கிருஹப் பிரவேசத்துக்கு நல்ல நாள் எது? (Post No.8483)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8483

Date uploaded in London – 10 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

NOTE

IF YOU HAVE ANY QUESTIONS ON ASTROLOGICAL ISSUES, PLEASE SEND YOUR QUESTIONS TO US. ONE QUESTION PER ONE PERSON AT ONE TIME.

பல லட்சம் முன் பணம் கொடுத்து, வீட்டை வாங்கி, பல ஆண்டுகள் ‘இன்ஸ்டால்மென்ட்’ 

(Instalment) கட்டப் போகும் வீட்டிற்கு குடிபோவதற்கு நல்ல நாள் பார்க்க வேண்டாமா?

ஏன் ஆனி , ஆடி, மாசி, புரட்டாசி , மார்கழி , பங்குனியில் போகக்கூடாது ?

இதற்கு ஆன்றோர் பல காரணங்கள் சொல்லுவர் —

ஆனி – மஹாபலி சக்ரவர்த்தி பாதாளத்துக்குத் தள்ளப்பட்ட மாதம்

ஆடி- ராவணன் இறந்த மாதம்

மார்கழி – பாரதப் போர் நடந்த மாதம்

புரட்டாசி – ஹிரண்யனை நரசிம்மாவதாரம் வதைத்த மாதம்

மாசி – சிவன் ஆலகால விஷம் உண்ட மாதம்

பங்குனி – மன்மதனை சிவன் எரித்த மாதம்

இனிமேலும் இம்மாதங்களில் குடிபோக நினைப்பீர்களா ?

***

அது சரி, நல்ல நாட்கள் எவை?

கிரகப் பிரவேசம் செய்ய நல்ல நாட்கள் —

திங்கள், புதன், வியாழன்,வெள்ளிக் கிழமைகள் நல்ல நாட்கள்.

ஞாயிற்றுக் கிழமை எல்லோருக்கும் விடுமுறை; அதில் வைத்தால் என்ன? என்று

சிலர் கேட்கலாம். ஞாயிற்றுக் கிழமை சுட்டெரிக்கும் நாள் . அன்று கூடாது.

சிறந்த நட்சத்திரம் எவை?

அஸ்வினி, ரோகிணி, மிருகசீர்ஷம்,

பூசம், புனற்பூசம், மகம், உத்ராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம்,

 சுவாதி, அனுஷம், மூலம்,

திருவோணம்,அவிட்டம் சதயம், ரேவதி

நல்ல லக்கினம் எது ?

ரிஷபம், மிதுனம் கன்னி விருச்சிகம்

***

“கன்னிச் செவ்வாய் கடலையும் வற்றச் செய்யும்”

யார்  வீடு கட்ட இடமோ, வீடோ வாங்கக் கூ டாது?

செவ்வாய் 6 அல்லது 8ம் இடத்தில் இருந்தால் அவர் பெயரில் நிலம், வீடு வாங்கக் கூடாது ;

வாங்கினால் நிலைத்து நிற்காது.அப்படி வாங்க வேண்டுமானால் மனைவி, மக்கள், அண்ணன்,தம்பி,

 அக்காள் , தங்கை பெயரில், சுக்கிரன் வலுவாக உள்ள ஜாதகக்காரர் பெயரில், வாங்கலாம்.

ஏனெனில் கட்டிட காரகன் சுக்கிரன் .

அதுவும் கன்னி ராசியில் செவ்வாய் (6,8 ம் இடம்) இருந்தால், அது நல்லதல்ல; கன்னிச் செவ்வாய் கடலையும் வற்றச் செய்யும்

தொடரும் ……..

TAGS –கிரகப் பிரவேசம், கிருஹப் பிரவேசம், நல்ல நாள் ,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: