

WRITTEN BY KATTUKKUTY
Post No. 8506
Date uploaded in London – 14 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீங்கள் ஜனாதிபதி ஆகவேண்டுமா?!
—KATTUKKUTY—
எல்லோருக்கும் ஆசைதான்……ஜனாதிபதியாக……இந்தியாவின்
முதல் குடிமகனாக ஆக!!!!
உடனேஓடிப்போய் உங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு
வருவீர்களே……..எனக்குத் தெரியும்…….
கொஞ்சமாவது ‘மு’ னா இருக்கா????? தப்பா நினச்சுக்காதீங்க
கொஞ்சமாவது முன்யோசனை இருக்கா என்றுதான் கேட்டேன்
உங்களுக்கு அந்த யோகம் இருந்தா இங்கே ஏனையா
Tamilandvedas.com ஐ பார்த்துகொண்டிருப்பீர்கள்????
டெல்லியில் அல்லவா இருப்பீர்கள் ????
( திரு .சாமிநாதன் அவர்கள் மன்னிக்க வேண்டும்)
சரி, விட்டுத்தள்ளுங்கள்……உங்கள் பேரன் பேத்தி ஜாதகங்களைக்
கொண்டு வாருங்கள் அவரகளுக்காவது இந்த யோகம் இருக்கான்னு பாப்போம்!!!!
ஜனாதிபதியாக 3 கண்டிஷன்தான்……

1. உங்களுக்கு 35 வயது முடிந்திருக்க வேண்டும்
2. இந்தியாவில் எங்காவது உங்களுக்கு ஓட்டுரிமை இருக்க வேண்டும்.
3. ???
சரி, ஜாதகத்திற்கு வருவோம்
பத்தாமிடத்து அதிபதி 4 ம் இடத்தில் நிற்க
நான்காம் இடத்து அதிபதி 10-ல் நிற்க
லக்னாதிபதி உச்சம் பெற்றால்
சாப யோகம் என்ற ஜனாதிபதி யோகமாம்.
ஓகே…… அடுத்த காம்பினேஷனுக்கு வருவோம்
லகனாதிபதி 10 லும், 10 க்குடையவன் லக்னத்திலும்
2- ம் இடத்தில் குருவும் சந்திரனும் கூடி லக்னாதிபதியை
குரு பார்க்க வேண்டும் (வேந்தன் யோகம்)
ஒகே, மூன்றாவது காம்பினேஷனுக்கு வருவோம்.
லக்னத்தில் சனி, 4- ம் இடத்தில் சந்திரன், 7- ம் இடத்தில்
செவ்வாய், 10- ம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன் கூடினால்
வேந்தன் யோகமாம்.
சரி முதல் காம்பினேஷனுக்கு வருவோம்.
10- ம் இடத்ததிபதி 4- இடத்தில் என்பது 9 பாதங்களைக்கொண்டது.
ஒவ்வொரு பாதங்களிலிருந்தும் மற்ற 9 பாதங்களுக்கும்
எண்ணிப் பார்த்தால், 729 காம்பினேஷன் வரும்.
சரி 2 இடத்திற்கும் சேர்த்து 1,458 காம்பினேஷன்கள் வரும்!!!!
அடுத்தாற் போல் லக்னாதிபதி உச்சம் பெற வேண்டும்
அப்போது அங்குள்ள 9 பாதங்களை கணக்கிட்டால்
13,062 என்ற தொகை வரும்.

ஜாதகத்தை ஆகா, 10 க்குடையோன் 4- ல், 4- க்கு உடையோன்
10- ல் என குதிக்கக் கூடாது ………..
எந்த பாதம் எந்த பாதத்துடன் சேர்ந்தால் பலம் பெருகிறது
பலன் கிடைக்கிறது எனப் பார்த்தால்தான் யோகம் வரும் ,!!!!
புரிகிறதா ????
இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான் நமது முன்னோர்கள்
ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறார்கள்.
கிரகம் இருக்கும் ராசியை, 2 ஆக பிரித்து கோட்கூறு எனவும்
3 ஆக பிரித்து திரேக்காணம் எனவும், 4 ஆக பிரித்து திரிசம்சம்
எனவும், 7 ஆக பிரித்து சப்தமாம்சம் எனவும், 9 ஆக பிரித்து
நவாம்சம் எனவும், 10 ஆக பிரித்து தசாம்சம் எனவும், 12 ஆக பிரித்து
துவதாம்சம் எனவும் 16 அக பிரித்து ஷோடசம்சம் எனவும்
60 கூறாக பிரித்து ஷஷ்டியாம்சம் என தச வர்க்கங்களாகப்
பிரித்தனர்!!!!!
இந்த தசவர்கங்களில் ஒவ்வொரு கிரகமும் உச்சம்,
மூலத்திரிகோணம், ஆடசி, வர்கோத்தமம், நட்பு ஆகிய
சுப அம்சங்கள் இருந்தால் ஒரு சுப வர்க்கம் எனக் கூறுகிறோம்
2-சுப வர்க்கம் இருந்தால், பாரிசாதாங்கிசம்………அதாவது
நற்குணம், தனம், சுகம், பெருமை கிடைக்கும்
3- சுப வர்க்கம் இருந்தால், உத்தமாங்கிசம் அதாவது அந்த ஜாதகர்
நல்ஒழுக்கம், நிபுணத்துவம் பெற்றவர்
4 சுப வர்க்கம் கொபுரம்சம் இருந்தால் பூமி, வீடு, வாகனம்,
தனம், நல்ல நோக்கமும் உடையவர்
சிங்கனங்கிசம் இருந்தால் செல்வம், அதிகாரம், ராஜ சன்மானம்
உடையவராவார்
பாராவதாங்கிசம் இருந்தால், வித்தை , செல்வம், கீர்த்தி உடையவராவார்
தேவலோகாங்கிசம் இருந்தால் சைன்யத்திற்கு அதிபதி,
கொடை வள்ளலாக இருப்பார்


வைசேஷாங்கிசம் இருந்தால் லோகதிபதியாவார்
ஐராவதாங்கிசம் இருந்தால் அஷ்ட ஐஸ்வர்யம் உடையவராவார்
தேவேந்திராங்கிசம் இருந்தால் இந்திரனைப் போல் வாழ்வார்
சரி, எல்லா கணக்கும் போட்டு வைசேஷேஷாங்கிசமோ
அதற்கு மேல் ஐராவதாங்கிசமோ, தேவேந்திராங்கசமோ
இருந்தால் பேரனோ, பேத்தியோ தான் ஐனாதிபதி !!!!
சந்தோஷத்துடன் செல்லுங்கள்!!!!
உங்கள் போட்டோவும் பேப்பரில் வரும்!!!! ***



TAGS — ஜனாதிபதி , ஜாதகம்