
Post No. 8553
Date uploaded in London – 22 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
BY Kattukutty
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்,
நீ ஒரு தனிப் பிறவி, அம்மம்மா வேண்டேன் இனி நான் மறு பிறவி….
வாங்க சார் வாங்க பார்த்து கொஞ்ச நாளாச்சு ………
உங்களைக் காணவே காணோம்????
வந்தவர்: “ஸ்லோகம் சொல்லிவிட்டு தான் வாழ்க்கையை
ஆரம்பிக்கிறேன் ஆனாலும் என் வாழ்வு இப்படி சோகமாகிவிட்டதே…….”
“என்னப்பா ஸ்லோகம் சொல்கிறாய்???”
என் அபிப்ராயம் தவறான முறையில் மந்திரங்களை உச்சரித்தால்
தவறான பலன் கிடைக்கும். சமஸ்கிருத வார்த்தைகளுக்கு
அர்த்தம் பார்க்க கூடாது. ஒலி தான் முக்கியம்
அவர் பாடினார் “ஒரே முறை தான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப் பிறவி” எனப் பாடி விட்டு தேவியைப் பார்த்து
அம்மம்மா வேண்டேன் இனி நான் மறு பிறவி….”
“ஏய் இது சினிமா பாட்டல்லவா….ஸ்லோகமே கிடையாதே…..”
“நான் பாடிய முதல் வரி என மனைவியைப் பார்த்து
இரண்டாவது வரி கடவுள் தேவியை பார்த்து” என்றாரே பார்க்கலாம்
உடனே போனை எடுத்தேன். அவனை விட்டு அவன் மனைவி நம்பருக்கு அடிக்கச்செய்தேன்.
நான் கத்துக்குட்டி பேசறேன். “உன் புருஷன் இங்கே வந்திருக்கிறான்
என்னன்னவோ சொல்றான்………”
அங்கேயிருந்தது வந்தது ஒரு பாட்டு……

“அகம்பாவம் கொண்ட பதியால்
படுத்தேன் நான் படுக்கையில் விதியால்
நம்பிடச் செய்தார் மோசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்!!”
பிறகு தான் நான் புரிந்து கொண்டேன் திருமணம் ஆன நாள்
முதல், தினசரி சண்டையும் சச்சரவுமாய் நடக்கிறதாம்……..
உடனே நான் சொன்னேன், “ஏம்பா நீ பாட வேண்டியதுதானே
வாடி என் தமிழ் செல்வி
ஐ டேக் யூ டு நல்லி நல்லி
நீ போகாதே தள்ளி தள்ளி.”
அதுக்கு அவள் பாடுகிறாள்
“போடா நீ சல்லி சல்லி
வந்தா அடிப்பேன் சொல்லி சொல்லி”
புரிந்து கொண்டேன் நான் – குழந்தைகள் சண்டையிலும்
தம்பதிகள் சண்டையிலும் குறுக்கிடக் கூடாது என்று……..
சரி ,விஷயத்திற்கு வருவோம்.கணவன் மனைவிக்குள்ளே
ஒற்றுமை இல்லாததற்கு யார் காரணம்????
செக்ஸ் காரணமாயிருக்கலாம், மாமியார், மருமகள் கருத்து
வேறுபாடாயிருக்கலாம், மைத்துனன், மைத்துனி நடத்தை,
நோய், வாய் நாற்றம், குடும்ப பழக்க வழக்கங்கள், இது மாதிரி
11 சோஷியல் காரணங்களைப்பற்றி நான் இங்கே புத்தகம்
எழுதப்போவதில்லை.
ஜாதக ரீதியாக என்னன்ன பொருத்தங்கள் இல்லை, முக்கியமாக ராசிப் பொருத்தம்
என்பதைப் பற்றியே தெரிந்ததை எழுதப்போகிறேன்
முதலாவதாக கருத்து வேறுபாடு கொண்ட ஆண்கள் ராசிக்காரர்கள்
பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனப் பார்க்கலாமா???

மேஷ ராசி ஆண்கள் ( நானே ராஜா டைப்)
நான் நான் தான், நீ தான், கொஞ்சம் அடாவடி டைப்….தன் விஷயத்தில் தன் மனைவி
தலையிடக் கூடாது.
இல்லா வீட்டில்
மகா பாரதம்தான்……..
என் அட்வைஸ் – கொஞ்சம் பொறுத்துப் போங்க பிரதர்…….
அவள் வேறு யாரோ இல்லை உங்களை நம்பி வந்த பொண்ணு
ரிஷப ராசி ஆண்கள் (பார்த்தால்பசு பாய்ந்தால் புலி)
வானம் பார்த்த பூமியின் மழை என விழுந்தாயே என பாடி விட்டு
திடீரென்று M G R மாதிரி கத்தியை எடுத்து விடுவார்கள்….
பெண்கள் இவரிடம் மாறி பேசி விடக்கூடாது. விளையாட்டுக்குக் கூட பொய் சொல்லக்
கூடாது.
அட்ஜஸ்ட் பண்ணுங்க ஆணுங்களே பொய் சொல்வது சில பெண்களின் பிறவிக் குணம்……..
ok யா???

மிதுன ராசி ஆண்களே( நான் பேச நனைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்) இவர்களுக்கு
சரியான ஜோடி கிடைத்து விட்டால்
ஜாலிலோ ஜிம்கானாப் பாடி, சந்தோஷமாக காலம் கடத்துவர்
அதுவும்ம் பெண்கள் கொஞ்சம் லோ ஐ. க் யூ என்றால் கொண்டாட்டம்தான்……கொஞ்சம்
செக்ஸ் விரும்பி………
கடக ராசி ஆண்களே (வெற்றி வீரன்) பொம்பளைங்களெல்லம்
இவர்களுக்கு ஜுஜுபி,………இவளுகள எப்புடி மடக்கணும்ன்னு
எனக்குத் தெரியும்ன்னு மார்தட்ட க் கூடியவர்கள்.
எல்லாம் நீ தான் என்று பெண்கள் சொல்லி விட்டால் சரண்டர் தான்
ஆண்கள்…….
சிம்ம ராசி ஆண்களே (ஏ சிங்கங்களே) தற்பெருமை கொண்டவர்களே
பெண்கள் எப்போதும் விட்டு கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள்……அப்படி பெண்கள்
விட்டுக் கொடுத்தால் சொர்க்கம் இருவருக்கும். இல்லையென்றால் நரகம் இருவருக்கும்.
நீங்கள் ரொம்ப அட்ஜஸ்டா போக கத்துக்கணும் பிரதர்…..
கன்னி ராசி ஆண்களே நீங்க ரொம்ப ரொம்ப ஸாப்ட்….
என் பொண்டட்டி மாதிரி உண்டா என்று எப்போதும் சொல்வீர்கள்
சண்டைக்கு வந்தாலும் வெள்ளை கொடிதான் கையில….

துலாம் ராசி ஆண்களே( மனைவி சொல்லே மந்திரம்)
நீங்க ரொம்ப அசடு வழியக்கூடாது. பெண்களுக்கு அதிக
சுதந்திரம் கொடுப்பீர்கள். ஒங்க வீட்ல எப்போதும் சண்டையே
வராது.
விருச்சிக ராசி ஆண்களே கஞ்சி போட்ட சட்டை மாதிரி எப்போதும் விறைப்பா நிறகாதீங்க
உங்களை மனைவிகள் விழுந்து விழுந்து உபசரிக்க வேண்டும் என நினைக்கறீங்க
பொண்ணுங்களை கண்டுக்கவே மாட்டங்கறீங்களே
இது ஞாயமா ???
தனுசு ராசி ஆண்களே ஜேம்ஸ் பாண்டுகளே நீங்க ரொம்ப
உஷார் பாரட்டிங்க பெண்களெல்லாம் விளையாட்டு
பொம்மைகள். இஷ்டமிருந்தால் தலையில் தூக்கி வைத்து
கொண்டாவீர்கள். இல்லேன்ன கடுகு தாளிக்கிறமாதிரி……
மகர ராசி ஆண்களே திகம்பர சாமியார்களே நீங்களெல்லாம்
சன்யாசி குரூப்….இவர்களை பெண்கள் சண்டை போட்டுதான்
எதையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
கும்ப ராசி ஆண்களே நீங்கள் தெய்வங்கள். ஏனெனில்
உங்கள் மனைவிகளை angel ஆக நினைத்துப் போற்றுகிறீர்கள்
உண்மையை சொல்லப்போனால் நீங்க சரியான ஜால்ரா பார்ட்டி!!!
மீன ராசி ஆண்களே நீங்க முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்..
எல்லாரும் தங்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பீர்கள்.
ஆனால் தனித்து வாழ நினைப்பீர்கள்????
இது என்னையா நியாயம்?.???

tags – ஒரே முறைதான், உன்னோடு,ராசிக்காரர்,
to be continued………………………………………..