எந்த நதியைக் கடப்பது கஷ்டம்? (Post No.8498)

THIRU THONI PURAM (SEERKAAZI)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8498

Date uploaded in London – – –13 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

சம்ஸ்கிருதப் புதிர்க் கவிதைகள் : எந்த நதியைக் கடப்பது கஷ்டம்?

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத மொழியில் ஏராளமான புதிர் ஸ்லோகங்கள் உள்ளன. நூற்றுக் கணக்கில் உள்ள இவற்றை ஒருவர் கேட்டு இன்னொருவர் பதில் சொல்ல முற்படுவது அறிவு பூர்வமான ஒரு பொழுதுபோக்காக இருந்து வந்திருக்கிறது.

இங்கு இரு புதிர்க் கவிதைகளைப் பார்ப்போம்:

எந்த நதியைக் கடப்பது கஷ்டம்?

நதியைக் கடக்க விரும்பும் ஒருவனுக்கு எந்த நதியைக் கடப்பது கடினம்?

யார் மதிக்கப்படத் தக்கவர்?

வாளை எப்படிஅழைப்பது?

புத்திசாலியே,

தூரத்தில் புகையைக் கண்டவுடன் நான் என்ன செய்ய வேண்டும்?

இதற்கான விடை ஒரே வார்த்தையில் இருக்க வேண்டும். முடியுமா?

முடியும்.

அனுமாதாஸே என்பது தான் விடை!

நதியைக் கடப்பது கடினம்; எப்போது படகு (நு) இல்லாவிடில்! (அநு – படகு இல்லாவிடில்!

MAHADEVA TEMPLE, ALUVA, KERALA
SABARI MALAI, KERALA

மதிக்கப்பட வேண்டியவர் தாய் தானே (மாதா)

வாளை ஓ,வாளே (ஆ,ஸே) என்று தான் அழைக்க வேண்டும் (ஸே – வாள்)

புகையைக் கண்டவுடன் என்ன செய்ய வேண்டும்?

புகை தீயை வளர்ப்பதைக் குறிப்பதால் காலை நேரம் என்று உய்த்துணர வேண்டும்.

(ஸ்லோகம் இது தான்:-

கீத்ருக் தோயம் துஸ்தரம் ஸ்யாத் திதீர்ஷோ:

    கா பூஜ்யாஸ்மின் கட்கமாமந்த்ரஸ்வ |

த்ருஷ்ட்வா தூமம் தூரதோ மானவிக்ஞா:

      கிம் கர்தாஸ்மி ப்ராதரேவாஷ்ரயாஷம் ||

Which water (river) is difficult to ford when one wishes to cross? (a-nu: that which has no boat)

Who deserves to be respected?  (mata : the mother)

Address the Sword! (ase : O, Sword)

Oh!, intelligent people, having seen smoke afar what shall I do? (anumatase – you will infer fire in the morning itself)

(Translation by A.A.R.)        

*

இன்னொரு புதிர் ஸ்லோகம்:

 தமக்கு இஷ்டப்பட்டபடி விளையாட விழையும் மீன்களுக்கு எந்த இடம் எதனால் பயனளிக்காது?

மற்றவர்களின் நல்ல குணங்களால் எந்த மனிதன் மிகுந்த சந்தோஷம் அடைகிறான்?

விடை ஒரே வார்த்தையில் இருக்க வேண்டும்!

விடை இது தான் : வி-மத்சராஹ்!

முதல் கேள்விக்கு பதில் : வி –  மத் – சராஹ்: – மீன் கொத்திப் பறவைகள் நிறைந்த ஏரி!

இரண்டாம் கேள்விக்கு பதில் வி – மத்சராஹ் – பொறாமையிலிருந்து விடுபட்டவன்!

ஸ்லோகம் இது தான்:

கீத்ருக் கிம் ஸ்யான்ன மத்ஸ்யானாம் ஹிதம் ஸ்வேச்சாவிஹாரிணாம் |

குணை: பரேஷாமத்யர்தே மோததே கீத்ருஷ: புமான் ||

What and how should it not be beneficial for the fishes when they want to sport as the please? (vi-mat-sarah – a lake full of aquatic birds)

What kind of person rejoices greatly by the good qualities of other people?

(vi-matsarah – one free from envy) 

(Translation by A.A.R.)        

tags – எந்த நதி, சம்ஸ்கிருதப் புதிர்

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: