முள்ளம் பன்றி முள்ளை ஐயர்கள் பயன்படுத்துவது ஏன் ? (Post No.8467)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8467

Date uploaded in London – 7 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாக்ஸ் முல்லர் (Max Muller) உளறலுக்கு தியோடர் கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத  சம்ஸ்க்ருத அறிஞர் கொடுத்த பதிலில் ஒரு அரிய செய்தி உளது .

கர்ப்பிணிப்  பெண்களின்  வளைகாப்பு- ஸீமந்த சடங்கில் பிராணர்கள் முள்ளம்பன்றி முள்ளை (Quill of Porcupine) உபயோகிப்பது ஏன் என்று சிவபெருமான் ஞான ரஹஸ்ய காண்டம் என்னும் நூலில் கூறுகிறார்.

இந்துக்களுக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தும் தெரியாது; புஸ்த்தகமும் தெரியாது என்று சம்ஸ்க்ருத வரலாற்றுப் புஸ்தகத்தில் மாக்ஸ் முல்லர் உளறி இருந்தார். ஏனெனில் பாணினி இதைப்பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை என்று முல்லர் கதை அளந்தார். கோல்ட்ஸ்டக்கர் இதையெல்லாம் மறுத்து பாணினி நூலில் இருந்தே ஆதாரங்களைத் தந்தார் ; இந்துக்களுக்கு எழுதவும் தெரியும்; வேதங்களையும் பாணினி இலக்கண நூலான ‘அஷ்டாத்யாயி’யையும் எழுதியே வைத்தனர். ஆனால் வேதத்தை மட்டும் வாய்மொழியாகத்தான் கற்கவேண்டும் என்று விதித்து, புஸ்தகம் உள்ள இந்த நாளிலும் அதைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கோல்டஸ்ட்க்கர் கூறினார். இவ்வளவுக்கும் இதை கோல்ட்ஸ்டக்கர் சொன்ன நாளில் அசோகர் கல்வெட்டுகளோ சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீக எழுத்துக்களோ கண்டுபிடிக்கப்படவில்லை !

மாக்ஸ்முல்லர் தனது பசையற்ற வாதங்களுக்கு குமாரில பட்டரின் மீமாம்ச வார்த்திக்க நூலை வம்புக்கு இழுத்திருந்தார் . அதாவது பாணினி நூலுக்கு 1500 ஆண்டு காலத்துக்குப் பின்வந்த புஸ்தகம். . அப்படியா சேதி? அப்படின்னா , நானும் ஒரு புஸ்தகத்தைக் காட்டறேன். அதில் சிவ பெருமானே எழுத்தின் மஹிமை பற்றி விதந்து ஓதியிருக்கிறார் , பாரும் ஐயா ! என்று கோல்ட்ஸ்டாக்கர் ஞான காண்ட சேஷ ரஹஸ்யம் என்னும்  சிவ-பார்வதி உரையாடல் ஸ்லோகங்களை எடுத்துக் காட்டினார் . அதில் பார்வதிக்கு சிவ பெருமான் சொல்கிறார் :-

!அன்பே, ஆருயிரே, தேனே , கற்கண்டே, மயிலே, குயிலே, மானே, மரகதமே, மாணிக்கமே — இவை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் அம்பாளின் பெயர்கள்  — என்று சொல்லாமல் சொல்லிவிட்டு)

“நான் இதுவரை எழுத்துக்கள் பற்றி உனக்குச்  சொன்ன இலக்கண விளக்கங்களை யார் ஒருவன் பூர்ஜ பத்திரத்தில், கோரோசனை, குங்குமப்பூ கலந்த மஞ்சள் வர்ணத்தில் கழுத்தில் அல்லது கையில் அல்லது தலையில் முள்ளம்பன்றி முள்ளை வைத்து எழுதுகிறானோ அவனுக்கு நோய்களே இருக்காது . வேறு ஒருவரைக் கொண்டும் எழுத வைக்கலாம். மூன்று நாட்களில் நோய்கள் பறந்தோடிப் போகும். ஒரு புத்திசாலி மனிதன் இதை எழுதி தன்னிடம் வைத்திருந்து அதை போற்றிப், புகழ்ந்து பாதுகாத்து, படித்து  வந்தால், மலடியிடம் கூட, என்னைப் போன்ற ஒரு ஆண் மகனைப் பெறுவான்  .

ஒரு நாட்டில் யுத்தம் நடந்தாலோ, அரசனின் கொடுங்கோலாட்சி நடந்தாலோ , புலிகள் தாக்கும் பயம் இருந்தாலோ அல்லது அது போன்ற பயம் பீதி தரும் நிகழ்வுகள் நடந்தாலோ நான் மேலே சொன்ன எழுத்து இலக்கணத்தை நினைத்த மாத்திரத்தில் பயமும் பீதியும் பறந்தோடிப் போகும் . இதற்கு மேல் நன் உனக்கு என்ன சொல்ல முடியும் ?

( பிர்ச் Birch Tree Leaf என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பூர்ஜ மரத்தின் இலையை வடக்கிலுள்ளோர் எழுதப் பயன்படுத்தினர். தெற்கிலுள்ளோர் பனை மர இலையை/ ஓலையைப் பயன்படுத்தினர்).

கோல்ட்ஸ்டாக்கர் மேற்கோள் காட்டிய ஸ்லோகங்களில் இரண்டு ரஹஸ்யங்கள் இருக்கின்றன . கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் – வளைகாப்பு நடக்கும் வீடுகளில் அய்யர் ஒரு முள்ளம் பன்றி முள்ளைக் கொண்டுவந்து கணவன் கையில் கொடுத்து, மந்திரம் சொல்லி, பெண்ணின் தலையில் வகிடு இழுக்கச் சொல்லுவார். அதாவது தலை முடி நடு வகிடு வழியாக முள்ளை அழுத்திக் கோடு கிழிக்கவேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வைத்தியத்தில் கோரோசனை , குங்குமப்பூவும் உண்டு. எல்லா பிராமணர் வீடுகளிலும் இவை இருக்கும். அவற்றையும் மஞ்சளையும்  பயன்படுத்தி இருப்பார்கள் .

பீஷ்மர் காலத்தில் அம்புப் படுக்கையில் உதயமான, அக்யு பஞ்சர் அக்யூ பிரஸர் , (Acupuncture, Acupressure) வைத்தியத்தை முள்ளம் பன்றி முள் மூலமாகப் பின்பற்றுகிறோம். அதே நேரத்தில் எழுத்துக்களின் அபார மந்திர சக்தியையும் போற்றிப் பாதுகாக்க இந்த ‘டெக்னீக்’கை சிவபெருமான் சொல்லிக் கொடுக்கிறார். எழுத்துக்களின் மந்திர சக்தி பற்றியும் 51 எழுத்துக்களும்  அம்பாளின் உருவத்தில் உள்ளது பற்றியும் இந்த 51 சப்தங்களும் தமிழிலும் இருப்பது பற்றியும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நீண்ட உரை ஆற்றியுள்ளார். ‘தெய்வத்தின் குரல்’ புஸ்தகங்களில் (Seven Parts) படித்து அறிக .

கோட்ஸ்ட்க்கர் எழுதிய பதிலில் மகாபாரத அனுசாசன பருவத்திலும் குமாரிலரின் வா ர்த்திகத்திலும்  வேதங்களை எழுதிப் படிக்ககூடாதென்பதை மாக்ஸ்முல்லரே காட்டியிருப்பதை சொல்லிவிட்டு வேதங்களைப் பிழைபட மாற்றிச் சொல்லுவோரையும் இது கண்டிக்கிறது என்கிறார் .

‘எழுதா மறையளித்த எழுத்தறியும் பெருமாள்’ (பெரிய புராணப் பாடல்)  என்ற தலைப்பில் நான் முன்னர் எழுதிய கட்டுரையில் 2000 ஆண்டுக்கு முந்தைய சங்க இலக்கிய புலவர்களுக்கும் இது தெரியும் என்று காட்டியுள்ளேன் .

வாழ்க எழுத்து அதிகாரம்! வளர்க முள்ளம்பன்றி முள் வைத்தியம்!!

tags — முள்ளம் பன்றி , முள் வைத்தியம், அக்யுபஞ்சர் , அக்யூ பிரஸர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: