
Post No. 8500
Date uploaded in London – 13 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராகுவும் கேதுவும், வெங்காயமும் உள்ளிபூண்டும்!
KATTUKKUTY

என்னடா இது தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கே???
படிக்கலாமா வேண்டாமா………
தயவுசெய்து கதைக்கு வாங்கோ வாங்கோன்னு அழைக்கிறேன்
என் குடும்ப நண்பர் ஒருவர் என்னையும் என மனைவியையும் சாப்பிட கூப்பிட்டிருந்தார் ரொம்ப ஜோக்காகவும்பாயிண்ட்ஆகவும்
பேசக்கூடியவர்
அவர் வீட்டிற்கு போனவுடன் காப்பி முறுக்கு கொடுத்து உபசாரம்
செய்துவிட்டு, சிரித்துக் கொண்டே சொன்னார். இன்றைக்கு
உங்களுக்காக ஸ்பெஷல், ராகு சாம்பார், கேது ரசம் என்றாரே
பார்க்கலாம்……..எனக்கும் என மனைவிக்கும் தூக்கி வாரிபோட்டது,
உடனே நானும் என் மனைவியும் எழுந்து விட்டோம்.
என்னடா இது சைனாக்காரன் மாதிரி……..எங்களுக்கு கொரோனா
வரவழைத்து திட்டமிட்டு கொலை முயற்சிசிக்கிறாரோ???
சரி இ.பி.கோ செக்ஷன் 345 படி இவர்மேல்கேஸ் திரு பராசரனிடம்
சொல்லி (இவர்தான ராமர் கோவிலுக்காக வாதாடி ஜெயித்து
கொடுத்தவர்)பு க் செய்ய வேண்டியது தான்……….
நானும் என் மனைவியும் நாங்கள் “ப்யூர் வெஜிடேரியன்கள்.
நாங்கள் அமெரிக்கா போன போதிலும், லண்டன் போன போதிலும்
வெஜ் நூடில்ஸ்ஸும் வெஜ் பரகரும் தான் சாப்பிட்டோம்”
(நாங்கள் அமெரிக்கா, லண்டன் போனதெல்லாம் எப்போ சொல்லி
பீத்திக்கறது????)
அவர் சிரித்துக். கொண்டேஉட்காரச் சொன்னார் இதுவும் வெஜிடேரியன்தான்
இந்த “உண்மைக் கதையை “கேளுங்கள்……
“உண்மை கதை “என்றவுடன் எனக்கு பழைய ஞாபகம் வந்தது.
சுமார் 60 வருடங்களுக்குமுன் “தினமணி கதிர்” – ஒரு வார இதழ்
பத்திரிக்கையில் புஷ்பா தங்கதுரை என்ற எழுத்தாளர் “உண்மை கதை” என்று பெண்களைப்பற்றி விதம் விதமாக கதை
எழுதுவார். திரு ஜெயராஜ் அவர்களும் அதற்குத் “தகுந்த மாதிரி”
விதம் விதமாக படம் போடுவார் !!!! ஆனால் அதே பத்திரிக்கை
முதல் பக்கத்தில் அடியில் இந்த இதழில் வரும் எல்லாம் “முழு கற்பனையே யாரையும் குறிப்பதல்ல” என்று இருக்கும்……
நாங்களும் காசு கொடுத்து வாங்கி அந்த “உண்மைக் கதைகளை”
படித்தோம்!!!!

சரி , இந்த உண்மைக கதைக்கு வருவோம்
நண்பர் பேச ஆரம்பித்தார். சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ego clash……யார் பெரியவர்
என்று….அடிதடி சண்டை……ஆளும்கட்சி எதிர்கட்சி மாதிரி.
பொத் பொத் என்று நிறையப்பேர் செத்து விழுந்து கொண்டிருந்தார்கள்.
தேவர்கள் குரு “குருபகவானும்”, அசுரர் குரு சுக்கிர பகவானும்
பரமசிவனிடம் பஞ்சாயத்திற்குப் போனார்கள். அவர் பார்த்தார்
ஏற்கனவே ஒரு அசுரனுக்கு (பத்மாசரனுக்கு) வரம் கொடுத்து
நான் பட்ட பாடு …….அப்புறம் மகாவிஷ்ணு மோகினி அவதாரம்
எடுத்து நடிகை லட்சுமி மாதிரி டான்ஸ் ஆடி என்னைக் காப்பாற்றினார்.
“அப்பா, குருமார்களே!! இது “கிரிமினல் கேஸ்”
நான் சாதாரண சிவில்கேஸ் வக்கீல். இந்த மாதிரி கேஸ்களை
“டீல்”பண்ணக்கூடிய ஒரே கடவுள் மிஸடர் மகாவஷ்ணு தான்.
அவரிடம் போங்கள்” என்று “மலையேறி “விட்டார்
அப்புறம் நடந்தது தான் உங்களுக்குத்ந்தெரியுமே……மந்தார மலையை மத்தாகவும்,வாசுகியை பாம்பாகவும் பாற்கடலை கடைந்தனர்,
மகாலடசுமி முதல்ஆல கால விஷம் வரை வந்தன. தங்களுக்கள்ளாகவே
“டிஸ்ட்ரிப்யூட்” செய்து கொண்டனர் தேவர்கள்.
எதிர் கட்சிகள்,” நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து
கொள்ளுங்கள் எங்களிடம் t.v இருக்கிறது, பத்ரிகைகள்
உள்ளன,,,,,,நீங்கள்ஆட்சியைக் கலைத்தே ஆக வேண்டும்”
அதுதான் எங்களுக்கு அமிர்தம்” என்றன!
சரி கதைக்கு வருவோம்..

அமிர்தம் வந்தவுடன் டிஸ்ட்ரிப்யூஷனில் தகராறு…….
பார்த்தார் மகாவிஷ்ணு. இதை வேறு விதமாகத் தான்
“டீல்” செய்யவேண்டும், என எடுத்தார் மோகினி அவதாரம்.
அசுரர்களுக்கெல்லாம், சுரா பானம்( foreign சரக்கு)
வாங்கிக் கொடுத்து விட்டு, அமிர்தத்தைக் கரண்டியால்
கொடுக்க ஆரம்பித்தார்
சுவர் பானு என்ற அசுரன் மட்டும், சரக்கு சரியில்லை, சைடு
டிஷ் சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்தான். தேவர்கள்
ஒவ்வொருவராக அமிர்தத்தை வாங்கிக் கொண்டிருக்கும்
போது சுவர்பானுவும் குறுக்கே நுழைந்து கையை நீட்டினான்.
சூரியனும் சந்திரனும் இதைப்பார்த்து “இதோ தாலிபான் பாக்கிஸ்தான் உளவாளி“ என்று சத்தம் போட மகாவிஷ்ணு தனது
சக்ராயுதத்தால் சுவர்பானுவை இரண்டு துண்டாக வெட்டினார்.
தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.
இருவரும் மகாவிஷ்ணு காலில் விழுந்து
மன்னிக்க வேண்டினார்கள். நீங்கள் அமிர்தத்தை தொட்டதினால்
உங்களுக்கு கிரக பதவி கொடுக்கிறேன். ஆனால் இனிமேல்
இப்படியெல்லாம் தப்பு பண்ணக்கூடாது என்று கரண்டியினால்
ராகு, கேது தலையில் தட்டினார். கடைசியாக அவர்கள்
வாயிலிருந்த விஷம் ராகுவின் வாயிலிருந்து வெங்காயமாகவும்,
கேதுவின் வாயிலிருந்து உள்ளிப்பூண்டாகவும் விழுந்தது,
South east asia வில்!!!!! (சந்தேகம் இருந்தால் google ல்
செர்ச் செய்து பார்த்துக் கொள்ளவும்)
ஆகையினால் தான் சொன்னேன், இன்று என் வீட்டில் “வெங்காய
சாம்பாரும், உள்ளிப்பூண்டு ரசமும்”!!!!! என்று சொல்லி சிரித்தார்.
நாங்களும் விழுந்து விழுந்து சிரித்து விட்டு பொரித்த அப்பளாம்
ஜவ்வரிசி பாயசத்துடன் சாப்பிட்டு முடித்தோம்! இனிதே முடிந்தது “உண்மைக கதையும்”விருந்தும்!!!!!
இப்பொது நான் சில சமயம் என் மனைவிடம் இன்று “ராகு பஜ்ஜி,
கேது சட்னி “ என்றே சொல்கிறேன் !!!!!
ரொம்ப ஆசாரமாக இருப்பவர்கள் ராகு கேதுவுக்கு பயந்து கொண்டு
இதை சாப்பிட மாட்டார்கள்!
ஆனால் நான் சாப்பிடுவேன் ஏனெனில் எனக்கு கடக ராகு மகர கேது…..ஒண்ணும் பண்ணாது……..இது வரை கடவுள் கிருபையினால் ஒன்றும் ஆகவில்லை!!!!
அடுத்த கட்டுரையில் ராகு கேது எப்படி இருந்தால் நலம் செய்வார் என்பதைப் பற்றியும் அவர் கூடச் சேர்ந்த குளிகன் கத்தரிக்காயையும் பற்றியும்
சொல்வேன்.
நன்றி ……வணக்கம்

tags –ராகு, கேது, வெங்காயம், உள்ளிபூண்டு,