
Post No. 8492
Date uploaded in London – – –12 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அருணகிரிநாதர் அருளிய க்ஷேத்திரக்கோவையில் உள்ள 29 ஸ்தலங்கள், க்ஷேத்திர வெண்பா மற்றும் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு !
ச.நாகராஜன்
31. முருகன் தலங்கள் 29
கும்பகோணமொடாரூர் எனத் தொடங்கும் க்ஷேத்திரக் கோவை திருப்புகழ் – அருணகிரிநாதர் அருளியது
29 தலங்களைக் குறிப்பாகச் சொல்லும் திருப்புகழ் இது.
1) கும்பகோணம்
2) திருவாரூர்
3) சிதம்பரம்
4) சீகாழி
5) மாயூரம்
6) சிவகாசி
7) ராமேஸ்வரம்
8) புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
9) திருப்பரங்குன்றம்
10) ஜம்புகேஸ்வரம் (திருவானைக்கா)
11) திருவாடானை
12) திருச்செந்தூர்
13) திருவேடகம்
14) பழமுதிர்ச்சோலை
15) பொதியமலை
16) பூரி
17) திருவேரகம்
18) திருவாவினன் குடி (பழனி)
19) குன்றுதோறாடல் (பல மலை ஸ்தலங்கள்)
20) திருப்புனவாயில்
21) விரிஞ்சிபுரம் (திருவிரிஞ்சை)
22) வஞ்சி (கருவூர்)
23) கம்பை மாவடி (கம்பா நதி தீரத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் உள்ள
மாமரத்தின் அடியில் எழுந்தருளியிருப்பவர்)
24) காவிரிப்பூம்பட்டினம்
25) திருச்சிராப்பள்ளி
26) வயலூர்
27) திருப்போரூர்
28) திருவாட்போக்கி
29) திருக்கண்டியூர்
மற்றும் அனைத்து தேவாலயங்களிலும் வீற்றிருக்கும் பெருமாள்
திருப்புகழ் பாடல் இதோ:-
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.

32. ஐயடிகள் காடவர் கோன் பாடிய க்ஷேத்திர வெண்பாவில் உள்ள 21 சிவ ஸ்தலங்கள்!
ஐயடிகள் காடவர் கோன் 63 நாயன்மார்களில் ஒருவர். அவர் இயற்றியுள்ள நூல் க்ஷேத்திர வெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இது சிவத்தளி வெண்பா என்றும் அழைக்கப்படுகிறது. 24 வெண்பாக்கள் குறிப்பிடும் 21 தலங்கள் :-
- இராமேஸ்வரம்
- ஒற்றியூர்
- கச்சி ஏகம்பம்
- குழித்தண்டலை (குளித்தலை)
- சாய்க்காடு
- சிராமலை
- சேனைமாகாளம்
- திருவாப்பாடி (கொள்ளிடத்தின் தென் திருவாப்பாடி)
- திருக்கோடிக்கா
- திருத்துருத்தி
- திருப்பனந்தாள்
- திருமயம்
- திருமழப்பாடி
- திருவாரூர்
- திருவையாறு
- தில்லைச்சிற்றம்பலம்
- தென்குடந்தைக் கீழ்க்கோட்டம்
- தென்னிடைவாய்
- திருநெடுங்குளம்
- மயிலை
- வளைகுளம்
33. திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தலங்கள் 14
சைவத் திருமுறையான திருவிசைப்பா, திருப்பல்லாண்டில் இடம் பெறும் சிவ ஸ்தலங்கள் 14.

இவ்விரண்டையும் பாடியவர்கள் :
திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோராவர்.
14 திருத்தலங்கள் வருமாறு :
- கோயில்
- கங்கை கொண்ட சோளேச்சுரம்
- களந்தை ஆதித்தேச்சரம்
- கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
- திருமுகத்தலை
- திரைலோக்கிய சுந்தரம்
- திருப்பூவணம்
- திருச்சாட்டியக்குடி
- தஞ்சை இராஜராஜேஸ்வரம்
- திருவிடைமருதூர்
- திருவாரூர்
- திருவீழிமலை
- திருவாவடுதுறை
- திருவிடைக்கழி
***
குறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2080 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
tags – பாரத ஸ்தலங்கள்-10
xxxx