வெள்ளை வேண்டாம்’- வள்ளுவன், கம்பன் போர்க்கொடி (Post No.8526)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8526

Date uploaded in London – 17 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வெள்ளை என்றால் முட்டாள்தனம்; வெள்ளையர் என்றால் முட்டாள் பயல்கள். வள்ளுவனும் கம்பனும் ‘வெள்ளை மர்தாபாத் ‘ என்று உச்ச ஸ்தாயியில் பாடுகின்றனர் . திருவள்ளுவ ஐயங்காருக்கு ரொம்ப பிடித்தது விஷ்ணுதான் ; ரொம்ப பிடிக்காதது நாஸ்திகம் பேசும் சமண பவுத்த , சாருவாக மதத்தினர்தான்

புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் இவர்களைப் ‘பேய்கள்’ (ALGOL) என்றும் வெள்ளை என்றும் திட்டுகிறார்.

இவர் ‘ஓபனாக’ வாமனாவதாரம் , கிருஷ்ணாவதாரத்தைப் புகழ்வதை வள்ளுவர் ஐயரா ஐயங்காரா? என்ற தலைப்பில், எடுத்துக் காட்டினேன் .

நாஸ்தீக வாதிகளை ‘பேய்கள்’ என்று திட்டுவதையும் ஆல்கால் நட்சத்திரத்தை இவர் அலகை என்ற பேய் நட்சத்திரத்தின் பெயரால் திட்டுவதையும் எழுதி இருந்தேன் (காண்க–  திருக்குறளில் ஒரு பேய் நட்சத்திரம் )

இப்போது வேறு சில குறள்களைப் பார்ப்போம். வெள்ளை ஆடை உடுத்திய சமணர்களை ஸ்வேதாம்பரர் என்பர். ஸ்வேத என்றால் வெள்ளை. ஆங்கிலச் சொல்லான ஒயிட்  (S+white= Swehta) இதிலிருந்து வந்ததே இதையே நெடிலாக மாற்றி நீட்டித்து ஸ்வேதா என்று சொன்னால் அறிவுத் தெய்வமான சரஸ்வதி என்று பொருள்படும்.

வெள்ளை ஆடை உடுத்த ஸ்வேதாம்பர சமணர்களைத் தாக்கும் வள்ளுவர்,

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னுஞ் செருக்கு – குறள் 844 என்று பாடுகிறார் .

இதன் பொருள் என்ன ?

முட்டாள்தனம் என்பது என்னவென்றால் முட்டாள்கள் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வதாகும் .

இதை ஆங்கிலத்தில் நாலாவது வகை மனிதர் என்று சொல்லும் ஒரு பழமொழி இதோ :-

He who knows not and he knows not, he is simple teach him.

He who knows and knows not that he knows, he is asleep, awaken him.

He who knows and knows that he knows, he is wise, follow him.

“He who knows not, knows not, he knows not, he is a fool shun him.

கம்பனும் வெள்ளையரை – வெள்ளையைச் சாடுகிறான்.

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோய்

வள்ளியர் ஆகில் வழங்குதல் அல்லால்

எள்ளுவ என்சில இந்த உயிரேனும்

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்

-பால காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள்

நீ வெள்ளியாக — அறியாமை உடையவனாக — இருப்பதால் இப்படிக்கூறினாய் .உயர்ந்தவர்கள் எதைக்கேட்டாலும் கொடுப்பர். கொடுக்கக்கூடாது என்று விலக்கப்பட்டது ஏதேனும் உண்டா ? கிடையாது. இனிய உயிரையும் பிச்சையாகப் பெறுவது தீயது; உயிரையும் தானமாக ஈவது  சிறந்தது (வெள்ளி நிறம் இங்கும் அறியாமையைக் குறிக்கும்)

(இந்தப் பாடலில் ‘கொடுப்பது நல்லது; அதை வாங்குவது தீயது’ என்று முரண்பட இருப்பதாக நினைக்கலாம் ; அது தவறு  ; அவ்வையாரும் கூட , ஆத்திச் சூடியில்,   ஈவது விலக்கேல்  என்று நாலாவது வரியில் சொல்லிவிட்டு ஏற்பது இகழ்ச்சி என்று எட்டாவது வரியில் சொல்கிறார். இது வெவ்வேறு சூழ்நிலையில் பொருந்தும் வாசகம் ஆகும்)

****

நிர்வாண சாமியார் மீது வள்ளுவன் தாக்கு !

சமணர்களின் வெள்ளாடை (ஸ்வேதாம்பரர்) சாமியார்களைத் தாக்கிய வள்ளுவன் நிர்வாண சமண சன்யாசிகளையும் விடவில்லை . திசையையே – அதாவது வானத்தையே — ஆடையாகக் கொண்ட நிர்வாண சாமியார்களை திக் அம்பரர் = திகம்பரர் என்பர்

அவர்களை வள்ளுவன் கிண்டல் செய்யும் குறள்  இதோ —

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா  வழி -குறள் 846

பொருள் –  தம்முடைய குற்றத்தை நீக்காது , உடம்பை ஆடையால் மறைத்து வைக்க நினைப்பது புல்லறிவு – அதாவது முட்டாள்தனம் ; இப்படி அவர் பாடியதற்கு ,அவர் மனக்கண்களில் தோன்றியது, திகம்பர சமணர்களாகும் .

அதுமட்டும் அல்ல உலகம் எல்லாம் ‘உண்’டு என்று சொல்லும் கடவுளை ‘இல்லை’ என்று சொல்லுவான் பேய்ப்பயல் என்பதை ‘அலகை/ பேய் ‘என்று சொல்லிச் சாடுகிறான். புத்தரும் கடவுள் பற்றியே எதுவும்  சொல்லாமல் எட்டு குணங்களை மட்டும் வலியுறுத்துவதால் அவரைத் தாக்கும் விதத்தில் பத்து ‘கடவுள் வாழ்த்துப் பாட்டுப் பாடி’ கடவுள் உண்டு என்கிறார். 


புல்லறிவாண்மை அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் சேர்ந்து படிப்போருக்கு இது தெள்ளிதின் விளங்கும்.

OLD ARTICLES

திருக்குறளில் பேய் … – Tamil and Vedas

tamilandvedas.com › 2017/08/12

  1.  

12 Aug 2017 – திருக்குறளில் பேய் நட்சத்திரம்ஒரு அதிசயத் தகவல்! (Post No.4151). Algol is a binary star. Written by London Swaminathan. Date: 12 August 2017. Time uploaded in London- …

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா …

tamilandvedas.com › tag › ஐயரா…

– 

17 Aug 2016 – Tagged with ஐயரா, ஐயங்காரா … தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. அது மட்டுமல்ல. அந்தப் …

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா …

swamiindology.blogspot.com › 2016/08 › post-no3068

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015. –Subham—. Posted 16th August 2016 by Swaminathan. Labels: ஐயங்காரா? ஐயரா திருக்குறளில் இந்து …

‘வெள்ளை, வெள்ளி, வள்ளுவன், கம்பன், சமண

–SUBHAM–

Leave a comment

1 Comment

  1. C Sugumar Csugumar

     /  August 19, 2020

    பரசுராமரும் பலராமரும்கடவுளின் அவதாரங்கள் என்பது நியாயமாகப்படவில்லை.ஸ்ரீகிருஷ்ணனா் வாழ்ந்த காலத்தில் அவரும் வாழ்ந்திருக்கின்றாா். மேலும் பரசுராமரிடம் நியாயம் இல்லை.வில்வித்தையை சத்திரியனுக்கு கற்றுக் கொடுக்க மாட்டேன் என்பதும் பிறாமணர்களுக்கு கற்றுக் கொடுப்பேன் என்பதும் முட்டாள்தனமாக உள்ளதே? விளக்கம் இருந்தால் பதிவிட பணிந்து வேண்டுகிறேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: