

WRITTEN BY KATTUKKUTY
Post No. 8488
Date uploaded in London – 11 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கைக்கு மாறும் பணமே ! உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே !காசேதான் கடவுளடா !
கைக்கு மாறும் பணமே !
உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே!
தேடும்போது வருவதில்லை
நீ போகும்போது சொல்வதில்லை !
காசேதான் கடவுளடா!

ஒரு காலத்தில் ஜாதகத்துடன் உள்ளே நுழைந்தவுடன் ஜோதிடரிடம் கேட்கும் கேள்வி :-
எனக்குப் புதையல் கிடைக்குமா ? 1900 ல்;
எனக்கு குதிரை ரேஸில் பணம் கிடைக்குமா? 1940 ல் ;
எனக்கு லாட்டரி பரிசு விழுமா? 1972 ல் ;
(ஏரோப்ளேன் படம் போட்ட பத்து கோடி ரூபா லாட்டரி சீட்டு )
இப்போதெல்லாம் அப்படிக் கேட்பதில்லை.
………………………………………….. லர் ஆவேனா?
…………………………………………. A ஆவேனா?
………………………………………… P ஆவேனா?
இதற்கெல்லாம் காரணமானவள் மஹாலெட்சுமி ! ராத்திரியானால் டீ .வி.யில் பிச்சுப் புடுங்கி
விடுகிறார்கள் .டாலரையும் தாயத்தையும் காட்டி!
யூ ட்யூபில் கேட்கவே வேண்டாம். பலசரக்கு அத்தனையையும் காட்டி , இப்படிச் செய்தால் பணம்
வரும் அப்படிச் செய்தால் பணம் வரும் ………………………..
தண்ணீரில் உப்பு, கவிழ்த்து வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளரில் எலுமிச்சம்பழம் ,
உப்புமேல் அகல் விளக்கு, அரிசி மேல் வைக்கப்பட்ட வலம்புரிச்ச சங்கு,
ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், இதை விட தாமிரத் தகட்டில் வித விதமான வரை படங்கள்,
,அதாவது யந்திரங்கள், மந்திரங்கள், விட்டலாச்சார்யா படத்தில் வரும் ரத்தினைக் கற்கள்
அடங்கிய மாய மோதிரங்கள், தாயத்துக்கள், கருப்பு, மஞ்சள் , ஆரஞ்சு நிறக் கயிறுகள் இத்யாதி, இத்யாதி ……………..
இதையெல்லாம் பல ஜோதிடரிடம் கேட்டுச் செய்து பார்த்துவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன்
கத்துக் குட்டி அவர்களே!
நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.
நான் என்ன சுவிஸ் பாங்கிலா பணம் போட்டு வைத்து இருக்கிறேன்?
என்னிடம் பணம் இருந்தால் உனக்கு ஏன் ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்?
உன்னிடம் ஸ்விஸ் பேங்கில் போடும் அளவு பணம் இருந்தால் நீ ஏன் இங்கே வருகிறாய்?
ஏழாவது மாடியில், முந்திரி பருப்பு சாப்பிட்டுக்கொண்டே, ஒரு பி எம் டபிள்யூ (B M W )
காரை, ட்ரைவருடன் அனுப்பி இருப்பாய் !
இந்தக் கதை எல்லாம் வேண்டாமய்யா ; பணம் வருவதற்கு வழியைச் சொல்லுங்கள் .
இந்தக் கிரகம் இப்படி இருப்பதினால், அந்தக் கிரகம் அப்படிப் போகாமல் இருந்திருந்தால்,
நீங்கள் மட்டும் இன்னும் அரை மணி நேரம் தாமதமாகப் பிறந்திருந்தால் ….
பணம் வரும், வந்திருக்கும் என்று சொல்லப் போவதில்லை.கிரகத்தைப் பற்றியோ ஜாதகத்தைப்
பற்றியோ ‘டிஸ்கஸ்’ பண்ணப் போவதில்லை
திரு. விஷ்ணுவின் மனைவி- திருமதி மகாலெட்சுமி ஒரு ஸ்தோத்திரத்தில் சொல்லி இருக்கிறாள் –
நீங்கள் எப்படி இருந்தால் உங்கள் வீட்டில் தங்கி விளையாடுவேன் என்று
எதிரில் உட்காந்திருந்தவர் துள்ளிக்குதித்து ,
சார், மதுரையில் கே ஏ எஸ் சேகர் லாட்டரி டிக்கெட் விற்கும் இடத்தில் 15 அடி
உயரத்துக்கு, நடிகை ஸ்ரீதேவி ஒரு பெரிய ‘ட்ரே’யில் ,
கட்டுக்கட்டாக பணம் கொண்டுவருவது போல் என் கண்ணுக்குத் தெரிகிறது…..
அட, முதலில் உன் வீட்டிலுள்ள மூதேவியை விரட்டு.
அப்புறம் பார்க்கலாம். யார் வருகிறார்கள் என்று.
அந்த மகா லெட்சுமி சொன்னதைச் சொல்கிறேன்.
தயவு செய்து கேளுங்கள். உங்கள் நண்பர்களிடமும் சொல்லி tamilandvedas.com
அல்லது swamiindology.blogspot.comஐப் பார்க்கச் சொல்லுங்கள்
காசேதான் கடவுளடா
அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமடா
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவு செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
காசேதான் கடவுளடா
To be continued…………………..


tags – காசேதான் கடவுளடா, கைக்கு மாறும் பணமே