வரூபவிபர்யாசாத் விஸ்வாஸோ ஹ்ராபதாம் பதம் ||
சில புலிகளின் முகம் மான் போலத் தோற்றமளிக்கும். சில மான்களோ புலிகளின் முகம் போன்ற தோற்றமளிக்கும். இந்த இயற்கையான உருமாற்றத்தால் வெளித்தோற்றத்தைக் கண்டு நம்புவது அபாயகரமாகும்.
Some tigers have faces resembling a deer, and some deer look like a tiger in the face; due to this metamorphosis of one’s natural form it is dangerous to trust appearances.
(Translation by A.A.R.)
ஆளைப் பார்த்து மயங்காதே, ஊதுகாமாலை என்பது தமிழ்ப் பழமொழி.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பார் வள்ளுவரும்.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)
ஆடம்பரமான அணிகலன்களுடன் வரும் ஒருவரை மதிக்கிறோம். எளிமையாக இருப்பவரை மதிப்பதில்லை. உருவத்தைப் பார்த்து கேலி செய்யாதே; பெரிய தேர் உருண்டு ஓடி வரும் போது அதற்கு இன்றியமையாத அச்சாணி மிகச் சிறிது தான் என்கிறார் வள்ளுவர்.

*
கே சோரா: கே பிஷுனா: கே ரிபவ: கேபி தாயாதா: |
ஜகதகிலம் தஸ்ய வஷே யஸ்ய வஷே ஸ்யாதிதம் சேத: ||
யார் திருடர்கள்? யார் வதந்திகளைப் பரப்புவோர்?
யார் எதிரிகள்? யார் உறவினர்கள்?
எந்த ஒருவனுடைய மனம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறதோ அவனுக்கு அகில உலகமும் வசமாகும்!
Who are robbers? Who are tale-bearers
Who are enemies? And who are kinsmen?
To that man who has the mind under control the whole world comes under his sway.
(Translation by A.A.R.)
tags – உருவு , எடை போடாதே